Latest Updates
-
இன்றைய ராசிபலன் 24 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப துக்கமான நாளாக இருக்குமாம் -
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
கன்னி செல்லும் கேதுவால் அக்டோபர் முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்... உங்க ராசியும் இதுல இருக்கா?
Ketu Transit In Virgo 2023: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் அவ்வப்போது ராசியை மாற்றிக் கொண்டே இருக்கும். அப்படி ராசியை மாற்றும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதில் சில ராசிக்காரர்களுக்கு நன்றாகவும், சிலருக்கு மோசமாகவும் இருக்கலாம்.
அந்த வகையில் நிழல் கிரகமாக கருதப்படுபவர் கேது. இந்த கேது தற்போது துலாம் ராசியில் பயணித்து வருகிறார். கேது ராசியை மாற்ற 18 மாதங்கள் ஆகும். இந்நிலையில் கேது அக்டோபர் மாதத்தில் கன்னி ராசிக்கு செல்லவிருக்கிறார். நிழல் கிரகமான கேது எப்போதும் பின்னோக்கி வக்ர நிலையில் பயணிப்பார்.

கன்னி ராசிக்கு கேது செல்வதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். குறிப்பாக 3 ராசிக்காரர்கள் இந்த கேது பெயர்ச்சியால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 5 ஆவது வீட்டிற்கு கேது செல்கிறார். இதனால் இக்காலத்தில் இந்த ராசியைச் சேர்ந்த மாணவர்கள் படிக்க விரும்பமாட்டார்கள். பணிபுரிபவர்கள் வேலையை மாற்ற நினைத்தால், அதைத் தவிர்க்க வேண்டும். காதலிப்பவர்கள் தங்கள் உறவில் பிரச்சனைகளை சந்திப்பார்கள். இக்காலத்தில் எந்த ஒரு புதிய வேலையைத் தொடங்குவதையும் தவிர்க்க வேண்டும். ஆனால் வியாபாரிகள் அல்லது தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
சிம்மம்
சிம்ம ராசியின் 2 ஆவது வீட்டிற்கு கேது செல்கிறார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் பேச்சில் கசப்பு இருக்கும். யாருடனும் இக்காலத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். நீதிமன்ற வழக்குகள் நடந்து வந்தால், அதில் தோல்வியை சந்திக்க நேரிடும். விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். எதிரிகளிடம் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஆனால் பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகள் வழங்கப்படும்.
தனுசு
தனுசு ராசியின் 10 ஆவது வீட்டிற்கு கேது செல்கிறார். இதனால் இக்காலமானது மோசமாக இருக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சில சிக்கல்களை சந்திக்க நேரிடும். அலுவலகத்தில் உடன் வேலை செய்வோரின் ஆதரவு எதுவும் கிடைக்காது. முக்கியமாக இக்காலத்தில் யாருக்கும் கடன் கொடுத்துவிடாதீர்கள். இல்லாவிட்டால், அந்த பணம் திரும்ப கிடைக்காது. இக்காலத்தில் தாயின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications