Latest Updates
-
தமிழ்நாட்டின் ஸ்டார் அரசியல்வாதிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட போகிறார்கள் தெரியுமா? -
தேர்தல் பிரச்சாரங்களின் போது ஏன் இளநீர் அரசியல் தலைவர்களின் விருப்பமான பானமாக உள்ளது தெரியுமா? -
கோடை வெயிலால் முகம் டல்லா, கருப்பா இருக்கா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
பாய் வீட்டு சிக்கன் பிரியாணி ரெசிபி... இந்த ரம்ஜானுக்கு இப்படி பிரியாணி செஞ்சு பாருங்க... தாறுமாறா இருக்கும்! -
வெண்டைக்காய் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி மொறுமொறுன்னு சிப்ஸ் செஞ்சு சாப்பிடுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க புரியாத புதிராக இருப்பார்களாம்... இவங்கள யாராலும் புரிஞ்சிக்க முடியாதாம்...! -
மீன ராசியில் அரிய சனி-செவ்வாய் சேர்க்கை: ஏப்ரலில் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. -
4 முட்டையும், ஒரு உருளைக்கிழங்கும் இருந்தா இப்படி முட்டை அவியலை செய்யுங்க...டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்...! -
ரம்ஜான் ஸ்பெஷல் ஆப்கானி மட்டன் - சிம்பிளா எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
கரும்புள்ளிகளை சாதாரணமா நினைக்காதீங்க.. அது கல்லீரல் பிரச்சனையின் அறிகுறியா இருக்கலாம்.. உஷார்..
2013 ஆம் ஆண்டில் ஆபாசத்தோடு முகம் சுளிக்க வைக்குமாறான ஆடைகளை அணிந்து வந்த பிரபலங்கள்!!!
அக்காலத்தில் எல்லாம் பிரபலங்கள் மற்றவர்களை ஈர்க்க வேண்டுமென்று, மிகவும் அழகாக ஆடைகளை அணிந்து வருவார்கள். ஆனால் இக்காலத்தில் உள்ள நடிகைகள் மற்றவர்களை ஈர்க்க, பார்ப்பவர்களின் கண்கள் கூசும் அளவில், மிகவும் ஆபாசமான உடைகளை அணிந்து வருகின்றனர். அதிலும் சாதாரண சிறு விழாக்கள் என்றால் பரவாயில்லை, சர்வதேச அளவில் நடக்கும் விழாக்களுக்கு மற்றவர்களை கவர்வதற்கு அழகாக வருகிறேன் என்ற பெயரில் மிகவும் அசிங்கமான உடையில் தான் வருகின்றனர்.
இதுப்போன்று வேறு ஏதாவது படிக்க: மிகவும் கவர்ச்சியான உடையை அணிந்த நடிகைகள்!!!
பொதுவாக இப்படி ஆபாசமான உடையை ஹாலிவுட் பிரபலங்கள் தான் அதிகம் அணிவார்கள். இது அவர்களுக்கு சாதாரணமாக இருக்கலாம். ஆனால் சில பாலிவுட் நடிகைகள் கூட விழாக்களுக்கு மிகவும் ஆபாசமான உடையில் வந்துள்ளனர் என்பது தெரியுமா? ஆகவே 2013 ஆம் ஆண்டு மிகவும் ஆபாசமான உடையில் வந்த சில நடிகைகளின் படங்கள் உங்கள் பார்வைக்காக கொடுத்துள்ளோம்.

ஆன் ஹாத்வே
ஆன் ஹாத்வே 2013 ஆம் ஆண்டு நடந்த மெட் கலா பால் விழாவின் போது, இந்த கருப்பு நிற லேஸ் கவுனை அணிந்து வந்திருந்தார்.

அஷாந்தி (Ashanti)
இது 2013 ஆம் ஆண்டு நடந்த கிராமி விருது விழாவின் போது அஷாந்தி கருப்பு நிற லேஸ் கவுன் அணிந்து வந்த போது எடுத்தது.

பிராண்டி கிளான்வில்லி (Brandi Glanville)
இது தான் 2013 ஆம் ஆண்டின் ஆஸ்கர் விருது விழாவின் போது பிராண்டி கிளான்வில்லி அணிந்து வந்த உடை. இதற்க இவர் இந்த உடையை அணியாமலேயே வந்திருக்கலாம்.

டிமந்தி (Dmanti)
இது 2013 ஆம் ஆண்டின் கிராமி விழாவின் போது, அமெரிக்க பாடகி டிமந்தி அணிந்து வந்த உடை.

ஈவா லாங்கோரியா (Eva Longoria)
இது கேன்ஸ் 2013 இல் ஈவா லாங்கோரியா அணிந்து வந்த உடை.

க்வினெத் பேல்ட்ரோ (Gywneth Paltrow)
இந்த வருடத்தில் க்வினெத் பேல்ட்ரோவால் இதை விட கேவலமான உடையை அணிய முடியாது போல். அதிலும் இந்த உடையின் பக்கவாட்டில் பார்த்தால், இவர் உள்ளாடை எதுவும் போடாதது நன்கு வெளிப்படுகிறது. இப்படியெல்லாமா ஆடைகளை அணிவார்கள்.

ஜெய்மீ அலெக்சாண்டர் (Jaimie Alexander)
ஜெய்மீ அலெக்சாண்டர், தனது தோர் படத்தின் ப்ரீமியர் காட்சியின் போது, வித்தியாசமான, அதே சமயம் ஆபாசமான உடையில் வந்திருந்தார்.

ஜெனிபர் லோபஸ் (Jennifer Lopez)
மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் ஜெனிபர் லோபஸ் தனது ஒரு கால்கள் மட்டும் தெரியுமாறான ஒற்றை தோள்பட்டை கொண்ட கருப்பு நிற உடையில் கிராமி விருது விழாவின் போது பரவாயில்லாமல் வந்திருந்தார்.

கங்கனா ரனாவத் (Kangna Ranaut)
பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத், விழா ஒன்றிற்கு மார்பகங்கள் மட்டுமின்றி, இடுப்பு மற்றும் தொடை தெரியுமாறான ஷீர் உடையில் கவர்ச்சியாக வந்துள்ளார்.

கெல்லி ரோலந்த் (Kelly Rowland)
2013 இல் நடந்த கிராமி விருது விழாவில் கவர்ச்சியாக வந்த நடிகைகளில் ஒருவர் தான் கெல்லி.

கிம் கர்தாஷியன் (Kim Kardashian)
என்ன தான் குழந்தைப் பிறந்தாலும், கிம் கர்தாஷியன் கவர்ச்சியை வெளிப்படுத்துவதை மட்டும் நிறுத்தவில்லை. அதிலும் இந்த உடையைப் பார்த்தால் ப்ப்ப்ப்ப்ப்பா... என்று தான் சொல்ல வேண்டும்.

மைலி சைரஸ் (Miley Cyrus)
பிரபல பாடகியான மைலி சைரஸ், தனது மார்பகங்கள் நன்கு தெரியுமாறான கருப்பு நிற லேஸ் கவுனில் விழா ஒன்றில் கலந்து கொண்டார்.

மற்றொரு உடையில் கிம் கர்தாஷியன்
இது இந்த வருடம் கிம் அணிந்த கவர்ச்சியான உடையில் ஒன்று. இது பிரசவத்திற்கு பின், கிம் தர்தாஷியன் அணிந்து வந்த உடையில் ஒன்று.

மீண்டும் மைலி சைரஸ்
மைலி சைரஸ் அணிந்த உடையிலேயே மிகவும் கேவலமான உடை என்றால் இது அந்த வெள்ளை நிற உடை தான்.

பிரியங்கா சோப்ரா
நம்ம பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா கூட ஆபாசமான உடையில் விழா ஒன்றில் கலந்து கொண்டார். இவர் இப்படி வருவார் என்று யாரும் நினைத்துக் கூட பார்த்திருக்கமாட்டோம்.

ரிஹானா
பாடகி ரிஹானா இந்த சிவப்பு நிற உடையில் அழகாக இருந்தாலும், இந்த உள்ளாடை அணியாதது நன்கு வெளிப்படும் வகையில் உள்ளது.

மீண்டும் ரிஹானா
இது கிராமி விருது விழாவின் போது ரிஹானா அணிந்து வந்த கவர்ச்சியான உடை. இந்த உடையை அணிந்து வந்து ரிஹானா மேடையில் பாடிக்கொண்டிருக்கும் போது, அவரது மார்பகம் வெளிப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஷெர்லின் சோப்ரா
ஷெர்லின் சோப்ரா கேன்ஸ் விழாவிற்கு வெறும் உள்ளாடையை மட்டும் அணிந்து வந்திருக்கலாம். ஏனெனில் அந்த அளவில் அவர் மிகவும் கேவலமான உடையில் வந்திருந்தார்.

ஸ்கைலார் க்ரே (Skylar Grey)
கிராமி விழாவில் தான் பல பிரபலங்கள் படு கவர்ச்சியாக வந்திருந்தனர். அதில் ஒருவர் தான் ஸ்கைலார் க்ரே. இவரும் மார்பகங்கள் தெரியுமாறான நெக்லைன் கொண்ட கவுனில் வந்திருந்தார். அதிலும் இதில் ஹைலைட்டே, அந்த மார்பகங்களுக்கு அருகில் அவர் போட்டிருந்த டாட்டூ தான்.

யாங்க் யூக்கி (Xhang Yuqi)
இவர் ஒரு சீன நடிகை. இவர் தான் இந்த வருட கேன்ஸ் விழாவின் போது மிகக் கவர்ச்சியான ஆடையில் வந்தவர்களில் மறக்க முடியாதவர்.



Click it and Unblock the Notifications











