Latest Updates
-
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பன்னீர் பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கும் -
Krishna Jayanthi 2026: இன்று உங்க ராசிப்படி கிருஷ்ணருக்கு இத வாங்கி கொடுங்க.. உங்க கனவுகள் சீக்கிரம் நனவாகும்! -
1/2 கப் கொள்ளு இருந்தா.. இப்படி ஒருவாட்டி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 04 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்
லட்சுமி யோகத்தால் ஜூலை 07 வரை இந்த 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகுது.. உங்க ராசி இதுல இருக்கா?
Lakshmi Yoga 2023: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் ராசி மாற்றத்தின் போது, சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகும். அப்படி உருவாகும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் தெரியும்.
அந்த வகையில் அழகு, ஆடம்பரம், காதல், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படும் சுக்கிரன் மே மாதத்தின் இறுதியில் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்குள் நுழைந்தார். சுக்கிரன் கடக ராசிக்குள் நுழையும் போது, மிகவும் மங்களகரமான யோகமாக கருதப்படும் லட்சுமி யோகம் உருவானது.

இந்த யோகமானது ஜூலை 07 ஆம் தேதி வரை நீடித்திருக்கும். இந்த சுப யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் சிறப்பான வெற்றிகளையும், நிதி நிலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தையும் காணப் போகிறார்கள்.
இப்போது சுக்கிரனால் உருவான லட்சுமி யோகத்தால் எந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது என்பதைக் காண்போம். உங்கள் ராசியும் அதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு லட்சுமி யோகத்தால் ஜூலை 07 வரை அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். எந்த துறைகளில் வேலை செய்தாலும், அதில் நல்ல வெற்றி கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபத்தைத் தரும் பெரிய ஒப்பந்தம் இக்காலகட்டத்தில் கிடைக்கலாம். முதலீடு செய்தால் அதிலும் நல்ல லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு இக்காலம் மிகவும் சிறப்பானதாக இருக்கும். மேலும் நிலம், வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்களும் கிடைக்கலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு லட்சுமி யோகம் மகத்தான நன்மைகளை வழங்கும். குறிப்பாக நிதி ரீதியாக அற்புதமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்தினருடன் நல்ல தரமான நேரத்தை செலவிடுவீர்கள். குடும்ப வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் இக்காலத்தில் கைக்கு வந்து சேரும். வியாபாரத்தில் முதலீடு செய்தால், நல்ல லாபம் கிடைக்கும். சமூகத்தில் உங்கள் அந்தஸ்தும், மதிப்பும் அதிகரிக்கும். மொத்தத்தில் இக்காலம் மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு லட்சுமி யோகமானது அதிர்ஷ்டத்தை பிரகாசிக்க வைக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல தரமான நேரத்தை செலவிடும் வாய்ப்புக்கள் கிடைக்கும். குடும்பத்தினரின் ஆசையை நிறைவேற்றுவீர்கள். உங்களின் வருமானத்தில் உயர்வு ஏற்படும். புதிய வருமான ஆதாரங்களும் உருவாகலாம். குடும்பத்தினருடன் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு லட்சுமி யோகமானது சிறப்பான பலன்களை வாரி வழங்க போகிறது. இதுவரை பலவீனமாக இருந்த உங்களின் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். கடனால் அவதிப்பட்டு வந்தால், அதிலிருந்து விடுபடுவீர்கள். நிலுவையில் இருந்த வேலைகளை இக்காலத்தில் மீண்டும் தொடங்கலாம். இதுவரை உங்களின் வேலைகளில் இருந்த தடைகள் இக்காலத்தில் விலகும். கடின உழைப்பிற்கான முழு பலனையும் பெறுவீர்கள். அதிர்ஷ்டத்தின் ஆதரவால் அனைத்திலும் வெற்றி காண்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications