Latest Updates
-
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சௌ சௌ வாங்குனா இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் அஸ்தமனமாவதால் துரதிர்ஷ்டத்தால் துரத்தப்படப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஈவ்னிங் டைம்ல இந்த செட்டிநாடு உருளைக்கிழங்கு அடையை செஞ்சு கொடுங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும்
2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது..
Lakshmi Narayan Rajyog In 2024: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் இயக்கங்கள் மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுகின்றன. அப்படி மாற்றும் போது சுப அல்லது அசுப யோகங்கள் உருவாகின்றன. இந்த யோகங்களும் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
அந்த வகையில் இன்னும் சில நாட்களில் 2024 ஆம் ஆண்டில் நுழையவுள்ளோம். இந்த புத்தாண்டின் தொடக்கமானது சிலருக்கு அற்புதமாக இருக்க போகிறது. அதற்கு காரணம் ஒருசில ராஜயோகங்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் உருவாகவுள்ளன. முக்கியமாக செல்வத்தின் காரணியாக கருதப்படும் சுக்கிரனும், புத்திசாலித்தனம், தொழில் ஆகியவற்றின் காரணியாக கருதப்படும் புதனும் மகர ராசியில் ஒன்றிணைந்து பயணிக்கவுள்ளனர்.

இதனால் இவ்விரு கிரகங்களின் சேர்க்கையான லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த ராஜயோகமானது மங்களகரமான யோகம் என்பதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். முக்கியமாக இந்த ராஜயோகத்தால் 3 ராசிக்காரர்கள் நல்ல நிதி நன்மைகளைப் பெறவுள்ளார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
தனுசு
லட்சுமி நாராயண ராஜயோகமானது தனுசு ராசிக்காரர்களுக்கு மங்களகரமானதாக இருக்கப் போகிறது. அதுவும் சிலர் திடீரென்று நல்ல நிதி நன்மைகளைப் பெறுவார்கள். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றத்தைக் காணக்கூடும். நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். ஆளுமை மேம்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு லட்சுமி நாராயண ராஜயோகமானது நல்ல பலன்களைத் தரும். முக்கியமாக தொழில் மற்றும் வணிகத்தில் நல்ல வெற்றி கிடைக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் நல்ல முடிவுகளைப் பெறுவார்கள். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றத்தைக் காணக்கூடும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தந்தையுடனான உறவு மேம்படும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு லட்சுமி நாராயண ராஜயோகமானது வருமானத்தில் நல்ல உயர்வை ஏற்படுத்தும். தொழிலில் முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புகள் கிடைக்கும். பணிபுரிபவர்கள் சிலர் பதவி உயர்வைப் பெறலாம். ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபத்தை புத்தாண்டின் தொடக்கத்தில் பெற வாய்ப்புள்ளது. குழந்தைகளால் சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். பங்குச் சந்தை, லாட்டரி போன்றவற்றில் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புக்கள் உள்ளன.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications