Latest Updates
-
காலிஃபிளவரை இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இந்தியாவின் பிரதமருக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இட்லிக்கு இப்படி தக்காளி குழம்பு செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 02 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் பொன்னாகப் போகுதாம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கப்போகுது! -
லன்ச்பாக்ஸ்-க்கு ஏற்ற மிளகு சாதமும், உருளைக்கிழங்கு ப்ரையும் - எப்படி செய்யணும் தெரியுமா? -
இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலையம் எது? அது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
தினமும் வீட்டில் கற்பூரத்துடன் பிரியாணி இலை சேர்த்து எரிங்க.. அப்புறம் நடக்குறத பாருங்க.. ஆச்சரியப்படுவீங்க.. -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த நெல்லை ஸ்டைல் கொத்சை ட்ரை பண்ணுங்க - அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசிகள் எல்லோரையும் அவங்க கட்டுப்பாட்டில் வைத்து ஆட்டி படைப்பவர்களாக இருப்பார்களாம்
12 ஆண்டுகளுக்கு பின் மேஷ ராசியில் வக்ரமாகும் குரு: இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்..
Jupiter Retrograde In Aries On September 2023: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களில் மங்களகரமான கிரகமாக வியாழன் கருதப்படுகிறது. இந்த வியாழன் குரு பகவானாக கருதப்படுகிறது. இந்த குரு மீனம் மற்றும் தனுசு ராசிகளின் அதிபதியாவார்.
குரு பகவான் ஆண்டிற்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். இவர் ராசியை மாற்றும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். இப்படிப்பட்ட குரு பகவான் 2023 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் மேஷ ராசிக்குள் நுழைந்தார்.

12 ஆண்டுகளுக்கு பின் மேஷ ராசிக்குள் நுழைந்த குரு பகவானால் பல ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கும். இந்நிலையில் குரு பகவான் செப்டம்பர் மாதத்தின் தொடக்கத்தில் மேஷ ராசியில் வக்ரமாகவுள்ளார். குரு வக்ரமாவதால், சில ராசிக்காரர்கள் சற்று மோசமான பலன்களைப் பெறக்கூடும்.
ராகு குரு சேர்க்கை
மேஷ ராசியில் ஏற்கனவே ராகு பயணித்து கொண்டிருக்கையில், குரு பகவான் ஏப்ரல் மாதத்தில் நுழைந்ததால், மேஷ ராசியில் குரு-ராகு சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இந்த சேர்க்கையானது மங்களகரமானதாக கருதப்படுவதில்லை. அதுவும் செப்டம்பர் மாதத்தில் குரு வக்ரமாகி ராகுவுடன் பயணிப்பதால், சில ராசிக்காரர்கள் நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 6 ஆவது வீட்டில் குரு வக்ரமாகிறார். இதனால் இக்காலத்தில் வாழ்க்கையில் புதிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எதிர்பாராத செலவுகளை சந்திக்க நேரிடும். இக்காலத்தில் கடன்களை வாங்க வேண்டிய சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆரோக்கிய பிரச்சனைகளால் அவதிப்படக்கூடும். முக்கியமாக வருமானம் குறையக்கூடும்.
கன்னி
கன்னி ராசியின் 8 ஆவது வீட்டில் குரு வக்ரமாகிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் ஆரோக்கிய பிரச்சனையால் கஷ்டப்பட வேண்டியிருக்கும். திருமணமானவர்கள் தாம்பத்ய வாழ்க்கையில் பிரச்சனைகள் அதிகரிக்கும்.
குடும்ப சூழல் சண்டை சச்சரவுகளுடன் அமைதியிழந்து இருக்கும். இக்காலத்தில் எந்த ஒரு புதிய வேலைகளையும் தொடங்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. அதேப் போல் எந்த ஒரு முதலீடுகளையும் தவிர்க்க வேண்டும். சொத்துக்களை வாங்கும் எண்ணம் இருந்தால், அதை தள்ளிப் போடுங்கள்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 12 ஆவது வீட்டில் குரு வக்ரமாகிறார். இதனால் இந்த காலகட்டத்தில் இந்த ராசிக்காரர்களின் செலவுகள் அளவுக்கு அதிகமாக இருக்கும். உங்கள் பட்ஜெட்டை மீறி செலவுகளை சந்திக்க நேரிடும். பண விஷயத்தில் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
குடும்ப விஷயத்தில் எந்த ஒரு தவறான முடிவையும் எடுத்துவிடாதீர்கள். இல்லாவிட்டால் பெரிய இழப்பை சந்திப்பீர்கள். ஆரோக்கியம் பாதிக்கப்படும். மிகுந்த மன அழுத்தத்துடன் இருக்க நேரிடும். திருமணமான தம்பதிகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications