Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
கேது நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 04 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு செல்வமும், வெற்றியும் குவியப் போகுது..
Ketu Nakshatra Transit 2024: வேத ஜோதிடத்தில் ராகுவும், கேதுவும் நிழல் கிரகங்களாகும். இவ்விரு கிரகங்களும் ஒரு பாவ கிரகங்களாக கருதப்படுகின்றன. ராகு மற்றும் கேது ஒரு ராசியில் 18 மாதங்கள் வரை பயணிக்கும். அதோடு இவ்விரு கிரகங்களும் வக்ர நிலையில், அதாவது பின்னோக்கி தான் பயணிக்கும்.
இதில் கேது எந்த ஒரு கிரகங்களுடன் சேர்ந்தாலும், பலமடங்கு பலன்களைத் தரும். அதே வேளையில் கேது அசுப பலன்களைத் கொடுக்கத் தொடங்கினால், தாங்க முடியாத அளவில் பிரச்சனைகளைத் தரும்ம். முக்கியமாக பணம், குடும்பம் மற்றும் ஆரோக்கியத்தில் ஏராளமான பிரச்சனைகளை உண்டாக்கும். அந்த வகையில் இன்னும் ஓரிரு நாட்களில் கேதுவின் நட்சத்திர பெயர்ச்சி நடக்கவுள்ளது.

ஜோதிடத்தின் படி, கேது 2024 மார்ச் 04 ஆம் தேதி சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார். இந்த நட்சத்திரத்தில் 2024 நவம்பர் 10 ஆம் தேதி வரை பயணிப்பார். இப்படி அஸ்தம் நட்சத்திரத்திற்கு சந்திரன் செல்வதால் சில ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான நன்மைகளும், இன்னும் சில ராசிக்காரர்கள் மோசமான பலன்களையும் பெறலாம். இப்போது கேதுவின் நட்சத்திர பெயர்ச்சியால் நல்ல பலனைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 6 ஆவது வீட்டில் கேது உள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். அத்துடன் குரு ரிஷப ராசிக்கு செல்வதால், கேதுவால் நல்ல பலன்களைப் பெறகூடும். முக்கியமாக கடன் பிரச்சனைகளில் இருந்து விடுபடக்கூடும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். தாய்வழியால் நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். சட்ட விஷயங்களில் வெற்றி கிடைக்கும். உங்கள் எதிரிகளை வீழ்த்துவீர்கள். உங்கள் வேலைகளில் இருந்த தடைகள் நீங்கும். முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். மாணவர்கள் நல்ல வெற்றியுடன் நிதி நன்மைகளையும் பெறுவார்கள்.
சிம்மம்
சிம்ம ராசியின் செல்வ வீட்டில், அதாவது 2 ஆவது வீட்டில் கேது உள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் அற்புதமான பலன்களைப் பெறுவார்கள். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெறறிகரமாக முடிவடையும்.
நீண்ட நாள் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். அதேப் போல நீண்ட நாட்காக சந்தித்து வந்த பிரச்சனைகளும் முடிவுக்கு வரும். குடும்ப வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் முடிவுக்கு வரும். ஏப்ரல் 30-க்கு பின் கேது உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வழிவகை செய்வார்.
தனுசு
தனுசு ராசியின் 10 ஆவது வீட்டில் கேது உள்ளார். இதனால் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். ஏப்ரல் 30-க்கு பின் கேது உங்களுக்கு சிறப்பான பலன்களை வாரி வழங்குவார். ஏனெனில் மே 1 ஆம் தேதி குரு ராசியை மாற்றுகிறார். இதன் விளைவாக குடும்பத்தினருடன் போதுமான நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
தொழில் ரீதியாக சிறப்பான பலன்கள் கிடைக்கும். பணியிடத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது. போட்டி தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்கள், தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறுவார்கள். முக்கியமாக நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரிகள் நிறைய லாபத்தைப் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











