Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
12 ஆண்டுகளுக்கு பின் மேஷ ராசியில் வக்ரமாகும் குருவால் இந்த 3 ராசிகளின் கையில் பணம் அதிகம் சேரப்போகுது...
Jupiter Retrograde In Aries 2023: வேத ஜோதிடத்தில் குரு பகவான் மிகவும் மங்களகரமான கிரகமாக கருதப்படுகிறார். குருவில் அருள் கிடைத்தால் வாழ்க்கை செல்வ செழிப்போடு சிறப்பாக இருக்கும். ஏனெனில் குரு பகவான் செல்வம், ஆன்மீகம், செழிப்பு, குழந்தைகள் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார்.
மேலும் குரு வருடத்திற்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். இதனால் குருவின் இயக்கத்தில் ஏற்படும் சிறு மாற்றங்களும் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் தற்போது குரு பகவான் செவ்வாய் ஆளும் மேஷ ராசியில் பயணித்து வருகிறார். 12 ஆண்டுகளுக்கு பின் மேஷ ராசியில் நுழைந்துள்ள குரு பகவான் செப்டம்பர் மாதத்தில் வக்ரமாகவுள்ளார். இப்படி வக்ரமாவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
குறிப்பாக குரு வக்ரமாவதால் 3 ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறப் போகிறார்கள். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம். உங்கள் ராசியும் இதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
தனுசு
தனுசு ராசியின் 5 ஆவது வீட்டில் குரு பகவான் வக்ரமாகிறார். இதனால் இக்காலத்தில் குழந்தைகளால் சில நல்ல செய்திகளைப் பெறலாம். இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் குழந்தைகள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வாய்ப்புள்ளது. தனுசு ராசியின் அதிபதி குரு என்பதால், சொத்து வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். அனைத்து விதமான இன்பங்களையும் குரு பகவான் அனுபவிக்க வைப்பார். காதலித்து வந்தால், அதில் வெற்றி கிடைக்கும். மாணவர்கள் இக்காலத்தில் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.
மேஷம்
மேஷ ராசியின் முதல் வீட்டில் குரு பகவான் வக்ரமாகிறார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். தொண்டுகளில் ஆர்வம் அதிகரிக்கும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
இக்காலத்தில் ஆளுமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
கடகம்
கடக ராசியின் 10 ஆவது வீட்டில் குரு பகவான் வக்ரமாகிறார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத பல நற்பலன்களைப் பெறுவார்கள். நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டிருந்தால், எதிர்பார்த்த வேலை கிடைக்கும்.
வியாபாரிகளுக்கு தங்கள் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரக்கூடிய புதிய ஒப்பந்தம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. இக்காலத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். நீண்ட நாட்களாக நடந்து கொண்டிருக்கும் நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்புகள் உங்களுக்கு சாதகமாக வரலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications