Latest Updates
-
இன்றைய ராசிபலன் 24 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப துக்கமான நாளாக இருக்குமாம் -
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
கேது பகவான் கன்னி ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகுது...
Ketu Transit In Virgo 2023: நவகிரகங்களில் ராகு, கேது ஆகிய இரண்டு கிரகங்களும் நிழல் கிரகங்களாகும். இவ்விரு கிரகங்களும் மற்ற கிரகங்களைப் போல் முன்னோக்கி நகராமல், எப்போதும் பின்னோக்கி வக்ர நிலையில் தான் பயணிக்கும். இவ்விரண்டு கிரகங்களும் 18 மாதங்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றும்.
அந்த வகையில் 2022 ஆம் தேதி துலாம் ராசிக்குள் நுழைந்து பயணித்து வந்த கேது, 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி கன்னி ராசிக்குள் நுழைவுள்ளார். கேது நிழல் கிரகமாக இருப்பதால், கேது எந்த ராசியில் உள்ளதோ, அந்த ராசியின் அதிபதிக்கு ஏற்ப பலன்களை அளிப்பார். அதே வேளையில் கேது கர்மா சார்ந்த கிரகமாக கருதப்படுகிறது.

2023 அக்டோபர் மாதம் கன்னி ராசிக்கு கேது செல்வதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் நல்ல பண வரவையும், தொழிலில் நல்ல முன்னேற்றத்தையும் காணப் போகிறார்கள். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 5 ஆவது வீட்டிற்கு கேது செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் திடீர் பண ஆதாயத்தைப் பெறுவார்கள். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இதுவரை மன அழுத்தத்தால் அவதிப்பட்டு வந்தால், இனிமேல் மனம் அமைதியாக ரிலாக்ஸாக இருக்கும். குழந்தைகளால் சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். காதலிப்பவர்களுக்கு இக்காலம் ஏற்ற இறக்கம் நிறைந்ததாக இருக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 2 ஆவது வீட்டிற்கு கேது செல்கிறார். இதனால் சிம்ம ராசிக்காரர்களுக்கு கேது பெயர்ச்சியானது நல்ல அற்புதமான பலன்களை வழங்கும். உங்களின் சிக்கிய பணம் திரும்ப கிடைக்கும் வாய்ப்புள்ளது. உங்களின் லட்சியங்களும், விருப்பங்களும் நிறைவேறும். உறவுகளில் நல்ல இணக்கம் இருக்கும். சமூகத்தில் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். உங்களின் பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஊடகம், மார்கெட்டிங், தகவல் தொடர்பு போன்ற துறைகளில் பணிபுரிபவர்களுக்கு இனிமேல் அட்டகாசமாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசியின் 10 ஆவது வீட்டிற்கு கேது செல்கிறார். இதனால் தனுசு ராசிக்காரர்களுக்கு கேது பெயர்ச்சியானது நல்ல பலன்களை வாரி வழங்கும். முக்கியமாக தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றி கிடைக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புக்கள் கிடைக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய வருமான ஆதாரங்களைப் பெறுவீர்கள். தந்தையின் உதவியால் எதிர்பார்த்த பணம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications