Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
பரணி செல்லும் குரு பகவானால் இன்று முதல் இந்த 6 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது..
Jupiter Transit in Bharani Nakshatra 2023: நவகிரகங்களில் குரு பகவான் மிகவும் மங்களகரமான கிரகமாகும். ஜோதிடத்தில் குரு பகவான் மிகவும் முக்கியமான இடத்தை வகிக்கிறார். இவர் ஆண்டிற்கு ஒருமுறை ராசியை மாற்றுவார்.
குரு பகவானின் ராசி மாற்றமானது அனைத்து ராசிகளிலுமே தாக்கத்தை ஏற்படுத்தும். குரு ஞானம் மற்றும் அறிவின் காரணியாக கருதப்படுகிறார். குரு ஒருவரது ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால், அவர் நல்ல செல்வ செழிப்போடு இருப்பார்.

குரு பகவான் ராசி மாற்றம் மட்டுமின்றி, நட்சத்திர மாற்றமும் அடைவார். அந்த வகையில் குரு பகவான் ஜூன் மாதம் 21 ஆம் தேதி பரணி நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியாகிறார். இப்படி நட்சத்திர பெயர்ச்சியாகும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே நல்ல மற்றும் கெட்ட தாக்கத்தை ஏற்படுத்தும்.
குரு பகவான் பரணி நட்சத்திரத்திற்கு செல்வதால் 6 ராசிக்காரர்கள் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளார்கள். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் தொழில் வாழ்க்கையில் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள். வியாபாரிகளுக்கு நல்ல லாபமும், வியாபாரத்தை விரிவுபடுத்தும் வாய்ப்புக்களும் கிடைக்கும். இக்காலத்தில் நல்ல வருமானம் கிடைப்பதோடு, முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். திருமணமானவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். தம்பதிகளுக்கு இடையே நல்ல பிணைப்பு ஏற்படும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 12 ஆவது வீட்டில் குரு இருப்பதால், வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் மற்றும் வருமானத்திற்கு உயர்வு ஏற்படக்கூடும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் உள்ளவர்கள், இனிமேல் நல்ல லாபத்தை காண்பார்கள். ஆன்மீகத்தில் திடீரென்று ஆர்வம் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை சீராக இருக்கும். ஆனால் அவ்வப்போது சிறு ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 9 ஆவது வீட்டில் குரு இருப்பதால், சிம்மராசிக்காரர்கள் தங்கள் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் பதவி உயர்வைப் பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. அரசு வேலை செய்பவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். வியாபாரிகள் நல்ல லாபத்தைத் தரக்கூடிய புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! புதிய தொழிலை தொடங்க இது சிறந்த காலமாக இருக்கும். குரு பகவான் 7 ஆவது வீட்டில் இருப்பதால், வாழ்வில் சாதகமான பலன்கள் கிடைக்கும். குருவின் நிலையால் இனிமேல் துலாம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும். முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்கள் கிடைக்கும். எந்த ஒரு காரியத்தில் கை வைத்தாலும், அதில் வெற்றி கிடைக்கும். எனவே நேர்மறையான மனநிலையுடன் எந்த ஒரு விஷயத்தையும் செய்யுங்கள். நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு தொழில் அல்லது வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன. வியாபாரத்திலும் எதிர்பார்த்த வளர்ச்சியைப் பெறக்கூடும். இக்காலத்தில் பல சாதனைகளைப் புரிவீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். மாணவர்கள் தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவுகளைப் பெறுவார்கள்.
மகரம்
குருவின் நிலையால் வேலை தேடிக் கொண்டிருக்கும் மகர ராசிக்காரர்கள் புதிய வேலையைப் பெற வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். அரசு வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வுக்கான வாய்ப்புக்கள் உள்ளன. தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கும் இக்காலம் பிரகாசமாக இருக்கும். குடும்பத்தில் இதுவரை உள்ள பிரச்சனைகள் நீங்கி, குடும்ப உறுப்பினர்களிடையேயான உறவுகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications