Latest Updates
-
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்..
கேது பெயர்ச்சி 2024: இந்த 6 ராசிக்காரங்க 2025 வரை கவனமா இருக்கணும்.. உங்க ராசியும் இதுல இருக்கா?
Ketu Transit 2024: ஜோதிடத்தின் படி, 2024 ஆம் ஆண்டில் பல முக்கிய கிரகங்கள் ராசியை மாற்றுவதோடு, பல அரிய யோகங்களும் உருவாகவுள்ளன. இப்படி கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களினால் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிகளிலுமே அதன் தாக்கம் தெரியும்.
அந்த வகையில் கிரகங்களில் கேது நிழல் கிரகமாகும். இந்த கேது ஒரு ராசியில் 18 மாதங்கள் வரை இருப்பார். மேலும் கேது எப்போதும் பின்னோக்கி வக்ர நிலையில் தான் பயணிப்பார். கேது ஒருவரை ஆன்மீக வழியில் கொண்டு செல்வார்.

இப்படிப்பட்ட கேது 2023 ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் தான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்குள் நுழைந்தார். இதனால் 2024 ஆம் ஆண்டில் கேதுவின் நிலையில் எவ்வித மாற்றமும் ஏற்படாது. இந்த ஆண்டு முழுவதும் கேது கன்னி ராசியில் தான் பயணிப்பார்.
கேது கன்னி ராசியில் பயணிப்பதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 6 ராசிக்காரர்கள் கேதுவால் பல மோசமான பிரச்சனைகளை சந்திப்பார்கள். இப்போது 2025 ஆம் ஆண்டு வரை கேதுவால் பிரச்சனைகளை சந்திக்கப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் கேதுவின் நிலையால் 2025 ஆம் ஆண்டு வரை பணியிடத்தில் சுமாரான பலன்களையே பெறுவார்கள். வேலையில் நிறைய வெற்றிகளைப் பெற முடியாது. சுற்றியிருப்பவர்களால் தவறான முடிவுகளை எடுக்கும் கட்டாயத்தில் இருப்பீர்கள். இதனால் எதிர்காலத்தில் சிக்கிக் கொள்ளும் வாய்ப்புக்கள் உள்ளன. எனவே இந்த ராசிக்காரர்கள் மற்றவர்களின் பேச்சைக் கேட்டு எந்த முடிவையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். மேலும் திருமணமானவர்களுக்கு குழந்தைகளைப் பற்றிய கவலை அதிகரிக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கடுமையான தலைவலியால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு கேதுவின் நிலையால் 2025 ஆம் ஆண்டு வரை பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். வசதிகளில் குறைவு ஏற்படும். குடும்ப வாழ்க்கை பிரச்சனைகளை நிறைந்ததாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். இடமாற்றத்தால் உங்கள் வீட்டில் அமைதி சீர்குலையும். சட்ட விஷயங்களில் சிக்கிக் கொள்ளும் வாய்புள்ளது. 2025 ஆம் ஆண்டு வரை பலவிதமான கவலைகளால் சிரமப்படுவீர்கள். உங்களின் உற்சாகமும், ஆற்றலும் குறைந்து, எப்போதும் சோர்வுடன் இருப்பீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு கேதுவின் நிலையால் அடுத்த ஒரு ஆண்டு சிறப்பாக இருக்காது. நிறைய பொறுப்புகள் இருக்கும். ஆனால் அவற்றை நிறைவேற்றுவது கடினமாக இருக்கும். இந்த பொறுப்புகளை நிறைவேற்ற கடன் வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதனால் பணச்சுமை அதிகரிக்கும் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், வாழ்க்கைத் துணையுடன் மனரீதியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மிகுந்த மன அழுத்தத்தை சந்திக்க நேரிடும். வாழ்க்கையில் உள்ள மகிழ்ச்சி குறையும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். முன்னேற்றப் பாதையில் தடைகள் ஏற்படலாம். செலவுகள் கணிசமாக அதிகரிக்கும். இதனால் வாழ்க்கையில் பிரச்சனைகள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு கேதுவின் நிலையால் 2024 ஆம் ஆண்டு முழுவதும் பிரச்சனைகள் நிறைந்ததாக இருக்கும். நல்ல செய்திகள் எதையும் பெற முடியாது. வேலையிலும் வெற்றிகளை பெற முடியாது. செலவுகள் அதிகரிக்கும். உங்களால் எதிலும் கவனத்தை செலுத்த முடியாது. இதனால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கலாம். மேலும் 2025 வரை உங்களை உங்களால் கட்டுப்படுத்த முடியாது. மேலும் நிலைமை மோசமாகும் வாய்ப்புள்ளது. உடல்நலம் மற்றும் நிதி நிலை என்று வரும்போது கேது சில வகையான பிரச்சனைகளை உருவாக்கலாம். இதில் கவனம் செலுத்தாவிட்டால் ஆரோக்கியம் மோசமடையும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு கேதுவின் நிலையால் 2025 ஆம் ஆண்டு வரை சிறப்பாக இருக்காது. பணியிடத்தில் உயர் அதிகாரிகளாலும், வீட்டில் குடும்ப உறுப்பினர்களாலும் பிரச்சனைகளை அதிகம் சந்திப்பீர்கள். ஆரோக்கிய பிரச்சனைகள் அதிகரிக்கும். இதனால் நிறைய மருத்துவ செலவுகளை சந்திக்க நேரிடும். கேதுவின் தாக்கத்தால் குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே, இக்காலத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு கேதுவின் நிலை மோசமான பலன்களையே வழங்கும். எவ்வளவு முயற்சித்தாலும் வேலையில் தடைகளை சந்திக்க நேரிடும். கேது கன்னி ராசியில் இருக்கும் வரை, இந்த ராசிக்காரர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அதுவும் கண்கள் மற்றும் பற்கள் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மேலும் மலச்சிக்கல் பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும். எனவே ஆரோக்கியமான சமச்சீரான உணவை உட்கொள்ள வேண்டும். தாயின் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கலாம். அது உங்களுக்கு மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தும். சொல்லப்போனால் தாயின் ஆரோக்கியத்திற்காக நிறைய மருத்துவ செலவுகளை செய்ய வேண்டியிருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
