Latest Updates
-
இன்றைய ராசிபலன் 26 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஜாலியான நாளாக இருக்குமாம் -
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்!
குரு உதயமாகியிருப்பதால் இந்த 3 ராசிக்காரர்களின் கையில் பணம் அதிகம் சேரும்.. சேமிப்பு அதிகரிக்கும்..
Jupiter Rise 2023 In Tamil: வேத ஜோதிடத்தில் மிகவும் மங்களகரமான கிரகமாக கருதப்படுபவர் குரு. இந்த குரு பகவான் ஆண்டிற்கு ஒரு முறை ராசியை மாற்றுவார். இவர் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாவார். இந்த குரு பகவான் 2023 ஏப்ரல் 22 ஆம் தேதி மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்குள் நுழைந்தார்.
மேஷ ராசியில் நுழைந்த குரு பகவானின் தாக்கமானது அடுத்த ஒரு ஆண்டு காலம் 12 ராசிகளிலும் காணப்படும். இந்த மேஷ ராசியில் நுழைவதற்கு முன் குரு பகவான் மார்ச் 28 ஆம் தேதி மீன ராசியில் இருக்கும் போதே அஸ்தமனமானார். இந்த அஸ்தமன நிலையிலேயே மேஷ ராசிக்குள் நுழைந்தார்.

அதன் பின் ஏப்ரல் 27 ஆம் தேதி குரு பகவான் உதயமானார். குரு உதயமாகியிருப்பதால், சில ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கப் போகிறது. அதுவும் குருவின் அருளால் அடுத்த ஒரு ஆண்டு காலம் நல்ல செல்வமும், மரியாதையும் கிடைக்கும். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் முதல் வீட்டில் குரு உதயமாகிறார். இதனால் மேஷ ராசிக்காரர்கள் தொழில் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். நல்ல நிதி நன்மைகள் கிடைக்கும். திருமணமாகாதவராக இருந்தால், அவர்களுக்கு இந்த ஆண்டில் நல்ல வரன் கிடைக்கும். மாணவர்களுக்கு இக்காலத்தில் நல்ல வெற்றி கிடைக்கும். நிலுவையில் உள்ள அரசு தொடர்பான வேலைகள், இனிமேல் தடையின்றி முடிவடையும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 9 ஆவது வீட்டில் குரு உதயமாகிறார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் தந்தையின் முழு ஆதரவைப் பெறுவார்கள். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் சில முக்கிய பொறுப்புக்கள் வழங்கப்படும். ஷேர் மார்கெட்டில் இருப்பவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். நிதி ரீதியாக மிகவும் சிறப்பாக இருக்கும். நிறைய சேமிக்க முடியும்.
தனுசு
தனுசு ராசியின் 5 ஆவது வீட்டில் குரு உதயமாகிறார். இதனால் இந்த ராசியைச் சேர்ந்த மாணவர்களின் படிப்பில் இருந்த தடைகள் நீங்கும். அரசு வேலை செய்பவர்களுக்கு இனிமேல் மிகவும் சிறப்பாக இருக்கும். வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். முதலீடு செய்ய நினைப்பவர்கள், இனிமேல் செய்தால் நல்ல லாபத்தை பெறலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications