Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
மேஷ ராசியில் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
Lakshmi Narayan Rajyoga In Aries 2023: ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட இடைவெளியில் ராசியை மாற்றும். அப்படி மாற்றும் போது சில சமயங்களில் கிரக சேர்க்கைகள் நிகழும். ஒரு ராசியில் ஒன்றிற்கு மேற்பட்ட கிரகங்கள் இணையும் போது சுப அல்லது அசுப யோகங்கள் உருவாகும். இந்த யோகங்களால் சில ராசிக்காரர்கள் நல்ல அல்லது கெடு பலன்களைப் பெறலாம். அந்த வகையில் 2023 மார்ச் 31 ஆம் தேதி புதன் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு செல்கிறார்.
இந்த மேஷ ராசியில் ஏற்கனவே சுக்கிரன் பயணித்து வருகிறார். இதனால் மார்ச் 31 ஆம் தேதி மேஷ ராசியில் புதன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் லட்சுமி நாராயண யோகம் உருவாகிறது. இந்த மங்களகரமான யோகமானது சில ராசிக்காரர்களுக்கு நல்ல பண வரவைத் தருவதோடு, நல்ல முன்னேற்றத்தையும் தரும். இப்போது மேஷ ராசியில் உருவாகும் லட்சுமி நாராயண யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

சிம்மம்
சிம்ம ராசியின் 9 ஆவது வீட்டில் லட்சுமி நாராயண யோகம் உருவாகிறது. இந்த யோகத்தால் சிம்ம ராசிக்காரர்கள் ஒவ்வொரு காரியத்திலும் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறுவார்கள். தொழில் தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். அலுவலகத்தில் உங்களின் திட்டங்கள் நல்ல வெற்றியைத் தரும். இந்த யோக காலத்தில் உங்களால் நிறைய பணத்தை சேமிக்க முடியும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். சுப காரியங்களில் பங்கு கொள்ளும் வாய்ப்புள்ளது. மாணவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். எழுத்து தொடர்பான வேலை செய்பவர்கள் முன்னேற்றத்திற்கான சிறந்த வாய்ப்புக்களைப் பெறுவார்கள்.
கடகம்
கடக ராசியின் 10 ஆவது வீட்டில் லட்சுமி நாராயண யோகம் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் வியாபார ரீதியாக சிறப்பாக இருக்கும். இக்காலத்தில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதிய வேலையைத் தொடங்க நினைத்தால், அதற்கு இது சிறந்த காலம். வியாபாரம் செய்பவர்கள் இந்த யோக காலத்தில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். முக்கியமாக இக்காலத்தில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் 11 ஆவது வீட்டில் லட்சுமி நாராயண யோகம் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். திருமணமானவர்களின் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். நீண்ட கால ஆசை இக்காலத்தில் நிறைவேறக்கூடும். வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புகள் கிடைக்கும். பங்கு சந்தையில் முதலீடு செய்தால், எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications