Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
இந்தியா பிரைடல் ஃபேஷன் வீக்கில் வெளிவந்த ராகவேந்திரா ரத்தோர் கலெக்ஷன்கள்!!!
மும்பையில் நடைபெற்ற இந்தியா பிரைடல் ஃபேஷன் வீக்கின் மூன்றாம் நாளில் பிரபலமான ஃபேஷன் டிசைனரான ராகவேந்திரா ரத்தோர், மற்ற டிசைனர்களை விட மிகவும் வித்தியாசமான ஆடைகளை வெளியிடுவார். மேலும் இவர் வித்தியாசமான நிறங்களைப் பயன்படுத்தி, மணமகள் மற்றும் மணமகன் ஆடைகளை வெளியிட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி, இவர் ஷோஸ்டாப்பராக தியா மிர்ஸாவை அழைத்திருந்தார். இதில் தியா மிர்ஸா மிகவும் அழகான சிவப்பு மற்றும் கருப்பு கலந்த உடையில் கலக்கலாக ராம்ப் வாக் நடந்து வந்தார். மேலும் ராகவேந்திரா ரத்தோர் முன்பு டெல்லியில் நடைபெற்ற இந்தியா பிரைடல் ஃபேஷன் வீக்கில் வெளியிட்ட ஒருசில ஆடையை, மீண்டும் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
சரி, இப்போது ராகவேந்திரா ரத்தோரின் அழகான கலெக்ஷன்களைப் பார்ப்போம்.

ஷோஸ்டாப்பர்
தியா மிர்ஸா, ராகவேந்திரா ரத்தோர் வடிவமைத்த இந்த சிவப்பு மற்றும் கருப்பு கலந்த உடையில் மிகவும் அழகாக உள்ளார்.

பிங்க் மற்றும் கருப்பு
ராகவேந்திரா இந்த பிங்க் பேண்ட் மற்றும் கருப்பு டாப்ஸ் உள்ள உடையை ஏற்கனவே டெல்லியில் நடைபெற்ற ஃபேஷன் வீக்கில் வெளியிட்டுள்ளார்.

ஸ்டைலிஷ் கருப்பு மற்றும் கோல்ட்
ராகவேந்திரா கருப்பு நிற வெல்லெட் குர்தாவில் கோல்டன் பார்டரை டிசைன் செய்திருப்பது, ஆடையை மிகவும் அழகாக வெளிக்காட்டுகிறது.

ஆண்களுக்கான அழகான உடை
பொதுவாக பிங்க் நிறம் பெண்களுக்கு தான் பொருந்தும் என்று நினைத்தோம். ஆனால் ராகவேந்திரா ரத்தோர் ஆண்களுக்கு பிங்க் நிற சட்டைக்கு கருப்பு நிற கோட் போட்டு, அழகாக வெளியிட்டுள்ளார்.

ஹாட் பிங்க்
ராகவேந்திரா இந்த முறை பிங்க் நிறத்தை அதிகம் பயன்படுத்தியுள்ளார். அதில் இது பிங்க் நிற டாப்பில் கோல்டன் வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருப்பது.

மீண்டும் பிங்க்
ராகவேந்திரா பிங்க்கிலேயே பல்வேறு பிங்க்கைப் பயன்படுத்தியுள்ளார். குறிப்பாக ஆண்களுக்கு பயன்படுத்தும் பிங்க்கில் தான் வித்தியாசமான பிங்க்கைப் பயன்படுத்தியுள்ளார். அதிலும் இந்த பிங்க் நிற குர்தாவிற்கு ஊதா நிற கோட் போட்டிருப்பது, ஸ்டைலான லுக்கைத் தருகிறது.

போல்கா குர்தா
டிசைனர் ராகவேந்திரா, ஜூலை மாதத்தில் நடந்த ஃபேஷன் வீக்கில் வெளியிட்ட ஒரு ஆடையை மீண்டும் வெளியிட்டுள்ளார்.

ராயல் லுக்
எப்போதுமே பர்பிள் நிறமானது ராயல் லுக் கொடுக்கும். அதிலும் இந்த பர்பிள் நிற கோல்டன் பார்டர் கொண்ட உடை மிகவும் விசித்திரமாக இருப்பதோடு, ஸ்டைலான ராயல் லுக்கையும் கொடுக்கிறது.

கிரிம்சன் பிங்க்
இந்த உடை பஞ்சு மிட்டாய் விற்பவருக்கு பொருத்தமாக இருக்கும். அந்த அளவில் மிகவும் கேவலமான தோற்றத்தைக் கொடுக்கும் வகையில், ராகவேந்திரா இந்த உடையை வடிவமைத்து வெளியிட்டுள்ளார்.

அழகான பிங்
இந்த பிங்க் நிற குர்தா சூப்பராக உள்ளது. ஆனால் இதில் வெள்ளை சேர்த்திருப்பது, இந்த உடையின் அழகையே கெடுத்துவிட்டது.

கருப்பு மற்றும் ஊதா
ஆண்களுக்கான இந்த ஊதா நிற குர்தா கோட் மிகவும் பாரம்பரிய தோற்றத்தைக் கொடுப்பதோடு, மணமகன் உடுத்துவதற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டது.

ஆண்களுக்கான பிங்க்
பிங்க் நிற குர்தா மற்றும் அதன் மேல் இடுப்பளவுள்ள கோட்டிற்கு, வெள்ளை நிற பைஜாமா பேண்ட் அணிந்திருப்பது, உடைக்கு அழகிய தோற்றத்தைக் கொடுக்கிறது.

பாரம்பரிய தோற்றம்
ராகவேந்திரா பிங்க்கிற்கு அடுத்தப்படியான ஊதா நிறத்தை தான் அதிகம் பயன்படுத்தியுள்ளார். அதில் ஒன்று தான் ஆண்களுக்கான இந்த ஊதா நிற உடை.

ஊதா நிற குர்தா மற்றும் கருப்பு நிற கோட்
ராகவேந்திரா வடிவமைத்த இந்த ஊதா நிற குர்தாவிற்கு, கோல்டன் வேலைப்பாடுகள் செய்யப்பட்ட கருப்பு நிற கோட் ராயல் லுக்கைக் கொடுக்கிறது.

வெள்ளை மற்றும் கோல்டன் நிற உடை
டிசைனர் ராகவேந்திரா எப்போதும் மணமகன்கள் திருமணத்திற்கு அணியும் நிறங்களான வெள்ளை மற்றும் கோல்டன் கலந்த உடையை, இந்த முறையும் வெளியிட்டுள்ளார்.

சில்வர் கலந்த வெள்ளை
ராகவேந்திரா வடிவமைத்த உடைகளில் மிகச்சிறந்த உடை என்றால் இது இந்த சில்வர் கலந்த வெள்ளை நிற உடை தான்.

கருப்பு நிற உடை
கருப்பு மற்றும் கோல்டன் கலந்தாலே, அந்த உடை அழகாக இருக்கும். அதிலும் ராகவேந்திரா வடிவமைத்த இந்த உடை இன்னும் சூப்பராக லுக்கைக் கொடுக்கிறது.



Click it and Unblock the Notifications