Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
1 வருடத்திற்கு பின் உருவாகும் லட்சுமி நாராயண யோகம்: ஏப்ரலில் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டத்தால் பண பெருகும்...
Lakshmi Narayan Yog 2024 In Pisces After 1 Year: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் ராசி மாற்றங்கள் மற்றும் கிரக சேர்க்கைகளால் சுப அல்லது அசுப யோகங்கள் உருவாகும். அப்படி உருவாகும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். ஜோதிடத்தில் பல மங்களகரமான யோகங்கள் உள்ளன. அதில் ஒன்று தான் லட்சுமி நாராயண யோகம். இந்த யோகமானது சுக்கிரன் மற்றும் புதன் சேர்க்கையால் உருவாகும்.
இந்த மங்களகரமான யோகம் ஏப்ரல் மாதத்தில் உருவாகவுள்ளது. அதுவும் இந்த யோகமானது 1 வருடத்திற்கு பின் உருவாகவுள்ளது. இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் இந்த ராஜயோகத்தால் அனைத்து துறைகளிலும் வெற்றி பெறுவதோடு, தொழில் மற்றும் வியாபாரத்தில் நிறைய லாபத்தையும் பெறுவார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு லட்சுமி நாராயண யோகமானது 5 ஆவது வீட்டில் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் குழந்தைகளால் நல்ல செய்திகளைப் பெறுவார்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். சுக்கிரனின் ஆசியால் பொருள் வசதியில் உயர்வு ஏற்படும். அனைத்து வகையான பிரச்சனைகளில் இருந்தும் விடுபடுவீர்கள். முக்கியமாக எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவீர்கள்.
தனுசு
தனுசு ராசியின் 4 ஆவது வீட்டில் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வசதிகள் அதிகரிக்கும். புதிய வாகனம் அல்லது சொத்துக்களை வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். சொந்தமாக தொழில் செய்து வந்தால் நல்ல வளர்ச்சியைக் காண்பீர்கள். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. தாயுடனான உறவு சிறப்பாக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு லட்சுமி நாராயண ராஜயோகமானது வருமானத்தை அதிகரிக்க போகிறது. இக்காலத்தில் பணிபுரிபவர்கள் சம்பள உயர்வைப் பெறலாம். முதலீடு செய்தால் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். நிதி நிலை வலுவாகும். இக்காலத்தில் புதிய வருமான ஆதாரங்களைப் பெறுவீர்கள். தொழிலதிபர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். குழந்தைகளால் சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
