நீண்ட நாட்களுக்குப் பின் மீடியா கண்களுக்கு தென்பட்ட ஐஸ்வர்யா ராய்!!!

Posted By: Babu
Subscribe to Boldsky

2014 ஆம் ஆண்டின் கேன்ஸ் விழாவிற்கு பின் ஐஸ்வர்யா ராய் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் காண முடியவில்லை. ஆனால் சமீபத்தில் ஐஸ்வர்யா ராய், தனது கணவர் மற்றும் மாமனாருடன் மும்பையில் உள்ள பிரபலமான விநாயகர் கோவிலுக்கு வந்திருந்தார். அப்போது அவர் சிவப்பு நிற சல்வார் சூட் அணிந்து வந்திருந்தார். அதுமட்டுமின்றி, அந்த உடையில் அவர் இன்னும் இளமையாகவே காட்சியளித்தார். இங்கு விநாயகர் கோவிலுக்கு ஐஸ்வர்யா ராய் மேற்கொண்ட ஸ்டைல் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாரம்பரிய தோற்றம்
  

பாரம்பரிய தோற்றம்

இது தான் ஐஸ்வர்யா அணிந்து வந்த சிவப்பு நிற சல்வார் சூட். இதில் இவர் பாரம்பரிய தோற்றப்படி காணப்பட்டார்.

ஐஸ்வர்யாவின் மேக்கப்
  

ஐஸ்வர்யாவின் மேக்கப்

ஐஸ்வர்யா ராய் மிகவும் அளவாக கண்களுக்கு கண் மையும், உதடுகளுக்கு மின்னும் லிப்கிளாஸ் போட்டு சிம்பிளாக வந்திருந்தார்.

தரிசிக்கும் போது...
  

தரிசிக்கும் போது...

இது மாமனார் மற்றும் கணவருடன் கடவுளை தரிசிக்கும் போது எடுத்த போட்டோ.

துப்பட்டா
  

துப்பட்டா

ஐஸ்வர்யா அணிந்து வந்த துப்பட்டாவானது எம்பிராய்டரி பார்டர் கொண்டிருப்பதுடன், அதனை அவர் கடவுளை வணங்கும் போது தலையில் போட்டிருந்தது அவரை இன்னும் அழகாக வெளிக்காட்டியது.

ஐஸ்வர்யாவின் ஹேர் ஸ்டைல்
  

ஐஸ்வர்யாவின் ஹேர் ஸ்டைல்

ஐஸ்வர்யா சிவப்பு நிற உடைக்கு அவருக்கு மிகவும் விருப்பமான சைடு ஸ்வெப்ட் எடுத்து ப்ரீ ஹேர் விட்டிருந்தார்.

ஐஸ்வர்யாவின் பொட்டு
  

ஐஸ்வர்யாவின் பொட்டு

ஐஸ்வர்யா ராய் மின்னும் சில்வர் பொட்டு வைத்து வந்திருப்பதுடன், நெற்றிக்கு குங்குமம் இட்டு திருமணமான பாரம்பரிய பெண் போன்று வந்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

நீண்ட நாட்களுக்குப் பின் மீடியா கண்களுக்கு தென்பட்ட ஐஸ்வர்யா ராய்!!!

Aishwarya Rai was in suit and traditional drape at Lalbaugcha Raja Ganapati pandal. To see Aishwarya Rai Bachchan in this red suit, read on..