Latest Updates
-
கொளுத்தும் கோடையில் கற்றாழை வெச்சு.. இப்படி ஒருவாட்டி குழம்பு செய்யுங்க.. மீன் குழம்பு மாதிரி இருக்கும்.. -
மே 8 கிரகப்பிரவேசம்: உங்கள் புதிய வீட்டில் செல்வம் கொழிக்க இந்த வாஸ்து மாற்றங்களைச் செய்யுங்க! -
World Asthma Day 2026: ஆஸ்துமா குணமாக இந்த கசாயத்தை 30 நாட்கள் குடிங்க..- கூறும் ஆயுர்வேத டாக்டர்! -
அமேசான் சம்மர் சேல்: உங்கள் வீட்டில் செல்வத்தை அள்ளித்தரும் வாஸ்து ரகசியங்கள் இதோ! -
சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: மே 17 முதல் அடுத்த 5 மாதம் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கப்போகுது.. -
இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறி, எடை மடமடன்னு குறையும்.. -
இன்றைய ராசிபலன் 05 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு பணமழை கொட்டும் நாளாக இருக்குமாம் -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: மே 11 முதல் இந்த 3 ராசிக்கு சொத்தும், வெற்றியும் குவியப்போகுது! -
புதன் ரிஷப ராசிக்கு செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் புயலடிக்கப் போகுதாம் -
ஆந்திரா ஸ்டைல் பாலக் கீரை தொக்கு ரெசிபி - செஞ்சு பாருங்க, டிபன், சாதத்துக்கு செமையா இருக்கும்
லட்சுமி நாராயண யோகம்: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
Lakshmi Narayan Yog In Pisces 2024: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனான புதன் பேச்சு, புத்திசாலித்தனம், படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். இந்த புதன் ஏப்ரல் 09 ஆம் தேதி வக்ர நிலையில் குரு பகவானின் மீன ராசிக்குள் நுழைந்தார்.
ஏற்கனவே இந்த மீன ராசியில் அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரன் மார்ச் 31 ஆம் தேதி நுழைந்து பயணித்து வருகிறார். இதனால் மீன ராசியில் புதன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் லட்சுமி நாராயண யோகம் உருவாகியுள்ளது. லட்சுமி நாராயண யோகமானது மிகவும் மங்களகரமான மற்றும் அதிர்ஷ்டமான யோகமாகும்.

இந்த யோகம் புதன், சுக்கிரனின் சேர்க்கையால் உருவாகும். இந்த யோகமானது செல்வம், செழிப்பு, வெற்றி போன்றவற்றைத் தரும். தற்போது மீன ராசியில் உருவாகியுள்ள லட்சுமி நாராயண யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 5 ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் நல்ல அதிர்ஷ்டத்தையும், நிதி நன்மைகளையும் பெறவுள்ளார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் லட்சுமி நாராயண யோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். அனைத்து முயற்சிகளிலும் உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். இதனால் உங்களின் வேலைகள் சுலபமாக முடிவடையும். பணபுரிபவர்கள் தொழிலில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். வியாபாரிகள் புதிதாக ஏதேனும் தொடங்க நினைத்தால், அதை இக்காலத்தில் செய்தால் நல்ல பலனைப் பெறலாம். பண வரவு சிறப்பாக இருக்கும். நிதி நிலையில் எதிர்பாராத முன்னேற்றத்தைக் காணலாம். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குழந்தைகளிடம் இருந்து நற்செய்திகளைப் பெறுவீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசியின் 8 ஆவது வீட்டில் லட்சுமி நாராயண யோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் புதிய வாகனத்தை வாங்கும் வாய்ப்புள்ளது. முதலீடு செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வங்கி இருப்பு அதிகரிக்கும். கூட்டு வணிகம் செய்து வந்தால், கூட்டாளரின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். வணிகத்தை விரிவுபடுத்தும் வாய்ப்புக்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு முக்கியமான காலமாக இருக்கும். சிலர் பதவி உயர்வைப் பெற வாய்ப்புள்ளது. வருமானத்திலும் உயர்வு ஏற்படும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். திருமணமானவர்கள் தங்கள் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடுவார்கள். குடும்ப சூழல் மகிழ்ச்சியாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசியின் 7 ஆவது வீட்டில் லட்சுமி நாராயண யோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் அனைத்து முயற்சிகளிலும் அதிர்ஷ்டம் ஆதரவாக இருப்பதால் வெற்றி கிடைக்கும். நிதி நிலை மேம்படும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்கள் கடின உழைப்புக்கான பலனைப் பெறுவார்கள். புத்திசாலித்தனத்தால் எதிரிகளை வெற்றி பெறுவீர்கள். வியாபாரிகள் மிகவும் பிஸியாக இருப்பார்கள். அதே சமயம் நல்ல லாபத்தையும் காண்பார்கள். திருமண வாழ்க்கையைப் பொறுத்தவரை, துணையுடன் நல்லுறவைப் பேணுவீர்கள். உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவு கிடைக்கும்.
மகரம்
மகர ராசியின் 3 ஆவது வீட்டில் லட்சுமி நாராயண யோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்கள் இலக்கை அடைவார்கள். நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். புதிய தொழிலைத் தொடங்கவும் திட்டமிடலாம். பணியிடத்தில் உங்கள் பேச்சால் உடன் வேலை செய்வோர் மயங்குவார்கள். செல்வாக்குமிக்கவர்களின் உதவியைப் பெறலாம். பொருள் வசதியும், ஆடம்பரமும் பெருகும். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்த முதலீடுகளை செய்தால், நல்ல லாபத்தைப் பெற வாய்ப்புள்ளது. பெற்றோருடனான உறவு நன்றாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே பரஸ்பர அன்பு இருக்கும்.
கும்பம்
கும்ப ராசியின் 2 ஆவது வீட்டில் லட்சுமி நாராயண யோகம் உருவாகியுள்ளது. இதனால இந்த ராசிக்காரர்களைத் தேடி பல வழிகளில் இருந்து பணம் வரும். வேலையில் சிறப்பாக செயல்படுவீர்கள். செல்வாக்கமிக்க நபர்களை சந்திக்கும் வாய்ப்புள்ளது மற்றும் எதிர்காலத்தில் இவர்களின் உதவியால் பல முக்கிய வேலைகள் முடிவடையும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டால், அது இக்காலத்தில் தீரும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணிபரிபவர்கள் அலுவலகத்தில் சிறப்பாக செயல்படுவார்கள். குடும்பத்தினருடன் பயணம் மேற்கொள்ளலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications