Latest Updates
-
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்..
குரு உதயம் உருவாக்கிய மகா தன ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு...
Maha Dhan Rajyoga: ஜோதிடத்தில் மிகவும் மங்களகரமான கிரகமாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் 12 மாதங்களுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் மாறுவார். குரு நல்ல நிலையில் இருந்தால், அவர் நல்ல செல்வத்துடன் செழிப்பான வாழ்க்கையை வாழ்வார்.
அதே சமயம், வேத ஜோதிடத்தில் மிகவும் அற்புதமான ஒரு யோகம் தான் மகா தன ராஜயோகம். இந்த யோகமானது 2023 ஏப்ரல் 27 ஆம் தேதி குரு உதயமானதால் உருவாகியுள்ளது. இந்த யோகத்தால், சில ராசிக்காரர்களின் செல்வ நிலை பெருகி, பணக்காரராகும் வாய்ப்புள்ளது. இப்போது மகா தன ராஜயோகத்தால் செல்வந்தராகும் யோகம் கொண்ட அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்
மகா தன ராஜயோகமானது மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். ஏனெனில் மேஷ ராசியில் குரு உச்சம் பெற்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். தொழிலில் நல்ல பலன்கள் கிடைக்கும். பணிபுரிபவர்கள் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றைப் பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தையும், வெற்றியையும் பெறுவார்கள். நிதி நிலையைப் பொறுத்தவரை, மிகவும் சிறப்பாக இருக்கும். திருமணமானவர்கள் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவைப் பெறுவார்கள். கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல பலனைப் பெற வாய்ப்புள்ளது.
கடகம்
மகா தன ராஜயோகமானது கடக ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்களை வாரி வழங்கவுள்ளது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். தொழில் வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
வியாபாரம் செய்பவர்கள் இனிமேல் நல்ல லாபத்தைக் காண்பார்கள். ஆனால் சனியின் தாக்கம் இருப்பதால், இந்த ராசிக்காரர்கள் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இருப்பினும், சனி பகவானை வணங்குவதன் மூலம் இதைத் தவிர்க்கலாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு மகா தன ராஜயோகமானது எதிர்பாராத பல நற்பலன்களை வழங்கவுள்ளது. திருமணமானவர்கள் குழந்தைகளால் நல்ல செய்திகளைப் பெறக்கூடும். குழந்தைகளால் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். காதல் வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும்.
பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக நிலம், வீடு, வாகனம் போன்றவற்றை வாங்க வேண்டுமென்ற ஆசை இருந்தால், இனிமேல் அதெல்லாம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் உருவாகும். முக்கியமாக நிதி நிலையில் எதிர்பாராத அளவில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications