Latest Updates
-
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா?
12 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள கஜலட்சுமி யோகம்: அடுத்த 8 நாட்கள் இந்த 3 ராசிக்கு பண மழை பொழியப்போகுது..
Jupiter Venus Conjunction Made Gajlaxmi Yog In Taurus 2024: வேத ஜோதிடத்தின் படி கிரகங்களின் ராசி மாற்றங்கள் மற்றும் கிரக சேர்க்கைகளால் உருவாகும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அந்த வகையில் தேவர்களின் குருவான குரு பகவான் 12 ஆண்டுகள் கழித்து செல்வத்தை அளிப்பரான சுக்கிரனின் ராசியான ரிஷப ராசிக்குள் நுழைந்தார்.
அதே சமயம் இந்த ரிஷப ராசியில் சுக்கிரனும் தற்போது பயணித்து வருகிறார். இதனால் ரிஷப ராசியில் குரு மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் மிகவும் மங்களகரமான யோகமான கஜலட்சுமி யோகம் உருவாகியுள்ளது. இந்த யோகமானது ஒருவரது நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தை தரும், செழிப்பான வாழ்க்கையை வாழ வழிவகை செய்யும்.

இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்களுக்கு இந்த யோகமானது அபரிமிதமான செல்வத்தை வழங்கும். அதோடு தொழிலில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும். இப்போது ரிஷப ராசியில் உருவாகியுள்ள கஜலட்சுமி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் முதல் வீட்டில் கஜலட்சுமி யோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆளுமை மேம்படும். வசதி வாய்ப்புக்களும் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை முன்பை விட சிறப்பாக இருக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை மிகவும் இனிமையாக இருக்கும். இந்த யோகத்தால் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கைத் துணையும் முன்னேற்றத்தைக் காண்பார்கள். பணிபுரிபவர்கள் வேலையில் நல்ல வெற்றியைப் பெறுவதோடு, முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்களையும் பெறுவார்கள். கூட்டு வணிகம் செய்பவர்களுக்கு நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசியின் 9 ஆவது வீட்டில் கஜலட்சுமி யோகம் உருவாகியுள்ளது. இதனால் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வெளிநாடு செல்லும் வாய்ப்புக்களும் கிக்கும். உயர் கல்வி படிக்க விரும்புவோருக்கு அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். மாணவர்கள் முன்பை விட படிப்பில் சிறந்து விளங்குவார்கள். நிதி நிலையில் எதிர்பாராத அளவில் முன்னேற்றம் ஏற்படும். முக்கியமாக தந்தையின் முழு ஆதரவு கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசியின் 4 ஆவது வீட்டில் கஜலட்சுமி யோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல பொருள் இன்பத்தைப் பெறுவார்கள். புதிய வாகனம், வீடு போன்றவற்றை வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். குழந்தைகளிடம் இருந்து நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். பண வரவு அதிகரிக்கும். காதல் வாழ்க்கை முன்பை விட சிறப்பாக இருக்கும். ரியல் எஸ்டேட் வேலைகளை செய்பவர்களுக்கு, இந்த யோக காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications