Latest Updates
-
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்...
குரு வக்ரமாவதால் இன்று முதல் அடுத்த 3 மாதம் இந்த ராசிக்காரங்க ரொம்ப கவனமா இருக்கணும்...
Jupiter Retrograde In Aries On 04 September 2023: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்களில் மங்களகரமான கிரகமாக கருதப்படும் குரு பகவான் 12 ஆண்டுகளுக்கு பின் மேஷ ராசியில் நுழைந்து பயணித்து வருகிறார். இந்த குரு பகவான் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாவார்.
இவர் ராசியை மாற்றுவதற்கு 1 ஆண்டு காலம் ஆகும். குரு பகவான் விரிவாக்கம், செழிப்பு, மிகுதி, மகிழ்ச்சி ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். மேஷ ராசியில் பயணித்து வரும் குரு பகவான் செப்டம்பர் 04 ஆம் தேதி, அதாவது இன்று மேஷ ராசியில் வக்ரமாகிறார்.

இந்த வக்ர நிலையில் குரு பகவான் டிசம்பர் 31 ஆம் தேதி வரை இருந்து, பின் வக்ர நிவர்த்தி அடைகிறார். குரு பகவான் நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பெரிய மாற்றங்கள் ஏற்படுத்தும். இப்போது மேஷ ராசியில் வக்ரமாகும் குரு பகவானால் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பது குறித்து காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் முதல் வீட்டில் குரு பகவான் வக்ரமாகியுள்ளார். இதனால் இக்காலத்தில் அதிகம் உணர்ச்சிவசப்படுவதையோ, மிகுந்த தைரியத்துடன் எல்லை மீறி நடந்து கொள்வதையும் தவிர்க்க வேண்டும். இக்காலத்தில் அதிக போட்டித்தன்மை கொண்டவர்களாக இருப்பதால், தனிப்பட்ட வாழ்க்கையில் நல்ல வளர்ச்சியைக் காணக்கூடும். உங்களின் கோபமான நடத்த உங்களுக்கு எதிரான பலனைத் தரும் என்பதால், அமைதியையும் நிதானத்தையும் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்படுகிறது.
ரிஷபம்
ரிஷப ராசியின் 12 ஆவது வீட்டில் குரு பகவான் வக்ரமாகியுள்ளார். இதனால் இக்காலத்தில் உங்களின் தற்போதைய நடத்தை உங்கள் இலக்குகளை அடைய உதவுகிறதா என்பதை ஆராய வேண்டும். கடந்த சில வாரங்களாக மிகுந்த டென்சனுடன் இருந்திருக்கலாம். ஆனால் இனிமேல் அந்த டென்சன் நீங்கி சற்று ரிலாக்ஸாக இருப்பீர். நீங்கள் சந்திக்கும் தோல்விகளை மனதளவில் எடுத்து டென்சனாகாமல், சாதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்காக நேரம் ஒதுக்குங்கள். புதிய உறவுகளை உருவாக்குங்கள்.
மிதுனம்
மிதுன ராசியின் 11 ஆவது வீட்டில் குரு பகவான் வக்ரமாகியுள்ளார். இதனால் வணிகர்கள் இக்காலத்தில் சிரமத்தை சந்திப்பார்கள். இக்காலத்தில் உங்களின் திறந்த மனப்பான்மை மற்றும் நெகிழ்வுத்தன்மை உங்களின் சவால்களை திறம்பட கையாள உதவும். உங்கள் இலக்குகளை தொடர்வதில் தடையை ஏற்படுத்தும் விஷயங்களில் இருந்து சற்று விலகி இருக்க முயற்சி செய்யுங்கள்.
கடகம்
கடக ராசியின் 10 ஆவது வீட்டில் குரு பகவான் வக்ரமாகியுள்ளார். இதனால் இக்காலத்தில் தொழில் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படலாம். வேலையை மாற்ற நினைத்தால், சற்று யோசித்து முடிவெடுக்க அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால், தொழில் வாழ்க்கையில் சிரமங்களை சந்திக்க நேரிடும். தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் மற்றும் பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது.
சிம்மம்
சிம்ம ராசியின் 9 ஆவது வீட்டில் குரு பகவான் வக்ரமாகியுள்ளார். இதனால் இக்காலத்தில் ஆரோக்கிய பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும். திருமணமானவரகள் தங்கள் துணைக்கு உதவியாகவும், பொறுப்பானவர்களாகவும் இல்லாவிட்டால், இக்காலத்தில் பிரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. காதலித்துக் கொண்டிருப்பவர்கள், தங்கள் உறவை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல முயற்சிக்கலாம்.
கன்னி
கன்னி ராசியின் 8 ஆவது வீட்டில் குரு பகவான் வக்ரமாகியுள்ளார். இதனால் இக்காலமானது கன்னி ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்காது. திருமண வாழ்க்கை, குடும்பம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் கவனத்தை செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் அது பல பிரச்சனைகளை சந்திக்க வைத்துவிடும். திருமணம் செய்து கொள்ள நினைப்பவர்கள், திருமணம் செய்வதன் முன் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும். திருமணமானவராக இருந்தால், பிரச்சனைகளை பேசி தீர்த்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். தாயாரின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
துலாம்
துலாம் ராசியின் 7 ஆவது வீட்டில் குரு பகவான் வக்ரமாகியுள்ளார். இதனால் இக்காலத்தில் திருமண வாழ்க்கையில் நிறைய மோதல்கள் மற்றும் கருத்து வேறுபாடுகள் இருக்கும். விவாகரத்தைப் பெற முயற்சித்துக் கொண்டிருப்பவர்களுக்கு இக்காலம் கடினமாக இருக்கும். சில பிரச்சனைகளால் தைரியமும், நம்பிக்கையும் குறையும். உடன் பிறந்தோருடனான உறவு பாதிக்கப்படும். ஆனால் அதை சமாளிக்க முயற்சிக்க வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 6 ஆவது வீட்டில் குரு பகவான் வக்ரமாகியுள்ளார். இதனால் இக்காலத்தில் வாழ்க்கையில் பல சர்ச்சைகள் மற்றும் வாதங்கள் தோன்றும். குடும்பத்தில் பிரச்சனைகள் வரலாம். தம்பதிகளின் காதல் உறவு சிரமங்களை சந்திக்க நேரிடும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளால் சிரமங்களை சந்திக்க நேரிடும். மாணவர்கள் உயர்கல்வி தொடர்பான முடிவுகளைப் பரிசீலிக்க பரிந்துரைக்கப்படுகிறது.
தனுசு
தனுசு ராசியின் 5 ஆவது வீட்டில் குரு பகவான் வக்ரமாகியுள்ளார். இதனால் ஆரோக்கிய விஷயத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். உங்களின் பொறுப்புக்களை புரிந்து நடந்து கொள்ள வேண்டும். தாயுடன் வாக்குவாதங்கள் மற்றும் மோதல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். அவர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால், அவர்களின் ஆரோக்கியத்தில் கவனத்தை செலுத்த வேண்டும்.
மகரம்
மகர ராசியின் 4 ஆவது வீட்டில் குரு பகவான் வக்ரமாகியுள்ளார். இதனால் இக்காலத்தில் உங்கள் உடன்பிறந்தோருடனான உறவில் சிக்கல்களை சந்திக்கலாம். இருப்பினும், அவர்கள் மீதான உள்ள பொறுப்புகளை உணர்ந்து, அவர்கள் சந்திக்கும் சிக்கல்களை தீர்க்க முயற்சிக்க வேண்டும். புதிய வீடு வாங்கவோ அல்லது கட்டவோ நினைத்தால், அதை மறுபரிசீலனை செய்து, அவர்களுக்கு அது சரியாக இருக்குமா என்பதை தீர்மானிக்க வேண்டும்.
கும்பம்
கும்ப ராசியின் 3 ஆவது வீட்டில் குரு பகவான் வக்ரமாகியுள்ளார். இதனால் இக்காலத்தில் நிதி நிலைமை மோசமாக பாதிக்கப்படும். நிதி விஷயங்களில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. இருப்பினும், இக்காலத்தில் முதலீடுகளில் இருந்து நல்ல வெற்றியைக் காண்பீர்கள். குடும்பத்தினரின் உணர்வுகளை மதிக்காமல், வெறும் வேலையில் மட்டும் இதுவரை கவனத்தை செலுத்திக் கொண்டிருந்தால், இக்காலத்தில் எது உண்மையில் அவசியம் என்பதை குரு பகவான் உணர்த்துவார்.
மீனம்
மீன ராசியின் 2 ஆவது வீட்டில் குரு பகவான் வக்ரமாகியுள்ளார். இதனால் இக்காலத்தில் ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது. ஆரோக்கிய விஷயத்தில் கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும். தொழில் வாழ்க்கையில் சில மாற்றங்கள் ஏற்படலாம். ஒருவேளை நீங்கள் வேலையை மாற்ற நினைத்துக் கொண்டிருந்தால், அதை நன்கு சிந்தித்து எடுக்க வேண்டும். முக்கியமாக நிதி விஷயத்தில் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











