Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
கார்த்திகை தீபத்தன்று உங்களுக்கு பிடிச்சவங்களுக்கு மறக்காம இத அனுப்புங்க.. சந்தோஷப்படுவாங்க..
Karthigai Deepam 2025 Wishes In Tamil: முன்பெல்லாம் பண்டிகை நாட்கள் முதல் பிறந்த நாள் வரை வாழ்த்துக்களை நேரில் சந்திக்கும் போது பரிமாறிக் கொள்வோம். ஆனால் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு நமது கலாச்சாரமும் மாறிவிட்டது. அதாவது எந்த ஒரு விசேஷம் என்றாலும், அதற்கு வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டா, எக்ஸ் தளம் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்கிறோம்.
அந்த வகையில் தீபாவளிக்கு அடுத்தப்படியாக தமிழர்கள் சிறப்பாக கொண்டாடக்கூடிய ஒரு பண்டிகை தான் கார்த்திகை தீபத் திருநாள். இந்நாளில் சிவபெருமான் அறியாமையை அகற்றும் ஒளியின் முடிவில்லாத ஆதாரமாக சிவபெருமான் தோன்றியதாக கூறப்படுகிறது. மேலும் இந்நாள் சிவபெருமானின் மகனான முருகப்பெருமானுக்கும் உகந்த நாளாகும்.

இந்த கார்த்திகை தீபத்தன்று மாலை வேளையில் வீடுகளில் விளக்குகளை ஏற்றி சிவபெருமானை வழிபாடு செய்வோம். அதற்கு முன் காலை எழுந்ததுமே நமக்கு பிடித்தவர்களுக்கு, உறவினர்களுக்கு, நண்பர்களுக்கு வாழ்த்துக்களை மொபைல் மூலம் பரிமாறிக் கொள்வோம். அப்படி வாழ்த்துக்களை ஒருவருக்கு தெரிவிக்கும் போது, அதை பார்க்கும் போது மனதில் ஒருவித மகிழ்ச்சிப் பெருகும்.
இந்த ஆண்டு கார்த்திகை தீபத்தன்று உங்கள் நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்களுக்கு அற்புதமான கார்த்திகை தீப வாழ்த்துக்களை தெரிவிக்க விரும்பினால், இதோ உங்களுக்கான சில அழகான கார்த்திகை தீப கவிதைகளுடன் கூடிய வாழ்த்துக்கள்.
1. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் கார்த்திகை தீபம் நல்வாழ்த்துக்கள்.
2. தீப விளக்குகள் உங்கள் வாழ்க்கையில் ஒளியை சேர்க்கட்டும். இனிய கார்த்திகை தீப நல்வாழ்த்துக்கள்!
3. கார்த்திகை தீபத் திருநாளில் சிவபெருமான் உங்கள் வாழ்க்கையில் இருந்து அனைத்து எதிர்மறை எண்ணங்களையும் நீக்கட்டும்.
4. கார்த்திகை தீபத் திருநாளில் உங்களுக்கு நல்ல ஆரோக்கியம், செல்வம், அமைதி மற்றும் மகிழ்ச்சி கிடைக்க வாழ்த்துகிறேன்.
5. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மிகவும் மகிழ்ச்சியான மற்றும் வளமான கார்த்திகை தீபம் நல்வாழ்த்துக்கள்!
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications




