Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
குருவின் அருளால் அடுத்த 12 மாதம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வெற்றி கிடைக்கப் போகுது...
Jupiter Transit 2023: வேத ஜோதிடத்தின் படி, குரு பகவான் 2023 ஏப்ரல் 22 ஆம் தேதி, அதாவது இன்று மேஷ ராசிக்குள் நுழைகிறார். அதுவும் மேஷ ராசியின் அஸ்வினி நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் குரு பகவான் நுழைந்துள்ளார்.
இந்த மேஷ ராசியில் குரு பகவான் ஒரு ஆண்டு காலம் பயணிக்கவுள்ளார். குருவின் ராசி மாற்றம் அனைத்து ராசிகளிலுமே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக குருவின் ராசி மாற்றத்தால் பல ராசிக்காரர்களின் தொழில் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.

அதுவும் 5 ராசிக்காரர்கள் அஸ்வினி நட்சத்திரத்தில் நுழைந்துள்ள குரு பகவானால் தொழிலில் சிறப்பான வெற்றிகளைக் காணவுள்ளார்கள். இப்போது 2023 குரு பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்கள் தொழிலில் நல்ல வெற்றியையும், லாபத்தையும் காணப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் 11 ஆவது வீட்டிற்கு குரு சென்றுள்ளார். இதனால் நீண்ட காலமாக பதவி உயர்வுக்காக காத்துக் கொண்டிருந்த மிதுன ராசிக்காரர்கள், இந்த குரு பெயர்ச்சிக்கு பின் பதவி உயர்வைப் பெறவுள்ளார்கள். 11 ஆவது வீட்டில் குரு இருப்பதல், தொழில் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களை காணக்கூடும். உங்களின் கடின உழைப்புக்கான பலன் இந்த காலகட்டத்தில் கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 9 ஆவது வீட்டிற்கு குரு சென்றுள்ளார். இதனால் சிம்ம ராசிக்காரர்கள் தங்களின் பணியிடத்தில் அட்டகாசமான பலன்களைப் பெறுவார்கள். உங்களின் பணி உயர் அதிகாரிகளால் நல்ல பாராட்டை பெற வைக்கும். இதுவரை பணியிடத்தில் பிரச்சனைகளை சந்தித்து வந்தவர்கள், இந்த குரு பெயர்ச்சிக்கு பின் பிரச்சனைகள் நீங்கி சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். முக்கியமாக கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசியின் 8 ஆவது வீட்டிற்கு குரு சென்றுள்ளார். இதனால் கனனி ராசிக்காரர்கள் தொழில் ரீதியாக ஏராளமான நற்பலனைப் பெறவுள்ளார்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு கைநிறைய சம்பளத்துடன் ஒரு நல்ல வேலை தேடி வரும். வியாபாரிகளுக்கு இந்த நல்ல லாபத்தை அள்ளித் தரும் காலமாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசியின் 5 ஈவது வீட்டிற்கு குரு சென்றுள்ளார். இதனால் வேலையை மாற்ற நினைத்துக் கொண்டிருக்கும் தனுசு ராசிக்காரர்களுக்கு நல்ல மற்றும் எதிர்பார்த்த வேலை வாய்ப்பு கிடைக்கும். தொழில் ரீதியாக, இக்காலம் நல்ல முன்னேற்றத்தைத் தரும். கூடுதலாக பணிபுரிபவர்கள், பதவி உயர்வைப் பெற வாய்ப்புள்ளது.
மகரம்
மகர ராசியின் 4 ஆவது வீட்டிற்கு குரு சென்றுள்ளார். இதனால் மகர ராசிக்காரர்களுக்கு இக்காலம் அருமையாக இருக்கும். அதுவும் இக்காலத்தில் நீங்கள் கடினமாக உழைத்தால், அதற்கான அங்கீகாரம் மட்டுமின்றி, பதவி உயர்வும் கிடைக்கும். கூடுதலாக, பணியிடத்தில் உங்கள் அதிகாரிகள் உங்களின் வேலையை கூர்ந்து கவனிப்பார். இதனால் உங்கள் மீதான அபிப்ராயம் சற்று மேம்பட்டிருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

