Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
கேது பெயர்ச்சியால் அக்டோபர் 30 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கை பிரகாசிக்கப் போகுது...
Ketu Transit In Virgo 2023: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் ராசி மாற்றங்களானது மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் மாறும்.
அதில் நிழல் கிரகமான கேது பின்னோக்கி வக்ர நிலையில் பயணிக்கக்கூடியவர். கேது ராசியை மாற்றுவதற்கு 18 மாதங்கள் ஆகும். இந்த கேது தற்போது சுக்கிரன் ஆளும் ராசியான துலாம் ராசியில் பயணித்து வருகிறார்.

இந்நிலையில் அக்டோபர் 30 ஆம் தேதி துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கு செல்கிறார். கேது கன்னி ராசிக்கு செல்வதால், அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் தெரியும.
அதுவும் இந்த கேது பெயர்ச்சியானது தீபாவளிக்கு முன் நிகழ்வதால், சில ராசிக்காரர்கள் இந்த கேது பெயர்ச்சியால் எதிர்பாராத பண வரவைப் பெறுவார்கள். மேலும் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்துடன் லாபத்தையும் பெறுவார்கள். இப்போது கேது பெயர்ச்சியானல் அதிர்ஷ்டம் பெறும் அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
துலாம்
துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கு கேது செல்கிறார். இதனால் துலாம் ராசிக்காரர்களின் ஆளுமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கேது பெயர்ச்சியால் பலவிதமான நன்மைகளைப் பெறுவீர்கள். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
திருமணமாகாதவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையைக் கண்டுபிடிப்பார்கள். குடும்பத்தில் உங்களின் முக்கியத்துவம் அதிகரிக்கம். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் பதவி உயர்வைப் பெறலாம். கூட்டு வியாபாரம் செய்பவர்கள் இந்த கேது பெயர்ச்சியால் நல்ல லாபத்தைக் காண்பார்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு கேது பெயர்ச்சியானது அட்டகாசமான பலன்களை வழங்கவுள்ளது. சிலர் குழந்தைகளால் நல்ல செய்திகளைப் பெறுவார்கள். உங்களின் திட்டங்களில் நல்ல வெற்றி கிடைக்கும்.
பங்குச் சந்தையில் முதலீடு செய்வதால் நல்ல ஆதாயம் கிடைக்கும். முக்கியமாக நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். ஜோதிடம், ஆன்மீகம், கதை ஆசிரியர் துறையில் இருப்பவர்கள் இந்த கேது பெயர்ச்சியால் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் கேது பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறுவார்கள். இந்த பெயர்ச்சிக்கு பின் இவர்கள் போடும் திட்டங்கள் அனைத்தும் வெற்றி பெறும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். நிதி ரீதியாக, பண வரவு சிறப்பாக இருக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும்.
தொழில் ரீதியாக, பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் பதவி உயர்வைப் பெறலாம். வியாபாரிகள் எதிர்பார்த்த லாபத்தைப் பெறுவார்கள். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களின் ஆசைகள் நிறைவேறும். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களுடன் வெற்றி பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications