Latest Updates
-
பெங்காலி ஸ்டைல் பெப்பர் சிக்கன் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுருக்குனு வேற லெவலில் இருக்கும் -
சுக்கிரன்-சூரியனின் ராசி மாற்றத்தால் ஜூலை மாதத்தில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
காரசாரமான.. சிக்கன் மிளகு கிரேவி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 28 ஜூன் 2026: இன்றைய நாள் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
வார ராசிபலன் (28 June 2026-04 July 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு பண கஷ்டம் முடிவுக்கு வரப்போகுது..! -
பால் போன்ற வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்ப இந்த சோள மாவு ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சன்டே ஸ்பெஷல் ஹனி கார்லிக் சிக்கன் - சிம்பிளா எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
அடுத்த 6 மாதம் இந்த 3 ராசிக்காரங்க தொழில் மற்றும் பண விஷயத்தில் கவனமா இருக்கணும்.. -
Actor Bhagyaraj Death: வாக்கிங் சென்ற பின் காலமான நடிகர் பாக்யராஜ்! உண்மையில் வாக்கிங் மாரடைப்பை ஏற்படுத்துமா? -
சத்தான.. எலுமிச்சை இஞ்சி ரசம் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
கர்நாடகாவின் அடுத்த முதல்வராக யார் வர வாய்ப்பிருக்கு? ஜோதிடம் கூறுவது என்ன?
Karnataka Election 2023: கர்நாடக சட்டசபை தேர்தல் கடந்த மே 10 ஆம் தேதி முடிவடைந்தது. தேர்தல் முடிவுகள் மே 13 ஆம் தேதி, அதாவது இன்று வெளிவரவுள்ளன. வட இந்தியாவிற்கு அடுத்தபடியாக தென்னிந்தியாவில் பாஜக-வால் ஆட்சி செய்ய முடிந்த ஒரே மாநிலம் கர்நாடகா தான். தென்னிந்தியாவின் நுழைவாயிலாக கருதப்படுவது கர்நாடகா மாநிலம் தான்.
கர்நாடக சட்டப் பேரவை தேர்தலில் மூன்று முக்கிய கட்சிகள் போட்டியிட்டுள்ளன. அவை பாஜக, காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் ஆகியவை ஆகும். 224 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவைவைக் கட்டுப்படுத்த இந்த கட்சிகள் மூன்றும் போராட வருகின்றன. ஒட்டுமொத்த இந்தியாவுமே கர்நாடக தேர்தலில் எந்த கட்சி அதிக வாக்குகளைப் பெற்று வெற்றிப் பெறப் போகிறது என்பதை தெரிந்து கொள்ள மிகவும் ஆவலாக உள்ளன.

இந்நிலையில் தற்போதைய கர்நாடக முதல்வரும், பாஜக தலைவருமான பசவராஜ் பொம்மை மற்றும் கர்நாடக காங்கிரஸ் தலைவரான டி.கே. சிவக்குமார் ஆகியோரின் ஜாதகத்தைக் கொண்டு யார் கர்நாடக மாநிலத்தின் முதல்வராக வாய்ப்புள்ளது என்பதைக் காண்போம்.
பசவராஜ் பொம்மை
தற்போது முதல்வராக இருக்கும் பசவராஜ் பொம்மை 1960 ஆம் ஆண்டு ஜனவரி 28 ஆம் தேதி ஹூப்பள்ளியில் பிறந்தார். மேஷ லக்னத்தில் சூரியன் மற்றும் சந்திரன் சேர்க்கையால் உருவான ராஜயோகத்தில் பிறப்பது மிகவும் அதிர்ஷ்டமானது. இந்த யோகத்தில் தான் பொம்மை பிறந்துள்ளார். 5 ஆவது வீட்டின் அதிபதியான சூரியன், 4 ஆவது வீட்டின் அதிபதியான சந்திரனுடன் 10 ஆவது வீட்டில் இணையும் போது, மிகவும் சக்தி வாய்ந்த ராஜயோகம் உருவாகும். 9 ஆவது வீடு தந்தையைக் குறிக்கிறது. இந்த 9 ஆவது வீட்டில் உள்ள கிரகங்களினால் தான், இவரது தந்தை எஸ்.ஆர் பொம்மையும் கர்நாடக முதல்வராக இருந்தார்.
பொம்மை 2008 முதல் 2013 ஆம் ஆண்டு வரை கர்நாடகாவின் பாஜக கட்சியின் அமைச்சராக இருந்தார். அப்போது சனி மகா தசை நடந்தது. அதேப் போல் 2021 ஜூலை மாதத்தில் பசவராஜ் தனது சனி தசையில் கர்நாடகாவின் முதல்வரானார்.
டி.கே. சிவகுமார்
டி.கே. சிவகுமார் 1961 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் தேதி கனகபுராவில் பிறந்தார். இவர் பிறக்கும் போது லக்னாதிபதியான செவ்வாய் 4 ஆவது வீட்டில் 10 ஆம் அதிபதியான சனி மற்றும் 9 ஆம் அதிபதியான குருவும் உள்ள மற்றொரு அற்புதமான ராஜயோகத்தில் பிறந்தார். சனி தசை மற்றும் புதனின் நிலையால், 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவர் கைது செய்யப்பட்டார். ஆனால் தற்போது சனி மற்றும் புதன் சாதகமான நிலையில் இருப்பதால், இக்காலம் இவருக்கு சாதகமாக இருக்கும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு தலைவர்களின் ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளைப் பார்க்கும் போது, தற்போதைய காலகட்டத்தில் இருவருக்கும் சனியின் செல்வாக்கு அதிகம் இருப்பதோடு, சனி தனது சொந்த ராசியான கும்பத்தில் உள்ளார். மேலும் மங்களகரமான கிரகமான குரு மேஷ ராசியில் உள்ளார், மே 13 ஆம் தேதி சூரியனும் மேஷ ராசியில் இருப்பதால், போட்டி சற்று அதிகமாகவே இருக்கும். இருவருக்குமே காலம் சிறப்பாக இருப்பதால், யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications