Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
1 வருடம் கழித்து ரிஷபத்தில் உருவாகும் லட்சுமி நாராயண யோகம்: மே இறுதியில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கபோகுது
Lakshmi Narayan Yog In Taurus After 1 Year: வேத ஜேதிடத்தில் நவகிரகங்களின் இளவசரனும், பேச்சு, புத்திசாலித்தனம், படிப்பு, வியாபாரம் ஆகியவற்றை வழங்குபவரும் தான் புதன். இந்த புதன் கிரகங்களிலேயே குறுகிய நாட்களில் தனது நிலையில் மாற்றங்களை ஏற்படுத்துவார். இப்படி புதனின் நிலையில் ஏற்படும் மாற்றங்களானது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் புதன் வருகிற மே 31 ஆம் தேதி சுக்கிரனின் ராசியான ரிஷப ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த ரிஷப ராசியில் ஏற்கனவே சுக்கிரன் பயணித்து வருகிறார். இதனால் இவ்விரு கிரகங்களின் சேர்க்கையால் மிகவும் மங்களகரமான யோகமான லட்சுமி நாராயண யோகம் உருவாகவுள்ளது.

இந்த யோகமானது சுமார் 1 ஆண்டிற்கு பின் உருவாகவுள்ளது. இந்த யோகத்தால் ஒருவரது நிதி நிலையில் எதிர்பாராத அளவில் முன்னேற்றம் ஏற்படவுள்ளது. இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்களுக்கு இந்த யோகமானது மிகவும் சிறப்பாக இருக்கப் போகிறது. இப்போது லட்சுமி நாராயண யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 2 ஆவது வீட்டில் லட்சுமி நாராயண யோகம் உருவாகவுள்ளது. இதனால் நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். செல்வம் பெருகும். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். பணிபுரிபவர்களுக்கு கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். உங்களின் செயல்திறனால் உயர் அதிகாரிகள் ஈர்க்கப்படுவார்கள். இதனால் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கலாம். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வியாபாரிகள் எதிர்பார்த்த அளவில் லாபத்தைக் காண்பார்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
கன்னி
கன்னி ராசியின் 9 ஆவது வீட்டில் லட்சுமி நாராயண யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். சிலருக்கு சம்பள உயர்வும் கிடைக்கலாம். நிதி நிலை நன்றாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான வாழ்க்கை இனிமையாக இருக்கும். மனதில் இருந்த கஷ்டம் நீங்கி, ரிலாக்ஸாக உணர்வீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும்.
மீனம்
மீன ராசியின் 3 ஆவது வீட்டில் லட்சுமி நாராயண யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் ஒவ்வொரு துறையிலும் வெற்றி பெறுவார்கள். தொழிலைப் பொறுத்தவரை, மிகவும் அற்புதமாக இருக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். இதன் விளைவாக உங்கள் இலக்குகளை எளிதில் அடைவீர்கள். நிதி ரீதியாக, அபரிமிதமான செல்வத்தைப் பெறுவீர்கள். பரம்பரை சொத்துக்களில் இருந்து நல்ல ஆதாயம் கிடைக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். காதல் மற்றும் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஆரோக்கிய பிரச்சனைகள் நீங்கி, உடல்நலம் நன்றாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications