Latest Updates
-
பாபா வங்காவின் கணிப்புப்படி பெட்ரோல் விலையில் என்னென்ன மாற்றம் வரப்போகிறது தெரியுமா? -
சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: ஆகஸ்ட் 22 முதல் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 6 ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
கறிவேப்பிலை சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 19 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஅழுத்தமான நாளாக இருக்குமாம் -
செப்டம்பரில் மிதுன ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் புதிய உச்சத்தை தொடுவாங்க.. -
சனி-சூரியன் உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் துரதிர்ஷ்டத்தையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 2 ராசிகள் -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஆலூ சன்னா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செய்யுங்க - மட்டன் குருமா மாதிரி இருக்கும் -
சப்பாத்திக்கு இந்த ப்ளைன் குருமா செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் கணக்கில்லாம சாப்பிடுவாங்க.. -
விபூதியை நெற்றியில் எப்படி வைக்க வேண்டும்? நெற்றியில் விபூதி வைப்பதன் அர்த்தம் என்ன தெரியுமா? -
Vastu Tips: வீட்டில் பணம் அதிகமா சேரணுமா? அப்ப வீட்டுல இந்த செடியை வாங்கி வையுங்க..
2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
Jupiter Transit 2024 Make Kubera Yog: தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். இவர் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாவார். இந்த குரு பகவான் ஒரு ராசியில் 1 ஆண்டு காலம் வரை இருப்பார். தற்போது குரு பகவான் மேஷ ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் மே 1 ஆம் தேதி குரு பெயர்ச்சி நிகழவுள்ளது.
இந்த பெயர்ச்சியின் போது குரு பகவான் சுக்கிரனின் ராசியான ரிஷப ராசிக்குள் நுழைகிறார். பொதுவாக குரு பெயர்ச்சியாகும் போது அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதுவும் குரு ரிஷப ராசியில் நுழையும் போது, குபேர யோகம் உருவாகவுள்ளது. குபேர யோகமானது ஒரு மங்களகரமான யோகமாகும்.

இந்த யோகத்தால் சில ராசிக்காரர்கள் ஏராளமான செல்வத்தைப் பெற்று பணக்காரராகும் வாய்ப்புள்ளது. இப்போது குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகத்தால் எந்த ராசிக்காரர்கள் நல்ல நிதி நன்மைகளைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் முதல் வீட்டில் குபேர யோகம் உருவாகவுள்ளதால், இந்த ராசிக்காரர்கள் நல்ல பொருள் இன்பங்களைப் பெறுவார்கள். தொழில் ரீதியாக நல்ல வெற்றிகளைப் பெற வாய்ப்புள்ளது. இதுவரை தொழிலில் பிரச்சனைகளை சந்தித்து வந்தால், அது முடிவுக்கு வரும். பணிபுரிபவர்கள் சம்பள உயர்வைப் பெற வாய்ப்புள்ளது. அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். நிதி வாழ்க்கை அற்புதமாக இருக்கும். நிதி ரீதியாக எடுக்கும் முடிவுகள் நல்ல பலனைத் தரும். புதிய வருமான ஆதாரங்களைப் பெறக்கூடும். தேவையற்ற செலவுகளில் இருந்து விடுபடுவீர்கள்.
கடகம்
கடக ராசியின் 11 ஆவது வீட்டில் குபேர யோகம் உருவாகவுள்ளது. இதனால் குழந்தைகளால் நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரிகள் மற்றும் கூட்டு வணிகம் செய்பவர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். புதிய வருமானம் கிடைக்கும். தொழில் தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். நிதி நிலையில் எதிர்பாராத அளவில் முன்னேற்றம் ஏற்படும். பணிபுரிபவர்கள் உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவார்கள். பதவி உயர்வையும் பெற வாய்ப்புள்ளது. காதல் வாழ்க்கையைப் பொறுத்தவரை, இனிமையாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசியின் 9 ஆவது வீட்டில் குபேர யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் அபரிமிதமான செல்வத்தைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு மே முதல் அற்புதமாக இருக்கும். சிலர் பதவி உயர்வைப் பெறவும் வாய்ப்புள்ளது. குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ளலாம். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உயர் கல்விக்காக வெளியூர் பயணம் மேற்கொள்ள வாய்ப்புக்கள் கிடைக்கும். நிதி ரீதியாக, பண வரவு நன்றாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications