Latest Updates
-
இன்றைய ராசிபலன் 04 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம் -
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
1 கப் அவலும், 1/4 கப் எள்ளும் இருந்தா.. கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த ஸ்வீட் செய்யுங்க.. -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் உன்னியப்பம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - நெய் மணக்க சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் அவங்க முன்னாள் காதலை மறக்கவே மாட்டார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்திக்கு என்னலாம் செய்வாங்க-ன்னு தெரியுமா? -
2026-ன் சூப்பர் எல் நினோ இந்தியாவிலும், உலகிலும் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் - எச்சரிக்கும் விஞ்ஞானிகள் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
முகலாய அரசர்கள் விரும்பி சாப்பிட்ட ஷாஹி புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வேற லெவலில் இருக்கும்
கேது நட்சத்திர பெயர்ச்சி: ஜூன் 26 முதல் இந்த 3 ராசிக்காரங்க ரொம்பவும் கவனமாக இருக்கணும்...
Ketu Transit In Chithirai Nakshatra 2023: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் அவ்வப்போது ராசியை மாற்றும். மேலும் நவகிரகங்களின் கேது நிழல் கிரகமாகும். கேது எப்போதும் பின்னோக்கி வக்ர நிலையில் தான் பயணிக்கும்.
தற்போது கேது பகவான் துலாம் ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் 2023 ஜூன் 26 ஆம் தேதி கேது பகவான் நட்சத்திர மாற்றம் நிகழவுள்ளது. அதாவது கேது சித்திரை நட்சத்திரத்திற்கு செல்லவிருக்கிறார். கேது பகவான் சித்திரை நட்சத்திரத்திற்கு செல்வதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

குறிப்பாக 3 ராசிக்காரர்கள் இக்காலத்தில் பல பிரச்சனைகளையும், சவால்களையும், சிரமங்களையும் சந்திக்க நேரிடும். இப்போது சித்திரை நட்சத்திரத்திற்கு கேது செல்வதால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
கடகம்
கேதுவின் நட்சத்திர பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு மோசமான பலன்களை அளிக்கும். முக்கியமாக தாயாரின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். தாயுடனான உறவு மோசமாகும் வாய்ப்புள்ளது. மேலும் மன உளைச்சல் அதிகரிக்கும்.
இக்காலத்தில் எவ்வித சொத்து பரிவர்த்தனைகளையும் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால் இழப்பை சந்திக்க நேரிடும். அதோடு ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
மகரம்
கேது நட்சத்திர பெயர்ச்சியானது மகர ராசிக்காரர்களுக்கு பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க வைக்கும். தந்தையுடன் தகராறு ஏற்பட வாய்ப்புள்ளது. எந்த ஒரு விஷயத்திலும் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.
பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் பல சிக்கல்களை சந்திக்கக்கூடும். வேலையை மாற்ற நினைத்தால், இக்காலத்தில் அதை தவிர்க்க வேண்டும். பணியிடத்தில் உடன் வேலை செய்வோருடன் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. குழந்தைகளால் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வியாபாரிகளுக்கு இக்காலகட்டம் சற்று சுமாராக இருக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு கேது நட்சத்திர பெயர்ச்சியானது சிரமங்களை சந்திக்க வைக்கும். முக்கியமாக ஆரோக்கிய பிரச்சனைகளால் அவதிப்பட நேரிடும். காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், கவனமாக இருக்க வேண்டும்.
இக்காலத்தில் புதிய முதலீடுகள் செய்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் இழப்புக்களை சந்திக்க நேரிடும். அதே சமயம் பயணங்கள் மேற்கொள்வதையும் தவிர்க்க வேண்டும். திருமணமானவர்கள் வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகளை சந்திக்க வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications