Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பன்னீர் பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கும் -
Krishna Jayanthi 2026: இன்று உங்க ராசிப்படி கிருஷ்ணருக்கு இத வாங்கி கொடுங்க.. உங்க கனவுகள் சீக்கிரம் நனவாகும்! -
1/2 கப் கொள்ளு இருந்தா.. இப்படி ஒருவாட்டி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 04 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம் -
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம்
குரு சண்டாள யோகம்: ஏப்ரல் 22 முதல் அடுத்த 6 மாதம் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
Jupiter, Rahu Make Guru Chandal Yoga 2023: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றும். அப்படி ராசியை மாற்றும் போது சில சமயங்களில் கிரகங்களின் சேர்க்கைகள் நிகழும். இந்த கிரக சேர்க்கையால் சுப அல்லது அசுப யோகங்கள் உருவாகும். அந்த வகையில் 2023 ஏப்ரல் 22 ஆம் தேதி குரு பெயர்ச்சி நடக்கவுள்ளது. இந்த குரு பெயர்ச்சியின் போது குரு பகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு செல்கிறார்.
ஏற்கனவே மேஷ ராசியில் ராகு பயணித்து வருகிறார். இதனால் குரு பெயர்ச்சிக்கு பின் மேஷ ராசியில் குரு, ராகு சேர்க்கையால் குரு சண்டாள யோகம் உருவாகவுள்ளது. இந்த யோகமானது அக்டோபர் மாதம் வரை இருப்பதால், இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். ஆனால் சில ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் அக்டோபர் வரை பல கஷ்டங்களை, பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் முதல் வீட்டில் குரு சண்டாள யோகம் உருவாகிறது. இதனால் திருமணமானவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதங்களில் ஈடுபடலாம். இக்காலத்தில் உங்கள் மீதான நம்பிக்கை சற்று குறையக்கூடும். கூட்டு தொழில் தொடங்க நினைத்தால், அதற்கு இக்காலம் சாதகமாக இல்லை. வியாபாரிகள் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். எதில் முதலீடு செய்ய நினைத்தாலும், புத்திசாலித்தனமாக முடிவெடுக்க அறிவுறுத்தப்படுகிறது.
தனுசு
தனுசு ராசியின் 5 ஆவது வீட்டில் குரு சண்டாள யோகம் உருவாகவுள்ளது. இதனால் தனுசு ராசிக்காரர்கள் இந்த யோக காலத்தில் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். காதலிப்பவர்கள் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
வியாபாரம் செய்பவர்கள் இந்த யோக காலத்தில் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். மேலும் செலவுகள் கட்டுப்பாடின்றி அதிகரிக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் உடன் பணிபுரிபவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் செய்யும் வேலைகயில் பிரச்சனையை சந்திக்க நேரிடும். முக்கியமாக இக்காலகட்டத்தில் சற்று மன குழப்பத்துடனேயே இருக்க நேரிடும்.
கன்னி
கன்னி ராசியின் 8 ஆவது வீட்டில் குரு சண்டாள யோகம் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் இக்காலத்தில் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கலாம். வருமானத்தில் பிரச்சனையை சந்திக்க நேரிடும். உங்களின் செலவுகள் அதிகமாக இருக்கும். பண பிரச்சனையால் அவதிப்படக்கூடும். குடும்ப உறுப்பினர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட வாய்ப்புள்ளது. வயதானவர்கள் இக்காலத்தில் ஆரோக்கியமாக கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
மிதுனம்
மிதுன ராசியின் 11 ஆவது வீட்டில் குரு சண்டாள யோகம் உருவாகிறது. இதனால் அடுத்த ஆறு மாதம் மிதுன ராசிக்காரர்களின் வருமானம் குறையும். இக்காலத்தில் எதில் முதலீடு செய்ய நினைத்தாலும், புத்திசாலித்தனமாக முதலீடு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் இழப்புக்களை சந்திக்க நேரிடும். வியாபாரம் செய்பவர்கள் மற்றும் பணிபுரிபவர்கள், இக்காலத்தில் சிக்கல்களை சந்திக்க நேரிடும். எந்த ஒரு முடிவையும் அவசரப்பட்டு எடுப்பத்தை தவிர்க்க வேண்டும். மொத்தத்தில் இந்த ஆறு மாத காலம் பொறுமையை கடைப்பிடிக்க அறிவுறுத்தப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications


