Latest Updates
-
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
Varalakshmi Vratam 2026: வரலட்சுமி விரதத்தின் போது டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் -
முட்டை குழம்பை இந்த பக்குவத்துல செய்யுங்க.. மட்டன் குழம்பு ருசியில செமயா இருக்கும்.. -
உங்க கல்லீரலில் பிரச்சனை வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 3 காற்கறிகளை வாரந்தோறும் சாப்பிடுங்க.. -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
பாபா வங்காவின் கணிப்புப்படி பெட்ரோல் விலையில் என்னென்ன மாற்றம் வரப்போகிறது தெரியுமா? -
சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: ஆகஸ்ட் 22 முதல் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 6 ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
கறிவேப்பிலை சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 19 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஅழுத்தமான நாளாக இருக்குமாம் -
செப்டம்பரில் மிதுன ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் புதிய உச்சத்தை தொடுவாங்க..
ரிஷபத்தில் உதயமாகும் குரு பகவான்: ஜூன் 03 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து வீசப் போகுது...
Jupiter Rise On 03 June 2024: வேத ஜோதிடத்தில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் ஒன்பது கிரகங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தவராக கருதப்படுகிறார். ஒருவரது ஜாதகத்தில் குரு நல்ல நிலையில் இருந்தால், அந்நபர் நல்ல செழிப்பான வாழ்க்கையை வாழ்வார்.
குரு பகவான் ஆண்டிற்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். இவர் தனுசு மற்றும் மீன ராசிக்காரர்களின் அதிபதியாவார். இந்த குரு பகவான் மே 01 ஆம் தேதி ரிஷப ராசியில் நுழைந்தார். இந்த ராசியில் நுழைந்த ஒரிரு நாட்களிலேயே குரு பகவான் அஸ்தமனமானார். கிரகங்கள் அஸ்தமன நிலையில் இருந்தால், நற்பலன்களை வழங்குவதில் தாமதம் ஏற்படும் மற்றும் பல்வேறு மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்நிலையில் குரு பகவான் ஜூன் 03 ஆம் தேதி உதயமாகவுள்ளார். குரு உதயமாவதால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கை பிரகாசிக்கப் போகிறது. இப்போது குரு பகவான் உதயமாவதால் எந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 2 ஆவது வீட்டில் குரு உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவதோடு, அதிர்ஷ்டத்தையும் பெறுவார்கள். தொழிலைப் பொறுத்தவரை, புதிய வேலை கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. வேலை மாற்றம் செய்யும் போது வாழ்க்கை சற்று சிறப்பாக இருக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வெளிநாட்டில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடனான வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கடகம்
கடக ராசியின் 11 ஆவது வீட்டில் குரு உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வியாபாரத்தில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். பண வரவு அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வியாபாரிகள் அதிக லாபத்தைப் பெறுவார்கள். புதிய வருமான ஆதாரங்களை உருவாக்குவீர்கள். வாழ்க்கையில் எதிர்பாராத அளவில் நல்ல மாற்றம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசியின் 9 ஆவது வீட்டில் குரு உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் உதவியால் வேலையை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பண வரவு அதிகரிக்கும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். உறவுகளைப் பொறுத்தவரை, வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நீண்ட நாள் ஆரோக்கிய பிரச்சனைகள் முடிவுக்கு வந்து, உடல் நலம் சிறப்பாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications