Latest Updates
-
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்...
12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் வக்ரமாகும் குரு: இந்த 5 ராசிக்காரங்க ரொம்பவும் எச்சரிக்கையா இருக்கணும்..
Jupiter Retrograde In Aries On 04 September 2023: ஜோதிடத்தில் குரு பகவான் மிகவும் முக்கியமான மற்றும் மங்களகரமான கிரகமாக கருதப்படுகிறது. நவகிரகங்களில் வியாழன் குரு பகவானாக கருதப்படுகிறது. குரு பகவான் மகிழ்ச்சி, நல்ல அதிர்ஷ்டம், புகழ், செல்வாக்கு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார்.
குரு பகவான் ராசியை மாற்றுவதற்கு ஒரு ஆண்டு காலம் ஆகும். இந்த குரு தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாவார். தற்போது குரு பகவான் செவ்வாய் ஆளும் மேஷ ராசியில் பயணித்து வருகிறார். 12 ஆண்டுகளுக்கு பின் 2023 ஏப்ரல் மாதத்தில் குரு பகவான் மேஷ ராசியில் நுழைந்தார்.

இந்த குரு பகவான் 2023 செப்டம்பர் 04 ஆம் தேதி மேஷ ராசியில் வக்ரமாகவுள்ளார். மங்களகரமான கிரகம் வக்ரமானால், கெடுபலன்களை அதிகம் வழங்காவிட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு குரு வக்ரமாவது கெடுபலன்களை வழங்கும். இப்போது மேஷ ராசியில் வக்ரமாகும் குருவால் எந்த ராசிக்காரர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 9 மற்றும் 12 ஆம் வீட்டின் அதிபதியான குரு பகவான் முதல் வீட்டில் வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த வக்ர காலத்தில் இந்த ராசிக்காரர்கள் எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியாமல் அவதிப்படக்கூடும். தந்தையுடனான உறவில் விரிசல் ஏற்படலாம். செலவுகள் அளவுக்கு அதிகமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் மோசமடையும். இதனால் நிறைய மருத்துவ செலவுகளையும் சந்திக்க நேரிடும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 8 மற்றும் 11 ஆம் வீட்டின் அதிபதியான குரு பகவான் 12 ஆவது வீட்டில் வக்ரமாகவுள்ளார். இதனால் இக்காலத்தில் ரிஷப ராசியைச் சேர்ந்த பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஆண்கள் கல்லீரல் மற்றும் செரிமானம் தொடர்பான பிரச்சனைகளால் அவதிப்படக்கூடும். குடும்ப வாழ்க்கையில் சில பிரச்சனைகளை சந்திக்கலாம். குடும்ப சூழல் அமைதியிழந்து இருக்கும். தம்பதிகளுக்கு இடையே சண்டைகள் வரலாம்.
கடகம்
கடக ராசியின் 6 மற்றும் 9 ஆம் வீட்டின் அதிபதியான குரு 10 ஆவது வீட்டில் வக்ரமாகவுள்ளார். இதனால் கடக ராசிக்காரர்கள் இந்த வக்ர காலத்தில் தங்கள் எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்களை வீழ்த்த எதிரிகள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அந்த சந்தர்ப்பத்தை கொடுத்துவிட வேண்டாம். வேலையை மாற்ற நினைத்தால், சற்று காத்திருப்பது நல்லது. இடமாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் பிரச்சனைகளை சந்திக்கலாம்.
சிம்மம்
சிம்ம ராசியின் 5 மற்றும் 8 ஆவது வீட்டின் அதிபதியான குரு பகவான் 9 ஆவது வீட்டில் வக்ரமாகவுள்ளார். இதனால் இக்காலத்தில் சில பொறுப்புகள் அதிகரிக்கலாம். ஆரோக்கிய பிரச்சனைகள் அதிகம் தொந்தரவு செய்யக்கூடும். காதலிப்பவர்கள் சில பிரச்சனைகளை சந்திக்கலாம். அந்த பிரச்சனையை சுமூகமாக பேசி தீர்க்க முயற்சிக்க வேண்டும். இல்லாவிட்டால் உறவு முறிந்துவிடும். நிறைய பண பிரச்சனைகளை சந்திக்கக்கூடும் என்பதால், செலவுகளை கட்டுப்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.
தனுசு
தனுசு ராசியின் முதல் மற்றும் 4 ஆவது வீட்டின் அதிபதியான குரு பகவான் 4 ஆவது வீட்டில் வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் கல்லீரல் பிரச்சனை, சர்க்கரை நோய் போன்ற பிரச்சனையால் அதிகம் அவதிப்படலாம். பெற்றோரின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும். தனிப்பட்ட வாழ்க்கையில் நீங்கள் செய்யும் சிறு தவறுகள், உங்கள் உறவுகளில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி, உறவை முறிக்கும் வரை கொண்டு செல்லும் என்பதால், கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











