Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
50 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் லட்சுமி நாராயண யோகம்: மே 10 முதல் இந்த ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்
Lakshmi Narayan Yog 2024: ஜோதிடத்தில் பல்வேறு சுப யோகங்கள் உள்ளன. அதில் ஒன்று தான் லட்சுமி நாராயண யோகம். இந்த யோகம் மிகவும் மங்களகரமான யோகம். இந்த யோகமானது புதன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் உருவாகும். இந்த யோகம் ஒருவரது ஜாதகத்தில் இருந்தால், அந்நபர் மகிழ்ச்சியான மற்றும் செழிப்பான வாழ்க்கையை வாழ்வார். அதோடு மிகவும் அழகாகவும், மற்றவர்களை கவரக்கூடியவராகவும் இருப்பார்.
இப்படிப்பட்ட லட்சுமி நாராயண யோகமானது மேஷ ராசியில் உருவாகவுள்ளது. ஏற்கனவே மேஷ ராசியில் சுக்கிரன் பயணித்து வருகிறார். இந்நிலையில் மே 10 ஆம் தேதி புதன் மேஷ ராசியில் நுழையவுள்ளார். இதனால் மேஷ ராசியில் மே 10 ஆம் தேதி முதலாக லட்சுமி நாராயண யோகம் உருவாகவுள்ளது.

இந்த யோகம் மே 19 ஆம் தேதி வரை நீடித்திருக்கும். இக்காலகட்டத்தில் சில ராசிக்காரர்கள் நல்ல பண பலன்களையும், தொழிலில் நல்ல வெற்றிகளையும் பெறுவார்கள். இப்போது மேஷ ராசியில் உருவாகும் லட்சுமி நாராயண யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 12 ஆவது வீட்டில் லட்சுமி நாராயண யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் புதிய வருமானத்தைப் பெறுவார்கள். இதன் விளைவாக பண பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். குடும்ப தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பணிபுரிபவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை தேடி வரும். லட்சுமி தேவியில் அருளால் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். உடன் பிறந்தவர்களிடையே இருந்த பிரச்சனைகள் நீங்கும். முதலீடுகளை செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். குழந்தைகளால் சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். வெளிநாடுகளில் வேலை செய்பவர்களுக்கு சிறப்பாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் 11 ஆவது வீட்டில் லட்சுமி நாராயண யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். நீண்ட நாட்களால் சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். பணிபுரிபவர்கள் சிறப்பான செயல்திறனால் வேலைகள் அனைத்தையும் திறம்பட முடிப்பார்கள். ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், இக்காலத்தில் அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு எதிர்பாராத அளவில் நல்ல லாபம் கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 9 ஆவது வீட்டில் லட்சுமி நாராயண யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் நீண்ட நாள் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். கடனாக கொடுத்த பணம் கைக்கு வந்து சேரும். லட்சுமி தேவியின் அருளால் புதிய வாகனம் மற்றும் சொத்துக்களை வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். அனைத்து துறைகளிலும் வெற்றி பெறுவீர்கள். நிறைய பணத்தை சேமிக்க முடியும். வேலை மற்றும் வியாபாரம் தொடர்பான பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இப்பயணம் நல்ல நிதி நன்மைகளை வழங்குவதாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications