Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
12 ஆண்டுகளுக்கு பின் மேஷம் செல்லும் குருவால் இந்த 4 ராசிக்காரர்களின் வாழ்க்கை பிரகாசிக்கப் போகுது...
Jupiter Transit In Aries On April 2023: நவகிரகங்களில் மங்களகரமான கிரகமாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் தனது சொந்த ராசியான மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு 2023 ஏப்ரல் 22 ஆம் தேதி செல்கிறார். குரு 2023 ஆம் ஆண்டில் தனது நிலையை பலமுறை மாற்றவுள்ளார். ஆனால் இந்த மேஷ ராசியில் தான் அடுத்த ஓராண்டு காலம் குரு பகவான் பயணிக்கவுள்ளார்.
மேஷ ராசிக்கு குரு பகவான் நுழைந்த சில நாட்களிலேயே, அதாவது ஏப்ரல் 27 ஆம் தேதி குரு பகவான் உதயமாகிறார். மேலும் மேஷ ராசிக்கு குரு நுழைந்ததும், ஏற்கனவே அந்த ராசியில் பயணித்து வரும் ராகுவுடன் சேர்ந்து அக்டோபர் மாதம் வரை பயணிக்கவுள்ளார். இதனால் மேஷ ராசியில் ராகு-குரு சேர்க்கையால் குரு சண்டால் யோகம் உருவாகவுள்ளது. இந்த யோகமானது அக்டோபர் மாதம் வரை இருக்கும்.

அதன் பின் குரு பகவான் 2023 செப்டம்பர் 04 ஆம் தேதி மேஷ ராசியில் குரு வக்ரமாகவுள்ளார். இறுதியாக டிசம்பர் 31 ஆம் தேதி குரு வக்ர நிவர்த்தி அடைந்து நேர்பாதையில் பயணிக்கவுள்ளார். இப்படி குருவின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களின் தாக்கமானது அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 4 ராசிக்காரர்கள் இந்த குரு பெயர்ச்சியால் ஏராளமான நற்பலனைப் பெறவுள்ளார்கள். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் முதல் வீட்டிற்கு குரு செல்கிறார். இதனால் ஏப்ரல் 22 முதல் மேஷ ராசிக்காரர்களுக்கு அடுத்த ஓராண்டு காலம் மிகவும் அற்புதமாக இருக்கும். குருவின் அருளால் நிதி நிலைமை மிகவும் சிறப்பாக இருக்கும். வேலை செய்பவர்கள் தங்கள் பணியிடத்தில் பல நற்பலன்களையும், வெற்றிகளையும் பெறுவார்கள். மாணவர்கள் படிப்பில் நல்ல வெற்றி காண்பார்கள். காதலிப்பவர்கள் குருவின் அருளால் திருமணம் செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 9 ஆவது வீட்டிற்கு குரு செல்கிறார். இதனால் சிம்ம ராசிக்காரர்கள் குருவின் நிலையால் அட்டகாசமான பலன்களைப் பெறுவார்கள். முக்கியமாக இக்காலம் சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும். நிதி ரீதியாக, நல்ல லாபத்தைக் காண வாய்ப்புள்ளது. ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பணிபுரிபவர்கள் தங்கள் துறையில் நற்பலன்களைப் பெறுவார்கள். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் நல்ல லாபம் கிடைக்கும். வெளிநாட்டில் உயர்கல்வி படிக்க விரும்புபவர்களின் எண்ணங்கள் நிறைவேறும்.
கடகம்
கடக ராசியின் 10 ஆவது வீட்டிற்கு குரு செல்கிறார். இதனால் கடக ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி காலம் சாதகமாக இருக்கும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள் மற்றும் வணிக திட்டங்கள் அனைதத்தும் வெற்றிகரமாக முடிக்கப்படும். இது தவிர வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்களை காணக்கூடும். இந்த மாற்றங்கள் எதிர்காலத்தில் நன்மையளிக்கும் வகையில் இருக்கும்.
துலாம்
துலாம் ராசியின் 7 ஆவது வீட்டிற்கு குரு செல்கிறார். இதனால் துலாம் ராசிக்காரர்கள் அடுத்த ஓராண்டு காலம் சாதகமான பலன்களைப் பெறுவார்கள். வியாபாரம் மற்றும் தொழில் என இரண்டிலும் நல்ல வெற்றிகள் கிடைக்கும். இக்காலத்தில் நல்ல பண பலன்களும் கிடைக்கும். திருமணமானவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையுடன் மிகவும் ரொமான்டிக்கான நேரத்தை செலவிடும் வாய்ப்பைப் பெறுவார்கள் மற்றும் இருவருக்கும் இடையேயான பிணைப்பு அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications