குரு உதயமாவதால் இந்த 5 ராசிக்காரர்களின் தூங்கிக் கொண்டிருந்த அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகுது...

Jupiter Rise In Aries 2023: சூரிய மண்டலத்தில் மிகப்பெரிய கிரகம் தான் வியாழன். இந்த வியாழன் ஜோதிடத்தில் குரு பகவானாக கருதப்படுகிறது. நவகிரகங்களிலேயே குரு பகவான் மிகவும் மங்களகரமான மற்றும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவராவார். குரு ஒருவரது ஜாதகத்தில் நல்ல நிலையில் இருக்க வேண்டும்.

அப்படி இருந்தால், குரு பகவான் செழிப்பு, ஞானம், அறிவு மற்றும் வெற்றி ஆகியவற்றை வழங்கி ஆசீர்வாதம் செய்வார். இப்படிப்பட்ட குரு பகவான் 12 ஆண்டுகளுக்கு பின் ஏப்ரல் 22 ஆம் தேதி மேஷ ராசிக்குள் நுழைந்துள்ளார்.

Jupiter Rise In Aries 2023: These Zodiac Signs Get More Benefits In Tamil

குருவின் இயக்கங்களில் எந்த மாற்றங்கள் ஏற்பட்டாலும் அது மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குரு மேஷ ராசிக்குள் நுழையும் போதே அஸ்தமன நிலையில் இருந்தார். இந்நிலையில் ஏப்ரல் 27 ஆம் தேதி குரு மேஷ ராசியில் உதயமாகவுள்ளார்.

குரு பகவான் மேஷ ராசியில் உதயமாவதால் சில ராசிக்காரர்களின் தூங்கிக் கொண்டிருந்த அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. இப்போது எந்த ராசிக்காரர்கள் குரு உதயமாவதால் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

மேஷம்

மேஷ ராசியின் முதல் வீட்டில் குரு உதயமாகவுள்ளார். இதனால் இக்காலத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். பணியிடத்தில் உடன் பணிபுரிபவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பதவி உயர்வுகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். ஜாதகத்தில் குருவின் நிலையைப் பொறுத்து, சிலருக்கு இடமாற்றத்திற்கு வாய்ப்புள்ளது.

மிதுனம்

மிதுன ராசியின் 11 ஆவது வீட்டில் குரு உதயமாகவுள்ளார். இதனால் பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் மரியாதையும், நற்பெயரும் அதிகரிக்கும். சிலருக்கு புதிய வேலை வாய்ப்புகள், பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கலாம். சிலருக்கு வெளிநாட்டில் செட்டில் ஆகும் வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் ரீதியாக நல்ல வளர்ச்சியைக் காணலாம். தங்களின் இலக்குகளை எளிதில் அடையலாம். வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தை பெறக்கூடும்.

கடகம்

கடக ராசியின் 10 ஆவது வீட்டில் குரு உதயமாகவுள்ளார். பணிபுரிபவர்கள் மற்றும் அரசு வேலை செய்பவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். குறிப்பாக பதவி உயர்வு, புதிய வேலை வாய்ப்புகள், நற்பெயர், அங்கீகாரம் போன்றவை கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். ஜாதகத்தில் குருவின் நிலையைப் பொறுத்து, சிலருக்கு வேலையில் மாற்றங்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. அரசு வேலை செய்பவர்களுக்கு இடமாற்றத்திற்கு வாய்ப்புள்ளது. வியாபாரிகள் மிதமான லாபத்தைக் காணலாம்.

சிம்மம்

சிம்ம ராசியின் 9 ஆவது வீட்டில் குரு உதயமாகவுள்ளார். இதனால் தொழில் ரீதியாக நேர்மறையான மற்றும் எதிர்மறையான பலன்களைப் பெறக்கூடும். சிலர் பதவி உயர்வுகளைப் பெற வாய்ப்புள்ளது. வேலை தொடர்பான பயணங்களால் நல்ல பலன்கள் கிடைக்கும். மேலதிகாரிகளிடம் இருந்து நல்ல அங்கீகாரத்தைப் பெறுவீர்கள். வேலையை மாற்றுவதற்கான நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வணிகர்கள் கலவையான பலன்களைப் பெறுவார்கள். வணிகர்களுக்கு அதிக போட்டி இருக்கும். ஆனால் இக்காலத்தில் நன்கு சிந்தித்து செயல்பட்டால் நல்ல முடிவைப் பெறலாம்.

தனுசு

தனுசு ராசியின் 5 ஆவது வீட்டில் குரு உதயமாகவுள்ளார். இதனால் இக்காலத்தில் குழந்தைகளின் ஆதரவு கிடைக்கும். பணிபுரிபவர்கள் தங்கள் வேலையில் திருப்தி, அங்கீகாரம் மற்றும் பதவி உயர்வு போன்றவற்றைப் பெறலாம். சிலர் புதிய வேலை வாய்ப்புக்களைப் பெறக்கூடும். தொழிலதிபர்கள் இக்காலத்தில் நல்ல லாபத்தைப் பெற வாய்ப்புள்ளது. சிறந்த யோசனை மற்றும் முழு திறமைகளைப் பயன்படுத்தினால், வணிகத்தில் முன்னேற்றத்தைக் காணலாம். சிலர் புதிய வணிக வாய்ப்புக்களைப் பெறலாம்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Wednesday, April 26, 2023, 9:11 [IST]
Desktop Bottom Promotion