Latest Updates
-
39 மனைவிகள், 94 குழந்தைகள் என ஆலமரமாய் வாழ்ந்த இந்தியர் யார் தெரியுமா? உலகிலேயே பெரிய குடும்பம் இவரோடதுதான் -
பெங்காலி ஸ்டைல் பெப்பர் சிக்கன் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுருக்குனு வேற லெவலில் இருக்கும் -
சுக்கிரன்-சூரியனின் ராசி மாற்றத்தால் ஜூலை மாதத்தில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
காரசாரமான.. சிக்கன் மிளகு கிரேவி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 28 ஜூன் 2026: இன்றைய நாள் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
வார ராசிபலன் (28 June 2026-04 July 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு பண கஷ்டம் முடிவுக்கு வரப்போகுது..! -
பால் போன்ற வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்ப இந்த சோள மாவு ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சன்டே ஸ்பெஷல் ஹனி கார்லிக் சிக்கன் - சிம்பிளா எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
அடுத்த 6 மாதம் இந்த 3 ராசிக்காரங்க தொழில் மற்றும் பண விஷயத்தில் கவனமா இருக்கணும்.. -
Actor Bhagyaraj Death: வாக்கிங் சென்ற பின் காலமான நடிகர் பாக்யராஜ்! உண்மையில் வாக்கிங் மாரடைப்பை ஏற்படுத்துமா?
வக்ர குருவால் உருவான கஜலட்சுமி ராஜயோகம்: இனிமேல் இந்த 3 ராசிக்காரர்களின் கையில் பணம் அதிகம் சேரும்...
Jupiter Retrograde Made Gajalakshmi Rajyoga: வேத ஜோதிடத்தின் படி கிரகங்களின் ராசி மாற்றங்கள் அவ்வப்போது நிகழும். அதோடு கிரகங்கள் அவ்வப்போது வக்ரமாகி பின்னோக்கி பயணிக்கவும் செய்யும்.
அப்படி கிரகங்களின் இயக்கங்களில் ஏற்படும் மாற்றங்களால் சில சமயங்களில் சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகக்கூடும். இந்த யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.

அந்த வகையில் மங்களகரமான கிரகமான குரு பகவான் 2023 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் மேஷ ராசிக்குள் நுழைந்தார். அதைத் தொடர்ந்து செப்டம்பர் 04 ஆம் தேதி மேஷ ராசியில் வக்ரமானார். தேவர்களின் குரு வக்ரமாகியிருப்பதோடு, கஜலட்சுமி ராஜயோகத்தையும் உருவாக்கியுள்ளார்.
கஜலட்சுமி ராஜயோகமானது மங்களகரமான யோகமாகும். இந்த யோகத்தால் ஒருவரது செல்வம் அதிகரிப்பதோடு, தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றியைக் காணக்கூடும். இப்போது குரு பகவான் உருவாக்கிய கஜலட்சுமி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு கஜலட்சுமி யோகமானது அற்புதமான பலனை வழங்கும். குரு பகவான் முதல் வீட்டில் வக்ரமாகியுள்ளார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் ஆளுமையில் நல்ல மாற்றம் ஏற்படும். இக்காலத்தில் போடப்படும் திட்டங்கள் அனைத்தும் வெற்றிகரமாக நடக்கும். அலுவலகத்தில் பணிபுரிபவர்களின் செல்வாக்கு அதிகரிக்கும்.
வியாபாரிகளுக்கு புதிய யோசனையால் பெரிய லாபம் கிடைக்கும். இக்காலத்தில் எடுக்கப்படும் முக்கியமான முடிவு ஒன்று ஒரு பெரிய லாபத்தைத் தரும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு சிறப்பாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு கஜலட்சுமி ராஜயோகமானது மங்களகரமானதாக இருக்கும். மீன ராசியின் 2 ஆவது வீட்டில் குரு பகவான் உள்ளார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் குழந்தைகள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள் மற்றும் அவர்களால் நற்செய்திகளைப் பெறுவீர்கள்.
நிதி நிலை உயரும் மற்றும் சமுகத்தில் மரியாதை அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். மாணவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். மீன ராசியின் அதிபதி குரு என்பதால், இக்காலம் அதிர்ஷ்டமானதாக இருக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு கஜலட்சுமி யோகமானது பல நற்பலன்களை அளிக்கும். ஏனெனில் குரு பகவான் 10 ஆவது வீட்டில் வக்ரமாகியுள்ளார். இதனால் இக்காலத்தில் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றியும், லாபமும் கிடைக்கும். வியாபாரிகளுக்கு சிக்கிய பணம் கிடைக்கும்.
வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. தந்தையுடனான உறவு சிறப்பாக இருக்கும். அவரது முழு ஆதரவு இக்காலத்தில் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைப்பதால், இக்காலத்தில் மேற்கொள்ளும் அனைத்து காரியங்களிலும் நல்ல வெற்றி கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications