Latest Updates
-
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க..
12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: ஏப்ரல் 24 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட மழை கொட்டும்..
Jupiter Venus Conjunction In Aries On 24 April 2024: நவகிரகங்களில் குரு மங்களகரமான கிரகமாக கருதப்படுகிறார். இவர் தேவர்களின் குருவாக கருதப்படும் குரு பகவான் ஆண்டிற்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். இவர் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாவார். இந்த குரு தற்போது மேஷ ராசியில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் அசுரர்களின் குருவாக கருதப்படும் மற்றும் செல்வம், அழகு, காதல் ஆகியவற்றின் காரணியாக கருதப்படும் சுக்கிரன் ஏப்ரல் 24 ஆம் தேதி மேஷ ராசிக்குள் நுழையவுள்ளார். ஏற்கனவே மேஷ ராசியில் குரு பயணித்து வரும் நிலையில் சுக்கிரனும் நுழைவதால் மேஷ ராசியில் குரு சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இந்த சேர்க்கையானது சுமார் 12 ஆண்டுகளுக்கு பின் நிகழவுள்ளது.

இதனால் இந்த சேர்க்கையின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதில் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கப் போகிறது. சொல்லபோனால் அதிர்ஷ்டத்தின் ஆதரவால் செல்வத்தையும், வெற்றிகளையும் குவிக்கப் போகிறார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
துலாம்
துலாம் ராசியின் 7 ஆவது வீட்டில் குரு சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கை மிகவும் இனிமையாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். கூட்டு வணிகம் செய்து வந்தால், நல்ல லாபம் கிடைக்கும். தைரியம் இருமடங்கு அதிகரிக்கும். எடுக்கும் காரியங்களில் வெற்றி கிடைக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் பதவி உயர்வைப் பெற வாய்ப்புள்ளது.
மேஷம்
மேஷ ராசியின் முதல் வீட்டில் குரு சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆளுமை மேம்படும். சமூகத்தில் செல்வாக்கு, கௌரவம் போன்றவை அதிகரிக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் நல்ல பலன்களைப் பெறுவார்கள். இக்காலத்தில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் நல்ல பலனைத் தரும். குரு மற்றும் சுக்கிரனின் அருளால் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். புதிய வேலையைத் தொடங்க நினைத்தால், இக்காலம் அதற்கு சாதகமாக இருக்கும்.
மீனம்
மீன ராசியின் 2 ஆவது வீட்டில் குரு சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத பணத்தை அடிக்கடி பெறுவார்கள். பேச்சால் பல வேலைகளை திறம்பட முடிப்பீர்கள். உங்களின் ஆளுமையும் மேம்படும். உங்களின் நட்பை பெற பலரும் விரும்புவர். புதிய வாகனம் வாங்க வேண்மென்ற ஆசை நிறைவேறும். தொழிலதிபவர்கள் சிக்கிய பணத்தைப் பெறுவார்கள் மற்றும் நல்ல லாபத்தையும் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications