Latest Updates
-
இந்தியர்களே நுழைய முடியாத இந்தியாவிலுள்ள இடங்கள் - இதில் 3 இடங்கள் தமிழ்நாட்டில்தான் இருக்காம் தெரியுமா? -
சூரியன்-சந்திரனால் உருவாகும் வியாதிபாத யோகத்தால் ஜூலை மாதம் பணக்கஷ்டத்தில் சிக்கப்போகும் 4 ராசிகள் -
உருளைக்கிழங்கு இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் பொடிமாஸ் பண்ணுங்க - டேஸ்ட் டக்கரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி பெண்களின் கழுத்தை பார்த்தே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று சொல்லிரலாமாம் - கவனிச்சு பாருங்க -
வரகரிசி மசாலா தோசை - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
இன்றைய ராசிபலன் 25 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு குழப்பமான நாளாக இருக்குமாம் -
கஜலட்சுமி யோகம் கடக ராசியில் இருப்பதால் கோடீஸ்வர யோகாக்கத்தால் பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வேர்க்கடலையும், கொத்தமல்லியும் இருந்தா இந்த மாதிரி சுருக்குனு சட்னி அரைங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
July 2026: ஜூலை மாதத்தின் முக்கியமான நாட்கள் மற்றும் விரத தினங்கள் என்னென்ன தெரியுமா? -
2 பிரட்டும், அரை கப் கடலை மாவும் இருந்தா டக்குனு இந்த டிபனை பண்ணுங்க - டேஸ்ட்டா, ஆரோக்கியமா இருக்கும்
குருவின் அருளால் 2024-க்கு முன் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு.. உங்க ராசி என்ன?
Jupiter Retrograde 2023: ஜோதிடத்தில் கிரகங்களின் இயக்கங்களைக் கொண்டு மனித வாழ்க்கையில் ஏற்படும் நல்லது, கெட்டது கணித்து கூறப்படுகிறது. நவகிரகங்களில் சனி, குரு ஆகிய கிரகங்களின் இயக்கங்கள் ஒருவரது வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
அதில் 2023 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் குரு பகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்குள் நுழைந்தார். மேஷ ராசியில் நுழைந்த பின், செப்டம்பர் மாதம் குரு பகவான் வக்ரமாகி பயணிக்கத் தொடங்கினார்.

இந்த வக்ர நிலையில் குரு பகவான் டிசம்பர் 31 ஆம் தேதி வரை இருந்து, பின் வக்ர நிவர்த்தி அடைவார். கிரகங்கள் வக்ர நிலையில் சற்று தாமதமாகவே நற்பலன்களை வழங்கும். சொல்லப்போனால் கிரகங்கள் வக்ர நிலையில் பலவீனமாக இருக்கும்.
ஆனால் குரு பகவான் வக்ர நிலையில் இருப்பதால், 2024 ஆம் ஆண்டில் நுழைவதற்குள் சில ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்புள்ளது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் முதல் வீட்டில் குரு பகவான் வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் குரு பகவானின் அருளால் பணக்காரராகும் வாய்ப்புள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத அளவில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.
முதலீடு செய்தால், அதில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை சிறப்பாக பூர்த்தி செய்வீர்கள். உங்களின் அனைத்து வேலைகளும் வெற்றிகரமாக நடக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசியின் 7 ஆவது வீட்டில் குரு வக்ரமாகவுள்ளார். இதனால் டிசம்பர் வரையிலான காலகட்டம் இந்த ராசிக்காரர்களுக்கு ஒரு வரப்பிரசாதமான காலம் என்றே கூறலாம். ஏனெனில் குரு பகவானின் பரிபூர்ண அருளால் இந்த ராசிக்காரர்கள் நல்ல பண வரவைப் பெறக்கூடும். அனைத்து துறைகளிலும் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். மனநிலை மகிழ்ச்சியாக இருக்கும். வீடு மற்றும் குடும்ப சூழல் மகிழ்ச்சியாக இருக்கும்.
மீனம்
மீன ராசியின் அதிபதியான குரு பகவான் 2 ஆவது வீட்டில் வக்ரமாகியுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை டிசம்பருக்குள் இருமடங்கு அதகரிக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள் நல்ல சம்பளத்துடன் வேலையைப் பெறுவார்கள். வெளிநாடு செல்ல வேண்டுமென்ற ஆசை நிறைவேறும். ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். தன்னம்பிக்கையுடன் உங்கள் வேலைகளை செய்தால், வெற்றிகளைப் பெறுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications