Latest Updates
-
1 வாரமானாலும் கொத்தமல்லி கெட்டுபோகக் கூடாதா? அப்ப இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க.. -
குழந்தை பெற்றுக்கொள்ள 52 லட்சம் போனஸ் கொடுக்கும் நாடு - எந்த நாடு? ஏன் கொடுக்கிறது தெரியுமா? -
மகம் நட்சத்திரத்தில் 3 கிரகங்களின் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
புதன் சொந்த ராசிக்குள் செல்வதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்! இதன் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிடும் டாக்டர்! -
1 கப் சுண்டல் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி சுக்கா செய்யுங்க - தோசை, சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து கன்னியில் உருவாகும் பத்ர மகாபுருஷ ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு அளவற்ற செல்வம் கிடைக்கும்! -
கீ போர்டுகளில் எழுத்துக்கள் ஏன் வரிசையாக இல்லாமல் மாறி மாறி உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கும்பகோணம் கல்யாண வீட்டு கடப்பா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
குரு, சுக்கிரனால் உருவான அரிய ராஜயோகம்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகுது...
Jupiter Venus Made Kam Rajyoga: ஜோதிடத்தின் படி, 2023 ஆம் ஆண்டின் டிசம்பர் மாதம் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இந்த ஆண்டில் உருவாகாத சில யோகங்கள் இந்த மாதத்தில் உருவாகின்றன. இந்த யோகங்களால் டிசம்பர் மாதம் மட்டுமின்றி, 2024 ஆம் ஆண்டின் தொடக்கம் பல ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாகவும் இருக்கும்.
அதில் ஆடம்பரம், செழிப்பின் காரணியாக கருதப்படும் சுக்கிரன், தனது சொந்த ராசியான துலாம் ராசியில் பயணித்து வருகிறார். அதே வேளையில் குரு பகவான் மேஷ ராசியில் பயணித்து வருகிறார். இதனால் குரு மற்றும் சுக்கிரனுக்கு இடையே சமசப்தம யோகம் உருவாகிறது. இந்நிலையில் குரு மற்றும் சுக்கிரனால் காம என்ற யோகம் உருவாகிறது.

காம யோகத்தின் தாக்கமானது அனைத்து ராசிகளிலுமே காணப்படுவதோடு, இந்த யோகம் ஒரு மங்களகரமான யோகம். இது அனைத்து ராசிகளையும் நிறைவேற்றும் மற்றும் பலவிதமான மகிழ்ச்சியைத் தரும். அதோடு நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். இப்போது குரு மற்றும் சுக்கிரனால் உருவாகியுள்ள காம யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் குறித்துக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு காம யோகமானது நல்ல பலனைத் தரும். முக்கியமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
பணிபுரிபவர்களுக்கு வேலையில் நல்ல வெற்றி கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வியாபாரம் செய்பவர்களுக்கு அபரிமிதமான நிதி நன்மைகள் கிடைக்கும். குடும்பத்துடன் போதுமான நேரத்தை செலவிடுவீர்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு காம யோகமானது மகிழ்ச்சியைத் தரப் போகிறது. குரு மற்றும் சுக்கிரனின் அருளால் தடைபட்ட வேலைகள் வெற்றிகரமாக தொடக்கப்படும். புதிய வீடு, வாகனம், சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும்.
பெற்றோரின் முழு ஆதரவும் கிடைக்கும். வீட்டை அழகாக்க நிறைய பணம் செலவாகும். தந்தையின் முழு ஆதரவு கிடைக்கும். உடன் பிறந்தவர்களுடனான உறவு நன்றாக இருக்கும். முக்கியமாக நீண்ட நாள் ஆசைகள் இந்த யோக காலத்தில் நிறைவேறும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு காம யோகமானது நல்ல வெற்றிகளை பெற வைக்கும். இக்காலத்தில் எந்த ஒரு வேலையை செய்தாலும், அதில் வெற்றியைக் காண்பீர்கள். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும்.
சமூகத்தில் உங்களின் நிலையும், பெயரும் மேம்படும். உடன் பிறந்தவர்களுடனான உறவு நன்றாக இருக்கும். வியாபாரிகளுக்கு நிறைய லாபம் கிடைக்கும், குழந்தைகளால் சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். மாணவர்கள் உயர்கல்வி படிக்க விரும்பினால், அந்த ஆசை நிறைவேறும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications