Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
குரு வக்ரமாவதால் உருவாகும் கேந்திர திரிகோண ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப் போகுது...
Jupiter Retrograde In Aries Make Kendra Trikona Rajyoga: ஜோதிடத்தில் மிகவும் மங்களகரமான கிரகமாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் ஆண்டிற்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். அந்த வகையில் குரு பகவான் 2023 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் மேஷ ராசிக்குள் நுழைந்தார்.
ஒருவரது வாழ்வில் நடக்கும் நல்ல காரியங்களுக்கும், செல்வ செழிப்பான வாழ்க்கைக்கும் குரு பகவான் நல்ல நிலையில் இருக்க வேண்டும்.இந்நிலையில் குரு பகவான் மேஷ ராசியில் வக்ரமாகவுள்ளார். இப்படி குரு வக்ரமாகும் போது கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகவுள்ளது.

இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். இருப்பினும் இந்த யோகத்தால் 3 ராசிக்காரர்கள் திடீர் பண வரவையும், நல்ல முன்னேற்றத்தையும் காணவுள்ளார்கள். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம். உங்கள் ராசியும் இதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
மேஷம்
மேஷ ராசியின் முதல் வீட்டில் குரு வக்ரமாகிறார். இதனால் இக்காலத்தில் நிறைய பணத்தை சேமிக்க முடியும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும். இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் நடத்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வும், செல்வாக்கும் அதிகரிக்கும். இதுவரை ஏதேனும் நோயால் அவதிப்பட்டு வந்தால், அதிலிருந்து விடுபடுவீர்கள். வேலை தொடர்பான பயணங்கள் சிறப்பான பலனைத் தரும்.
கடகம்
கடக ராசியின் 10 ஆவது வீட்டில் குரு வக்ரமாகிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். நீதிமன்ற வழக்குகள் நடைபெற்றால் அதில் நல்ல வெற்றி கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். நீண்ட கால விருப்பங்கள் நிறைவேறும். இக்காலத்தில் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
தனுசு
தனுசு ராசியின் 5 ஆவது வீட்டில் குரு வக்ரமாகிறார். இதனால் இக்காலத்தில் வாகனம் மற்றும் சொத்துக்களை வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். குழந்தைகளால் சில நற்செய்திகளைப் பெறுவீர்கள். காதல் வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் குறையும். பணிபுரிபவர்கள் இக்காலத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களைப் பெறுவார்கள். திடீர் பண ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. சமூகத்தில் நல்ல செல்வாக்குமிக்கவர்களுடனான நட்பு கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications