Latest Updates
-
ராகு-கேது பெயர்ச்சியால் டிசம்பர் மாதம் வரை நரகத்தை அனுபவிக்கப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வரகரிசியும், வாழைப்பழமும் இருந்தா இந்த ஆரோக்கியமான பணியாரத்தை செய்யுங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும் -
பார்லர் போகாமலேயே முகத்தில் வளரும் முடியை நீக்கணுமா? இந்த 5 ஃபேஸ் பேக்கை போடுங்க போதும்.. -
ஆகஸ்ட் கடைசியில் நடக்கும் சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களின் வேலையில் உள்ள பிரச்சனைகள் முடிவுக்கு வரும்! -
செப்டம்பரில் இரண்டு முறை ராசி மாறும் புதன்: சகல சௌபாக்கியத்தை பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
1 கப் ரவையும், 1 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. அள்ளும்.. -
கழிப்பறையில் ஐஸ் கட்டிகளை கொட்டுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப கொழுப்பு கல்லீரல் நோய் இருக்குன்னு அர்த்தமாம்.. எச்சரிக்கும் எய்ம்ஸ் டாக்டர்! -
இட்லி அரிசியும், அப்பளமும் இருந்தா இந்த கேரளா ஸ்டைல் அப்பள வடையை செய்யுங்க - வேற லெவலில் இருக்கும் -
சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான்: இந்த 5 ராசிகளின் தூங்கிக் கொண்டிருந்த அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது!
குரோதி தமிழ் புத்தாண்டில் இந்த 5 ராசிக்காரர்களுக்கு தொழிலில் வெற்றியும், லாபமும் குவியப்போகுது...
Krodhi Tamil New Year 2024 Rasi Palan: குரோதி தமிழ் புத்தாண்டு பிறந்துவிட்டது. குரோதி என்றால் பகைமை என்று பொருள். குரோதி தமிழ் ஆண்டு சற்று மோசமாக இருப்பதாக ஜோதிடர்கள் கூறுகின்றனர். இந்த ஆண்டில் பலவிதமான மோசமான சம்பவங்கள் உலகில் நடப்பதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த தமிழ் புத்தாண்டின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு இந்த குரோதி ஆண்டானது தொழில் ரீதியாக மிகவும் அதிர்ஷ்டமாக, முன்னேற்றத்தைத் தரப் போகிறது. இப்போது 2024 குரோதி தமிழ் புத்தாண்டில் தொழில் ரீதியாக நல்ல பலனைப் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு குரோதி தமிழ் புத்தாண்டில் நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்கள் பதவி உயர்வைப் பெற வாய்ப்புள்ளது. வியாபாரிகள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். அலுவலகத்தில் சிறப்பான செயல்திறனால் வேலைகள் அனைத்தையும் வெற்றிகரமாக முடித்து நற்பெயரையும், பாராட்டுக்களையும் பெறக்கூடும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சிறப்பாக இருக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு குரோதி தமிழ் புத்தாண்டு பல வகையில் பயனுள்ளதாக இருக்கும். தைரியம் மற்றும் செல்வாக்கு அதிகரிக்கும். தொழிலதிபர்கள் நல்ல நிதி ஆதாயங்களைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். வேலையை மாற்ற முயற்சித்து வந்தால், நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். பணியிடத்தில் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும். ஆனால் அஷ்டமத்து சனி நடந்து கொண்டிருப்பதால், எந்த ஒரு முடிவை எடுப்பதாக இருந்தாலும், நன்கு யோசித்து எடுக்க அறிவுறுத்தப்படுகிறது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு குரோதி தமிழ் புத்தாண்டு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். தந்தை மற்றும் பரம்பரை சொத்துக்களால் நல்ல ஆதாயத்தைப் பெறுவீர்கள். வெளிநாட்டில் வேலை செய்ய விரும்பினால், அதற்கான வாய்ப்புக்கள் இந்த ஆண்டில் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் இந்த ஆண்டில் கிடைக்கலாம். புதிதாக திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு குரோதி தமிழ் புத்தாண்டில் வெற்றிகளும், நற்பெயரும் குவியும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். பல ஆண்டுகளாக குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது. அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். இருப்பினும் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
கும்பம்
கும்ப ராசியின் அதிபதி சனி பகவான். இந்த குரோதி தமிழ் புத்தாண்டில் சனி பகவான் முதல் வீட்டில் இருப்பதால், கும்ப ராசிக்காரர்களுக்கு ஜென்ம சனி நடக்கிறது. என்ன தான் ஜென்ம சனி நடந்தாலும், மற்ற கிரகங்களின் நிலைகளால் நல்ல பலன்கள் கிடைக்கும். குறிப்பாக நிதி ரீதியாக நல்ல லாபம் கிடைக்கும். பணம் சம்பாதிப்பதற்கான புதிய வாய்ப்புக்கள் தேடி வரும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபத்தையும், வெற்றியையும் பெறுவீர்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications