ரிஷப ராசியில் குரு உதயமானதால் இனி இந்த 8 ராசிக்காரங்களோட மருத்துவ செலவு அதிகரிக்கப் போகுது.. உஷார்..

Jupiter Rise In Taurus 2024: வேத ஜோதிடத்தில் குரு மிகவும் மங்களகரமான கிரகங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த குரு பகவான் சமீபத்தில் தான் ரிஷப ராசியில் நுழைந்தார். இந்த ராசியில் நுழைந்த இரண்டாவது நாளே குரு பகவான் அஸ்தமனமாகி பலவீனமான நிலையில் இருந்தார்.

இந்நிலையில் குரு பகவான் ஜூன் மாத தொடக்கத்தில், அதாவது ஜூன் 03 ஆம் தேதி உதயமானார். குரு உதயமானதால் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். குறிப்பாக இந்த குரு உதயத்தின் தாக்கமானது ஒருவரது ஆரோக்கியத்திலும் தெரியும்.

Jupiter Rise In Taurus 2024 Health Of These Zodiac Signs Will Suffer a Lot

அதில் சில ராசிக்காரர்களின் ஆரோக்கியம் சிறப்பாகவும், சிலருக்கு மோசமாகவும் இருக்கலாம். இப்போது ரிஷப ராசியில் குரு உதயமானதால் எந்த ராசிக்காரர்கள் ஆரோக்கிய பிரச்சனைகளால் நிறைய மருத்துவ செலவுகளை சந்திக்கப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

ரிஷபம்

ரிஷப ராசியின் முதல் வீட்டில் குரு உதயமாகியுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கை துணையின் ஆரோக்கியம் மோசமடைய வாய்ப்புள்ளன. அவர்களின் ஆரோக்கியத்திற்காக நிறைய மருத்துவ செலவுகளை செய்ய வேண்டியிருக்கும். அதோடு இந்த ராசிக்காரர்கள் தலைவலியால் அதிகம் அவதிப்பட நேரிடும். இதற்கு அதிக மன அழுத்தம் தான் காரணம்.

மிதுனம்

மிதுன ராசியின் 12 ஆவது வீட்டில் குரு உதயமாகியுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் மோசமடையக்கூடும். இது தவிர இந்த ராசிக்காரர்கள் தங்கள் ஆரோக்கியத்திற்காகவும் அதிக செலவுகளை செய்ய வேண்டியிருக்கும்.

சிம்மம்

சிம்ம ராசியின் 10 ஆவது வீட்டில் குரு உதயமாகியுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆரோக்கியத்தைப் பற்றி கூற வேண்டுமானால், இவர்கள் தொண்டையில் கடுமையான தொற்றால் அவதிப்பட வாய்ப்புள்ளது. இது மட்டுமின்றி, பலவிதமான ஆரோக்கிய பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும். எனவே ஆரோக்கிய விஷயத்தில் கூடுதல் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

துலாம்

துலாம் ராசியின் 8 ஆவது வீட்டில் குரு உதயமாகியுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களும் கடுமையான தொண்டை தொற்றால் அவதிப்படுவார்கள். இதற்கு சில அழற்சிகள் காரணமாக இருக்கலாம். எனவே ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துங்கள்.

தனுசு

தனுசு ராசியின் 6 ஆவது வீட்டில் குரு உதயமாகியுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் கால் வலியால் அதிகம் அவதிப்படுவார்கள். இது தவிர தோல் தொடர்பான பிரச்சனைகளையும் அதிகம் சந்திக்க நேரிடும். எனவே சற்று கவனமாக இருங்கள்.

மகரம்

மகர ராசியின் 5 ஆவது வீட்டில் குரு உதயமாகியுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் குழந்தையின் சிகிச்சைக்காக அதிக பணம் செலவழிக்க வாய்ப்புகள் உள்ளன. இந்த ராசிக்காரர்களின் குழந்தைகளின் ஆரோக்கியம் சற்று மோசமாக இருக்கும். எனவே குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனமாக இருங்கள்.

கும்பம்

கும்ப ராசியின் 4 ஆவது வீட்டில் குரு உதயமாகியுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்கள் தாயாரின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். தாயாரின் ஆரோக்கியம் மோசமடைவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. ஏனெனில் இந்த ராசிக்காரர்கள் தாயாரின் ஆரோக்கியத்திற்காக நிறைய செலவுகளை சந்திக்க நேரிடும்.

மீனம்

மீன ராசியின் 3 ஆவது வீட்டில் குரு உதயமாகியுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கண்கள் தொடர்பான பிரச்சனைகளால் அவதிப்படக்கூடும். கண்களில் சிறு பிரச்சனைகளை சந்தித்தாலும், தாமதிக்காமல் மருத்துவரை அணுகி கண்களை பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Desktop Bottom Promotion