Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
குரு உதயமாவதால் ஏப்ரல் 27 முதல் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா?
Jupiter Rise In Aries 2023: ஜோதிடத்தின் படி, கிரகங்களின் இயக்கம் மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. நவகிரகங்களில் மங்களகரமான கிரகமாக கருதப்படுபவர் குரு. இந்த குரு ஒருவரது ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால், அவரது வாழ்க்கை செழிப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்.
இப்படிப்பட்ட குரு பகவான் 2023 மார்ச் 28 ஆம் தேதி மீன ராசியில் இருக்கும் போது அஸ்தமனமானார். அதாவது வலுவிழந்த நிலையில் மாறினார். இந்த அஸ்தமன நிலையிலேயே தான் குரு பகவான் 2023 ஏப்ரல் 22 ஆம் தேதி மேஷ ராசிக்குள் நுழைந்தார்.

இந்நிலையில் குரு பகவான் 2023 ஏப்ரல் 27 ஆம் தேதி மேஷ ராசியில் உதயமாகவுள்ளார். குரு உதயமாவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். இருப்பினும் 3 ராசிக்காரர்கள் குரு உதயமாவதால் சற்று கவனமாக இருக்க வேண்டும். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 12 ஆவது வீட்டில் குரு உதயமாகிறார். ஏற்கனவே இந்த வீட்டில் ராகு, சூரியன், புதன் இருப்பதால், செலவுகள் அதிகரிக்கும். நிதி விஷயங்களில் சற்று ஜாக்கிரதையாக இல்லாவிட்டால், பண பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆரோக்கிய விஷயத்திலும் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
அதுவும் சர்க்கரை நோய் இருப்பவர்கள் மற்றும் கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இக்காலத்தில் வாழ்க்கைத்துணையுடன் எந்த ஒரு வாக்குவாதத்திலும் ஈடுபடாதீர்கள். இல்லாவிட்டால் பிரிவினையை சந்திக்க நேரிடும்.
கன்னி
கன்னி ராசியின் 8 ஆவது வீட்டில் குரு உதயமாகிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் குடும்பத்தில் கருத்து வேறுபாடுகளை சந்திக்க நேரிடும். இக்காலத்தில் பேச்சைக் கட்டுப்படுத்தாவிட்டால், அதன் விளைவாக பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
பணியிடத்தில் சண்டையில் ஈடுபடுவதைத் தவிர்த்திடுங்கள். இல்லாவிட்டால் உயர் அதிகாரிகளின் கோபத்தால் அதற்கான தண்டனையை சந்திக்க நேரிடும். முக்கியமாக உங்கள் மாமியார்-மாமனார் பக்கத்தில் எந்த ஒரு நிதி பரிவர்த்தனைகளையும் இக்காலத்தில் வைத்துக் கொள்ளாதீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 6 ஆவது வீட்டில் குரு உதயமாகிறார். இதனால் இக்காலத்தில் எதிரிகளால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வேலையை மாற்ற நினைத்தால், அதை கைவிடுங்கள். ஏனெனில் இக்காலத்தில் வேறு வேலை கிடைக்காது.
உங்களின் தினசரி வழக்கத்தை ஒழுங்காக கடைப்பிடித்து வாருங்கள். இல்லாவிட்டால் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். குறிப்பாக இந்த காலகட்டத்தில் உங்களின் தனிப்பட்ட விஷயங்கள் அல்லது ரகசியங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

