Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
ஜூன் மாதத்தில் உதயமாகும் குரு மற்றும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட மழை பொழியப் போகுது...
Jupiter Venus Rise On June 2024: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றுவதைத் தவிர, அஸ்தமனமாகி உதயமாகவும் செய்யும். அப்படி கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் ஒவ்வொரு மாற்றங்களும் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.
அந்த வகையில் மங்களகரமான கிரகமான குரு பகவான் மே 01 ஆம் தேதி ரிஷப ராசியில் நுழைந்த ஓரிரு நாட்களிலேயே அஸ்தமனமானார். அதேப் போல் சுக்கிரனும் அஸ்தமன நிலையில் தற்போது ரிஷப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் வருகிற ஜூன் மாதத்தில் இவ்விரு கிரகங்களும் உதயமாகவுள்ளனர்.

இதனால் ஜூன் மாதத்தில் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. இப்போது ஜூன் மாதத்தில் உதயமாகும் குரு மற்றும் சுக்கிரனால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
குருவும், சுக்கிரனும் உதயமாவதால் ரிஷப ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதமானது மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. முக்கியமாக திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்கள் தங்கள் வேலைகளை வெற்றிகரமாக முடிப்பார்கள். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புக்கள் கிடைக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும்.
சிம்மம்
குரு மற்றும் சுக்கிரன் ஜூன் மாதத்தில் உதயமாவதால் சிம்ம ராசிக்காரர்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றியுடன் லாபமும் கிடைக்கும். பணிபுரிபவர்கள் சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவற்றைப் பெறலாம். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நண்பர்களுடனான உறவு இனிமையாக இருக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பழைய முதலீட்டில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு குரு மற்றும் சுக்கிரனின் உதயமானது சாதகமான பலன்களைத் தரும். குறிப்பாக வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். வியாபாரிகளுக்கு எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும். தடைபட்ட பணம் கைக்கு வந்து சேரும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வணிகர்கள் புதிய ஒப்பந்தங்களால் நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புக்களைப் பெறுவார்கள். மேலும் இந்த ஒப்பந்தங்களானது எதிர்காலத்தில் நல்ல லாபத்தையும் தரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications