Latest Updates
-
அரிசி மாவு ரொட்டியும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 03 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம் -
புதன் கன்னி ராசியில் உதயமாவதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பூரி பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ரோட்டுக்கடை முட்டை சேர்வா ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
இந்திய ராணுவத்தில் எவ்வளவு பெண்கள் உள்ளார்கள்? எந்த நாட்டு இராணுவத்தில் அதிக பெண்கள் இருக்கிறார்கள் தெரியுமா? -
காலிஃபிளவரை இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இந்தியாவின் பிரதமருக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இட்லிக்கு இப்படி தக்காளி குழம்பு செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 02 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் பொன்னாகப் போகுதாம்
சிம்ம ராசியில் உருவாகும் லட்சுமி நாராயண யோகம்: இந்த 4 ராசிக்காரங்க காட்டுல பண மழை கொட்டப்போகுது...
Lakshmi Narayan Yoga In Leo 2023: வேத ஜோதிடத்தில் கிரகங்கள் ராசியை அவ்வப்போது மாற்றும். அப்படி மாற்றும் போது சுப அல்லது அசுப யோகங்கள் உருவாகும். அந்த வகையில் ஏற்கனவே சிம்ம ராசியில் சுக்கிரன் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் ஜூலை 25 ஆம் தேதி புத்திகாரகனான புதன் சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார். இதனால் சிம்ம ராசியில் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த யோகமானது மங்களகரமான யோகங்களில் ஒன்றாகும்.

இந்த யோகத்தால் நல்ல பண வரவும், நல்ல முன்னேற்றத்தையும் காணக்கூடும். அந்த வகையில் சிம்ம ராசியில் உருவாகியுள்ள லட்சுமி நாராயண யோகத்தால் 4 ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கப் போகிறது. இப்போது சிம்ம ராசியில் உருவாகும் லட்சுமி நாராயண யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் 3 ஆவது வீட்டில் புதன், சுக்கிரன் சேர்க்கையால் லட்சுமி நாராயண யோகம் உருவாகவுள்ளது. இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் தைரியம் நிறைந்து இருப்பார்கள். சிலர் நிறைய பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணத்தால் நல்ல ஆதாயமும் கிடைக்கும்.
மேலும் இக்காலத்தில் சமூகத்தில் நல்ல நிலையில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வெளிநாட்டுடன் தொடர்புடைய வணிகம் செய்பவர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். பேச்சால் பல காரியத்தை சாதிப்பீர்கள். நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசியின் 11 ஆவது வீட்டில் புதன், சுக்கிரன் சேர்க்கையால் லட்சுமி நாராயண யோகம் உருவாகிறது. இதனால் இக்காலத்தில் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். அதோடு, பணிபுரிபவர்களுக்கு இக்காலம் மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும்.
வணிகர்கள் கூட நல்ல லாபத்தைப் பெறுவார்கள். மேலும் புதிய வருமான ஆதாரத்தை உருவாக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். இதுவரை முதலீடு செய்திருந்தால், அதிலிருந்து இக்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் நல்ல லாபத்தைக் காணலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 10 ஆவது வீட்டில் புதன், சுக்கிரன் சேர்க்கையால் லட்சுமி நாராயண யோகம் உருவாகிறது. இதனால் இக்காலத்தில் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வீர்கள். வேலையை மாற்ற நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு, நல்ல வேலை வாய்ப்புக்கள் இக்காலத்தில் தேடி வரும்.
மேலும் பதவி உயர்வுக்காக காத்துக் கொண்டிருந்தால், இக்காலத்தில் அது கிடைக்கலாம். பணிபுரிபவர்களின் செயல்திறன் சிறப்பாக இருக்கு. வணிகர்கள் இக்காலத்தில் பெரிய ஒப்பந்தத்தைப் பெறக்கூடும். இது எதிர்காலத்தில் நல்ல லாபத்தை வாரி வழங்குவதாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசியின் 12 ஆவது வீட்டில் புதன், சுக்கிரன் சேர்க்கையால் லட்சுமி நாராயண யோகம் உருவாகிறது. இதனால் இக்காலம் இந்த ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உருவாகும். வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தைக் காண்பார்கள். எதிர்பாராத சில நல்ல செய்திகளைப் பெறக்கூடும். ஏற்கனவே முதலீடு செய்திருப்பவர்கள், இக்காலத்தில் அந்த முதலீட்டால் நல்ல லாபத்தைக் காண்பார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications