Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
2014 ஆம் ஆண்டு ஆஸ்கரில் நடைபெற்ற சில நகைச்சுவையான மற்றும் சிறப்பான தருணங்கள்!!!
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற மிகவும் உயரிய விருதான ஆஸ்கர் விருது விழாவானது நடைபெற்றது. இது 56 ஆவது ஆஸ்கர் விருது விழா. இந்த விழாவிற்கு பல ஹாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர். அதில் சிலர் நல்ல அழகான உடையை அணிந்தும், சிலர் முகத்தை சுளிக்குமாறான உடையை அணிந்தும் வந்திருந்தனர்.
2013 ஆஸ்கரில் நடந்த சில சிறந்த தருணங்கள்!!!
அதுமட்டுமல்லாமல் அந்த விழாவில் ஒருசில நகைச்சுவையான மற்றும் சிறப்பான தருணங்கள் நடைபெற்றது. அதிலும் அவற்றைப் பார்த்தால், சிறுபிள்ளைத்தனமாக இருக்கும். ஏனெனில் எவ்வளவு தான் மிகப்பெரிய பிரபலமாக இருந்தாலும், போட்டோ எடுக்கும் போது சிறு குழந்தை போன்று பல போஸ்களை சில பிரபலங்கள் கொடுத்துள்ளனர்.
2014 ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது விழாவிற்கு மிகவும் மோசமாக உடையணிந்து வந்த பிரபலங்கள்!!!
சரி, இப்போது 2014 ஆம் ஆண்டு ஆஸ்கரில் நடைபெற்ற சில நகைச்சுவையான மற்றும் சிறப்பான தருணங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

ஜெனிபர் தடுக்கி விழுவது
கடந்த 2013 ஆம் ஆண்டு கூட, ஜெனிபர் லாரன்ஸ் விருதைப் பெற படி ஏறும் போது தடுக்கி விழுந்தார். அதேப் போன்று இந்த வருடம் தடுக்கி விழ போகும் போது, அங்குள்ளோர் அவரைப் பிடித்துவிட்டனர்.

பெர்முடா பேண்ட்
யாராவது விருது விழாவிற்கு முழங்கால் அளவுள்ள பெர்முடா பேண்ட் அணிந்து வருவார்களா? ஆனால் பரேல் பெர்முடா பேண்ட் அணிந்து வந்திருந்தார்.

ஜெனிபருடன் அயர்லாந்து பால்ட்வின்
இது அயர்லாந்து பால்ட்வின் ஆஸ்கரின் போது ஜெனிபருடன் சேர்ந்து போட்டோவிற்கு போஸ் கொடுத்தார். இவர் இதுப்போன்று பலருடன் சேர்ந்து தானாக முன்வந்து போட்டோவிற்கு போஸ் கொடுத்தார்.

ஜாரெட்டுடன் அயர்லாந்து பால்ட்வின்
இது மீண்டும் அயர்லாந்து பால்ட்வின் ஜாரெட்டுடன் சேர்ந்து போட்டோவிற்கு போஸ் கொடுத்த போது எடுத்தது.

லிசாவுடன் அயர்லாந்து பால்ட்வின்
இது அயர்லாந்து பால்ட்வின் லிசாவுடன் சேர்ந்து கொடுத்த போஸ். இதில் ஒரு நகைச்சுவை என்றால், அது லிசா போட்டோவிற்கு கொடுத்த போஸ் தான்.

ருசித்து பிட்சா சாப்பிட்ட பிராட்
இது பிராட் எதையும் பொருட்படுத்தாமல், பிட்சாவை ருசித்து சாப்பிடும் போது எடுத்தது.

யாரோ பிட்சா ஆர்டர் செய்தது
எல்லன் தாம் சாப்பிடுவதற்கு பிட்சாவை ஆர்டர் செய்து வாங்கி வரும் போது, அங்குள்ளவர்களோ தமக்கு தான் என்று நினைத்து, அதை எடுத்து சாப்பிட்டதும் எல்லன் கொடுத்த முகபாவனை, செம சிரிப்பை ஏற்படுத்தியது.

ஜாரெட்
எல்லன் கொண்டு வந்த பிட்சாவை எடுத்து சாப்பிட்டவர்களுள் ஒருவர் தான் துணை நடிகருக்கான விருதைப் பெற்ற ஜாரெட்.

பரிமாறும் விதம்
அவ்வளவு பெரிய விருது விழாவில் பிட்சா பரிமாறும் விதத்தைப் பாருங்கள். ஒரு தட்டு கூட இல்லை போலும்.

ஆஸ்கருடன் லூபிதா
சிறந்த துணை நடிகைக்கான விருதை லூபிதா பெறும் போது, அவரது குஷிக்கு அளவே இல்லை. இது அவர் விருதைப் பெற்றதும் சந்தோஷத்தில் கொடுத்த போஸ்.

போட்டோ பாம்
இது ஆஸ்கரில் நடந்த மற்றொருது நகைச்சுவையான தருணம். அது என்னவென்றால், போட்டோவிற்கு குழுவாக போஸ் கொடுக்கும் போது, அவர்களுக்கு பின்னால் யாரோ கையை தூக்கியவாறு எடுக்காதீர்கள் என்று சொல்வதைப் போல் இருந்தது.

நடனமாடிய லூபிதா
லூபிதா விருதை வாங்க செல்லும் போது, சந்தோஷத்தில் நடனமாடிக் கொண்டே சென்றது, ஆஸ்கரில் நடந்த சிறப்பான தருணங்களில் ஒன்று.

கட்டிப்பிடித்த ஜெனிபர்
2013 ஆம் ஆண்டு சிறந்த நடிகை விருதைப் பெற்ற ஜெனிபர் லாரன்ஸ், இந்த வருடம் சிறந்த நடிகை விருதைப் பெற்ற கேட் பிளாஞ்செட்டை கட்டிபிடித்து வாழ்த்து தெரிவித்தது, சிறப்பான தருணங்களில் ஒன்றாகும்.

லியோனார்டோ கடவுளை வணங்கிய தருணம்
இது சிறந்த நடிகர் யாரென்று அறிவிக்கும் தருணம், லியோனார்டோ இந்த முறையாவது விருதைப் பெற வேண்டும் என்று கடவுளை வணங்கும் போது எடுத்தது. இருப்பினும் இந்த முறையும் அவருக்கு கிடைக்கவில்லை.

திடீர் முத்தம்
மேத்யூ விருதைப் பெற்றதும், அவரது மனைவி திடீரென்று அவருக்கு மேடையிலேயே முத்தம் கொடுத்தது, ஆஸ்கரில் நடந்த சிறந்த தருணங்களுள் ஒன்றாகும்.



Click it and Unblock the Notifications