Latest Updates
-
சிம்ம ராசிக்கு சென்றுள்ள புதன்: இன்று முதல் இந்த 3 ராசிக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுது.. -
சிக்கன் எடுத்தா இப்படி மசாலா அரைச்சு கிரேவி செஞ்சு பாருங்க.. பூரி, சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 23 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நல்ல செய்திகள் தேடிவரப்போகுதாம் -
வார ராசிபலன் (23 August 2026 - 29 August 2026)- உங்க ராசிப்படி இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா -
மலபார் சிக்கன் கறி ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இளம் வயதிலேயே சொந்த வீடு வாங்கும் யோகம் இருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
சவூதி அரேபியாவில் இந்திய ஓட்டுநர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
ஐயங்கார் ஸ்டைல் அஞ்சறைப் பெட்டி குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஆகஸ்ட் 28-ல் நடக்கும் சந்திர கிரகணத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துன்பங்கள் துரத்தப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
முட்டைக்கோஸும், உருளைக்கிழங்கும் வெச்சு இப்படி கிரேவி செய்யுங்க.. பூரி, சப்பாத்திக்கு அள்ளும்..
குரு நட்சத்திர பெயர்ச்சியால் ஏப்ரல் முதல் இந்த 3 ராசியின் தூங்கிக் கொண்டிருந்த அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது..
Jupiter Transit 2024 In Pooratadhi Nakshatra: தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். ஜோதிடத்தில் குரு பகவான் ஆண்டிற்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். இது தவிர அவ்வபோது நட்சத்திரங்களையும் மாற்றுவார். தற்போது செவ்வாய் ஆளும் மேஷ ராசியில் பயணித்து வருகிறார்.
அதோடு பிப்ரவரி மாதம் முதலாக சதய நட்சத்திரத்திலும் பயணித்து வருகிறார். இந்த சதய நட்சத்திரத்தில் ஏப்ரல் மாதம் 06 ஆம் தேதி வரை பயணிப்பார். அதன் பின் பூரட்டாதி நட்சத்திரத்திற்கு செல்வார். குரு பகவானின் ராசி மாற்றம் மட்டுமின்றி நட்சத்திர மாற்றமும் 12 ராசிகளிலும் ஏதோ ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஏப்ரல் மாதம் பூரட்டாதி நட்சத்திரத்திற்குள் நுழையும் குரு பகவான், இந்த நட்சத்திரத்தில் அக்டோபர் வரை இருப்பார். பூரட்டாதி நட்சத்திரமானது கும்ப ராசியை சேர்ந்தது. கும்ப ராசியின் அதிபதி சனி பகவான். இதனால் இந்த குரு நட்சத்திர பெயர்ச்சியானது சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. இப்போது பூரட்டாதி நட்சத்திரத்திற்கு செல்லும் குரு பகவானால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
சிம்மம்
சிம்ம ராசியின் 9 ஆவது வீட்டில் குரு பகவான் பயணித்து வருகிறார். இந்நிலையில் குரு நட்சத்திர பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களின் நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். வெளியூர் அல்லது வெளிநாடு செல்ல வேண்டுமென்ற ஆசை இருந்தால், அது நிறைவேறும். மாணவர்கள் உயர் கல்வி படிக்கும் வாய்ப்புக்களைப் பெறுவார்கள். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். தந்தை மற்றும் குருவின் ஆதரவு கிடைக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்.
கடகம்
கடக ராசியின் 10 ஆவது வீட்டில் குரு பகவான் பயணித்து வருகிறார். இத்தகைய சூழ்நிலையில் கடக ராசிக்காரர்களுக்கு குருவின் நட்சத்திர பெயர்ச்சியானது பல நன்மைகளை வழங்கும். தொழிலில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். அரசு அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். புதிய வருமான ஆதாரங்களைப் பெறக்கூடும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். நிதி நிலையில் உயர்வு ஏற்படும். குழந்தைகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். பங்குச் சந்தை மூலம் நல்ல லாபம் கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும்.
மிதுனம்
மிதுன ராசியின் 9 ஆவது வீட்டில் குரு பகவான் பயணித்து வருகிறார். இந்நிலையில் குருவின் நட்சத்திர பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். சிலருக்கு புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படும் மற்றும் நிறைய பணத்தை சம்பாதிப்பீர்கள். அரசியலில் இருப்பவர்கள் இந்த பெயர்ச்சிக்கு பின் நல்ல பலன்களைப் பெறுவார்கள். உங்களின் முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் நல்ல பலன்களைப் பெறுவார்கள். புதிய வேலையைத் தொடங்கினால், அதில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்துடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications