Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
கேது பெயர்ச்சியால் இன்னும் 3 நாட்களில் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப் போகுது...
Ketu Transit In Virgo On October 2023: ஜோதிடத்தில் கேது ஒரு நிழல் கிரகமாக கருதப்படுகிறது. மற்ற கிரகங்களைப் போன்றே கேதுவும் அவ்வப்போது ராசியை மாற்றுவார். அதுவும் கேது 18 மாதங்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். தற்போது கேது சுக்கிரன் ஆளும் துலாம் ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் கேது பகவான் அக்டோபர் 30 ஆம் தேதி புதன் ஆளும் கன்னி ராசிக்குள் நுழையவுள்ளார்.
சனி பகவானுக்கு அடுத்தபடியாக மோசமாக கருதப்படும் கிரகங்கள் என்றால் அது ராகு, கேது தான். இப்படிப்பட்ட கேது கன்னி ராசிக்குள் நுழைந்து அடுத்த ஒன்றரை ஆண்டுகள் பயணிக்கவுள்ளார். இதனால் இந்த கேது பெயர்ச்சியின் தாக்கமானது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலுமே நன்கு தெரியும்.

குறிப்பாக 3 ராசிக்காரர்கள் இந்த கேது பெயர்ச்சியால் 2024 ஆம் ஆண்டில் திடீர் பண வரவையும், முன்னேற்றத்தையும், அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் பெறவுள்ளனர். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
துலாம்
துலாம் ராசியின் 12 ஆவது வீட்டிற்கு கேது செல்கிறார். இதனால் இதுவரை மன அழுத்தத்தில் இருந்த இந்த ராசிக்காரர்கள் அதிலிருந்து விடுபடுவார்கள். எதிர்பாராத நிதி நன்மைகளைப் பெறுவார்கள். வாழ்க்கைத் துணையின் முழு ஆதவும் கிடைக்கும். கூட்டு வேலை செய்பவர்ளுக்கு நல்ல பண ஆதாயம் கிடைக்கும்.
முக்கியமாக இந்த கேது பெயர்ச்சியால் வாழ்க்கையில் ஒரு பெரிய நல்ல மாற்றம் ஏற்படவுள்ளது. வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். ஏற்கனவே பணிபுரிபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் தேடி வரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும்.
மிதுனம்
மிதுன ராசியின் 4 ஆவது வீட்டிற்கு கேது செல்கிறார். இதனால் அக்டோபர் 30 முதல் அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மிதுன ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். செல்வம் பெருகும்.
சமூகத்தில் மரியாதையும், கௌரவமும் அதிகரிக்கும். பரம்பரை சொத்துக்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். சிலருக்கு நல்ல சம்பளத்துடனான புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். தாயுடனான உறவு மேம்படும்.
மகரம்
மகர ராசியின் 9 ஆவது வீட்டிற்கு கேது செல்கிறார். 9 ஆவது வீடு அதிர்ஷ்ட வீடாகும். இதனால் அடுத்த ஒன்றரை ஆண்டு காலம் மகர ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் ஆதரவால் பல வெற்றிகளையும், பணத்தையும் குவிப்பார்கள்.
நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத அளவில் பண வரவைப் பெறக்கூடும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கலாம். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்புள்ளது. பரம்பரை சொத்துக்களால் நல்ல ஆதாயத்தைப் பெறுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications