Latest Updates
-
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான்
ரிஷப ராசியில் உதயமாகியுள்ள குரு பகவான்: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பொற்காலமா இருக்கும்...
Jupiter Rise In Taurus On June 2024: ஜோதிட சாஸ்திரத்தின் படி, வியாழன் என்னும் குரு ஞானத்தின் கிரகம் மற்றும் நன்மை தரும் கிரகமாகும். தேவர்களின் குருவாக கருதப்படும் குரு பகவான் ஆண்டிற்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். இவர் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாவார்.
இந்த குரு தற்போது சுக்கிரனின் ராசியான ரிஷப ராசியில் பயணித்து வருகிறார். இந்த ராசிக்கு மே 01 ஆம் தேதி தான் நுழைந்தார். இந்த ராசியில் நுழைந்த ஓரிரு நாட்களிலேயே குரு பகவான அஸ்தமனமானார். பொதுவாக கிரகங்கள் அஸ்தமன நிலையில் பலவீனமாக இருக்கும் மற்றும் அதனால் கிடைக்கவிருக்கும் நற்பலன்களிலும் தடைகள் ஏற்படும்.

இந்நிலையில் ஜூன் 03 ஆம் தேதி குரு பகவான் ரிஷப ராசியில் உதயமானார். குரு உதயமானதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதில் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பாகவும், சிலருக்கு மோசமாகவும் இருக்கும். இப்போது குரு உதயமானதால் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 2 ஆவது வீட்டில் குரு உதயமாகியுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நிதி ரீதியாக அதிர்ஷ்டத்தை அனுபவிப்பார்கள். சிலர் வெளிநாட்டு பயணங்களால் பயனடையலாம். தொழில் ரீதியாக, நன்றாக இருக்கும். வியாபாரிகளுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வாழ்க்கை துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களை அனுபவிப்பீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும். இருப்பினும் தூக்க பிரச்சனைகளை சந்திக்கும் வாய்ப்புள்ளது.
ரிஷபம்
ரிஷப ராசியின் முதல் வீட்டில் குரு உதயமாகியுள்ளார். இதனால் வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்களை நீங்கள் சந்திக்க நேரிடும். பணிபுரிபவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் மற்றும் இழப்புக்களை சந்திக்கவும் வாய்ப்புள்ளது. நிதி ரீதியாக அதிக செலவுகளை சந்திக்க நேரிடும். குடும்பப் பிரச்சனைகள் காரணமாக உங்கள் துணையுடன் தகராறு ஏற்படலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, தலைவலியால் பாதிக்கப்படலாம்.
மிதுனம்
மிதுன ராசியின் 12 ஆவது வீட்டில் குரு உதயமாகியுள்ளார். இதனால் குடும்பப் பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம். பணியிடத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் உடன் வேலை செய்வோருடன் மோதல்களை சந்திக்க நேரிடும். வியாபாரத்தில், உங்கள் எதிர்பார்ப்புகளை விட லாபம் குறையும். நிதி ரீதியாக, சில ஆதாயங்களைக் காணும் நேரத்தில், குடும்பத்திற்காக அதிக செலவு செய்ய வேண்டியிருக்கும். உறவுகளைப் பொறுத்தவரை, குடும்ப உறுப்பினர்களுடன் வாக்குவாதங்கள் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைக்காக அதிக மருத்துவ செலவுகளை சந்திக்க நேரிடும்.
கடகம்
கடக ராசியின் 11 ஆவது வீட்டில் குரு உதயமாகியுள்ளார். இதனால் இனிமேல் வருமானத்தையும் வெற்றியையும் பெறக்கூடும். தொழில் ரீதியாக, அதிர்ஷ்டமாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரிகளுக்கு சிறப்பாக இருக்கும். நிதி ரீதியாக, நன்றாக சம்பாதித்து எதிர்காலத்திற்காக சேமிப்பீர்கள். வாழ்க்கைத் துணையுடன் நல்ல உறவைப் பேணலாம். ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 10 ஆவது வீட்டில் குரு உதயமாகியுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வழக்கமான நடவடிக்கைகளில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். தொழிலைப் பொறுத்தவரை, உங்கள் வேலையில் ஏற்ற இறக்கங்களை நீங்கள் சந்திக்க நேரிடும். உங்கள் வேலையை மாற்றுவதற்கு நீங்கள் நினைக்கலாம். அப்படி மாற்றினால் உங்கள் வருமானம் அதிகரிக்கும். நிதி ரீதியாக, உங்கள் குழந்தைகளின் தேவைகளுக்காக நீங்கள் அதிக நிதியை ஒதுக்க வேண்டியிருக்கும். மன அழுத்தம் உங்கள் வாழ்க்கை துணையுடன் பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்தலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நீங்கள் தொண்டை தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கலாம்.
கன்னி
கன்னி ராசியின் 9 ஆவது வீட்டில் குரு உதயமாகியுள்ளார். இதனால் இனிவரும் காலம் உங்களுக்கு சாதகமாகவும், வியாபாரிகளுக்கு வெற்றியை தரக்கூடியதாகவும் இருக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் உயர்அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவார்கள். நிதி ரீதியாக, வருமானம் அதிகரிக்கும் மற்றும் நிறைய பணத்தை சேமிக்க முடியும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசியின் 8 ஆவது வீட்டில் குரு உதயமாகியுள்ளார். இதனால் எதிர்பாராத அளவில் லாபத்தைப் பெறக்கூடும். அதே சமயம் உங்கள் முன்னேற்றத்தில் தாமதத்தையும் சந்திக்க நேரிடும். பணியிடத்தில் வேலைப்பளுவை சந்திக்கலாம். சிலர் வேலையை விட்டு வெளியேற விரும்பலாம். வியாபாரிகள் இழப்புக்களை சந்திக்கவும் வாய்ப்புள்ளது. நிதி ரீதியாக, நீங்கள் எதிர்பாராத விதமாக பணத்தைப் பெறலாம். ஆனால் அது தாமதமாக இருக்கும். உறவுகளில், தவறான புரிதல்கள் உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடுகளுக்கு வழிவகுக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை கடுமையான தொண்டை நோய்த்தொற்றுகளுக்கு ஆளாகலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 7 ஆவது வீட்டில் குரு உதயமாகியுள்ளார். இதனால் புதிய நண்பர்களைப் பெறுவீர்கள் மற்றும் பயணத்திற்காக அதிக பணத்தை செலவிடுவீர்கள். தொழிலில், உங்கள் கடின உழைப்பு உங்கள் மேலதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்டு பாராட்டப்படும். வியாபாரத்தில், அதிக லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. நிதி ரீதியாக, நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் உதவியால் அதிகப் பணத்தைப் பெறலாம். வாழ்க்கைத் துணையுடனான உறவு நன்றாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இருப்பினும், அவ்வப்போது தலைவலியால் பாதிக்கப்படலாம்.
தனுசு
தனுசு ராசியின் 6 ஆவது வீட்டில் குரு உதயமாகியுள்ளார். இதனால் அதிக மன அழுத்தம் மற்றும் குடும்ப பிரச்சனைகளை சந்திக்கலாம். தற்போதைய வேலையில் நீங்கள் அதிக சங்கடத்தையும் அழுத்தத்தையும் உணரலாம். வியாபாரிகள் இழப்புகளுடன் எதிர்பாராத சவால்களையும் சந்திக்கலாம். நிதி ரீதியாக, கடன்கள் மூலம் ஆதாயங்கள் அதிகம் கிடைக்கும். துணையுடன் நல்ல உறவைப் பேணுவது கடினமாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நீங்கள் கால் வலி மற்றும் தோல் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
மகரம்
மகர ராசியின் 5 ஆவது வீட்டில் குரு உதயமாகியுள்ளார். இதனால் எதிர்காலம் மற்றும் குழந்தைகளைப் பற்றிய கவலை அதிகரிக்கும். தொழில் ரீதியாக, வேலை மாற்றங்கள் மற்றும் அதிக வேலைப்பளுவை சந்திக்க நேரிடும். வியாபாரிகளுக்கு மிதமான லாபம் கிடைக்கும். நிதி ரீதியாக சில இழப்புக்களை சந்திக்க நேரிடும் மற்றும் குறைவாகவே சேமிக்க முடியும். உறவுகளைப் பொறுத்தவரை, வாழ்க்கைத் துணையுடன் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். சில குடும்ப பிரச்சனைகளை உங்கள் வாழ்க்கை துணையுடன் பேசி தீர்த்துக்கொள்ளலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, குழந்தைகளின் ஆரோக்கியத்திற்காக பணத்தைச் செலவிட வேண்டியிருக்கும்.
கும்பம்
கும்ப ராசியின் 4 ஆவது வீட்டில் குரு உதயமாகியுள்ளார். இதனால் குறிப்பிடத்தக்க மகிழ்ச்சியையும் ஆறுதலையும் அனுபவிப்பீர்கள். தொழிலைப் பொறுத்தவரை, வேலையில் அதிக வெற்றியையும் திருப்தியையும் பெறுவீர்கள். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். நிதி ரீதியாக, உங்களுக்காகவும் உங்கள் குடும்பத்திற்காகவும் திருப்தியுடன் செலவிடுவீர்கள். உறவுகளைப் பொறுத்தவரை, வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதங்களை சந்திக்க நேரிடும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்கள் தாயின் ஆரோக்கியத்திற்காக நிறைய செலவுகளை செய்ய வேண்டியிருக்கும்.
மீனம்
மீன ராசியின் 3 ஆவது வீட்டில் குரு உதயமாகியுள்ளார். இதனால் வேலையை மாற்றலாம் அல்லது தற்போதைய நிலையில் திருப்தி இல்லாததை அனுபவிக்கலாம். நிதி ரீதியாக, உங்கள் வருமானம் குறைந்து வருவதை நீங்கள் கவனிக்கலாம். வியாபாரத்தில், நீங்கள் அதிக லாபம் பெற முடியாது. ஆனால் குறிப்பிடத்தக்க இழப்புக்களை தவிர்க்கலாம். உறவுகளைப் பொறுத்தவரை, மோசமான தகவல்தொடர்பு காரணமாக உங்கள் வாழ்க்கைத் துணையுடன் பிரச்சனைகளை சந்திக்கலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கண் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.



Click it and Unblock the Notifications