Latest Updates
-
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..
12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் நிகழும் குரு-சுக்கிர சேர்க்கை: இந்த 3 ராசிக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது..
Jupiter Venus Conjunction 2024 In Aries After 12 Years: வேத ஜோதிடத்தில், தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். அதேப் போல் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இவ்விரு கிரகங்களுமே மங்களகரமான கிரகங்களாகும். ஜோதிடத்தின் படி கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றும்.
சில சமயங்களில் ஒரே ராசியில் ஒன்றிற்கு மேற்பட்ட கிரகங்கள் ஒன்றிணைந்து பயணிக்கும். அதில் சில கிரகங்களின் சேர்க்கை பல ஆண்டுகளுக்கு பின் நிகழலாம். அந்த வகையில் குரு மற்றும் சுக்கிரனின் சேர்க்கை மேஷ ராசியில் சுமார் 12 ஆண்டுகளுக்கு பின் நிகழவுள்ளது.

இந்த கிரக சேர்க்கையானது 2024 ஏப்ரல் 24 ஆம் தேதி நிகழவுள்ளது. இந்த கிரக சேர்க்கையின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதில் சில ராசிக்காரர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டியிருந்தாலு, சில ராசிக்காரர்களுக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப் போகிறது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் முதல் வீட்டில் குரு சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதத்தில் வெற்றிகள் குவியும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். தொழிலில் தொடர்ச்சியாக நல்ல லாபத்தைப் பெறக்கூடும். பணிபுரிபவர்களின் செயல்திறன் இக்காலத்தில் நல்ல பாராட்டைப் பெறும். சிலர் அலுவலகத்தில் பதவி உயர்வைப் பெற வாய்ப்புள்ளது. அதோடு திடீர் பண ஆதாயத்தையும் பெற வாய்ப்புள்ளது. திருமணமானவர்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் 11 ஆவது வீட்டில் குரு-சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வலுவடையும். தொழில் ரீதியாக, நல்ல வெற்றியும், நிதி நன்மைகளும் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பணியிடத்தில் உங்கள் அர்ப்பணிப்பைக் கண்டு, உயர் அதிகாரிகள் உங்களுக்கு பதவி உயர்வை வழங்கலாம். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
கடகம்
கடக ராசியின் 10 ஆவது வீட்டில் குரு-சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் அனைத்து துறைகளிலும் நல்ல வெற்றியைக் காண்பார்கள். சிலர் புதிய தொழிலை தொடங்குவதற்கான வாய்ப்புக்களைப் பெறுவார்கள். இந்த புதிய தொழில் எதிர்காலத்தில் பல நன்மைகளைத் தருவதாக இருக்கும். காதல் வாழ்க்கையைப் பொறுத்தவரை, இனிமையாக இருக்கும். உங்களின் புத்திசாலித்தனம் அனைவரையும் ஈர்ப்பதாக இருக்கும். சமூகத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications