Latest Updates
-
Vastu Tips: வீட்டில் பணம் அதிகமா சேரணுமா? அப்ப வீட்டுல இந்த செடியை வாங்கி வையுங்க.. -
குப்பையை பணம் கொடுத்து இறக்குமதி செய்யும் வினோத நாடு - எந்த நாடு? ஏன் இப்படி செய்கிறது தெரியுமா? -
ஆகஸ்ட் இறுதியில் நடக்கும் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
செப்டம்பரில் சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் யார் தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த பக்குவத்தில் பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
மஷ்ரூம் செட்டிநாடு மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - காரசாரமா சூப்பர் சைடிஷா இருக்கும் -
இதய நோய் வரக்கூடாதா? அப்ப அமெரிக்க டாக்டர் சொல்ற இந்த 5 பழக்கங்களை வெச்சுக்கோங்க.. -
கடல் நீர் முழுவதும் குடிநீராக மாறினால் உலகில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
தக்காளி தோசையும், உடுப்பி வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
லட்சுமி நாராயண ராஜயோகத்தால் இன்னும் 2 நாட்களில் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது..
Lakshmi Narayan Yog In Gemini On June 2024: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் அவ்வப்போது ராசியை மாற்றி எப்படி மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறதோடு, அதேப் போல் அவ்வப்போது சுப மற்றும் ராஜயோகங்களையும் உருவாக்கி தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் ஜூன் 12 ஆம் தேதி அசுரர்களின் குருவாக கருதப்படும் மற்றும் அழகு, ஆடம்பரம், செழிப்பு, காதல் ஆகியவற்றின் காரணியாக கருதப்படும் சுக்கிரன் மிதுன ராசிக்குள் நுழைகிறார். அதைத் தொடர்ந்து கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன் ஜூன் 14 ஆம் தேதி தனது சொந்த ராசியான மிதுன ராசிக்குள் நுழைகிறார். இதனால் மிதுன ராசியில் புதன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது.

இந்த ராஜயோகம் ஒரு மங்களகரமான யோகம் மற்றும் இது ஒருவரது நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும். மேலும் இந்த ராஜயோகமானது ஒருவரது அதிர்ஷ்டத்தை பிரகாசிக்க வைக்கும். இப்போது மிதுன ராசியில் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் முதல் வீட்டில் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆளுமை மேம்படும். தொழிலில் முன்னேற்றத்திற்கான பல நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றகரமாக முடிவடையும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 11 ஆவது வீட்டில் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் பெருமளவில் உயர்வு ஏற்படலாம். சிலர் புதிய வருமான ஆதாரங்களை உருவாக்க வாய்ப்புக்களைப் பெறலாம். பணிபுரிபவர்களுக்கு பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். பங்குச் சந்தை, லாட்டரி போன்றவற்றின் மூலம் நல்ல நிதி ஆதாயங்களைப் பெற வாய்ப்புள்ளது.
கன்னி
கன்னி ராசியின் 10 ஆவது வீட்டில் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். பணிபுரிபவர்கள் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு போன்றவற்றைப் பெறுவார்கள். இது தவிர, அடுத்தடுத்த பல நல்ல செய்திகளையும் பெறுவீர்கள். தொழிலதிபர்கள் இக்காலத்தில் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். வியாபாரிகள் தங்கள் தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்புக்களைப் பெறுவார்கள். நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டிருந்தால், நல்ல வேலை கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications