Latest Updates
-
உங்கள் பிறந்த தேதியில் ஒரே எண்கள் அடிக்கடி வருதா? அதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
பேரரசுகளின் கல்லறை என்று அழைக்கப்படும் ஆபத்தான நாடு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்! -
4 முட்டை இருந்தா இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்குழம்பு செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இண்டர்நெட்டை கண்டுபிடித்தது யார்? இந்தியாவிற்கு இண்டர்நெட் எந்த வருடம் வந்தது தெரியுமா? -
அக்டோபரில் சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
ரவா குழிப்பணியாரமும்.. தேங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டங்கள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா?
10 ஆண்டுகளுக்கு பின் கிருத்திகை நட்சத்திரத்திற்கு செல்லும் குரு: அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிக்காரர்கள்!
Jupiter Nakshatra Transit 2024: வேத ஜோதிடத்தில் தேவர்களின் குருவான குரு பகவான் ஒரு ராசியில் சுமார் 1 ஆண்டு காலம் இருப்பார். அதே வேளையில் குரு பகவான் அவ்வப்போது நட்சத்திரங்களையும் மாற்றுவார். இப்படி குருவின் நிலைகளில் ஏற்படும் சிறு மாற்றங்களும், மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் 2024 ஆம் ஆண்டின் குரு பெயர்ச்சி மே 01 ஆம் தேதி நிகழவுள்ளது. அதற்கு முன் குருவின் நட்சத்திர பெயர்ச்சி நிகழ்ந்துள்ளது. இந்த நட்சத்திர பெயர்ச்சியானது ஏப்ரல் 17 ஆம் தேதி நிகழ்ந்தது. இந்த பெயர்ச்சியின் போது குரு பகவான் கிருத்திகை நட்சத்திரத்திற்கு சென்றுள்ளார்.

இந்த நட்சத்திரத்திற்கு சுமார் 10 ஆண்டுகளுக்கு பின் குரு சென்றுள்ளார். இதனால் சில ராசிக்காரர்களுக்கு இந்த நட்சத்திர பெயர்ச்சியானது அதிர்ஷ்டமாக இருக்கும். இப்போது குரு நட்சத்திர பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு குரு நட்சத்திர பெயர்ச்சியால் வருமானத்தில் எதிர்பாராத அளவில் அதிகரிப்பு இருக்கும். சிலருக்கு புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு இந்த குரு நட்சத்திர பெயர்ச்சியால் நல்ல வரன் தேடி வரும். ஏற்கனவே பல இடங்களில் முதலீடுகளை செய்திருந்தால், இனிமேலே அதிலிருந்து நல்ல லாபத்தைப் பெறுவீர்கள்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு குரு நட்சத்திர பெயர்ச்சியால் தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். வருமானத்தில் நல்ல அதிகரிப்பு ஏற்படும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். அரசு வேலை செய்து வருபவர்களுக்கு இந்த குரு நட்சத்திர பெயர்ச்சி சிறப்பாக இருக்கும். திருமணமான தம்பதிகள் குழந்தை பாக்கியத்தைப் பெறலாம். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உளளன. கூட்டு வணிகம் செய்பவர்கள் எதிர்பாராத லாபத்தைப் பெறுவார்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு குரு நட்சத்திர பெயர்ச்சியால் வரவிருக்கும் நாட்கள் அதிர்ஷ்டமாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைப்பதால் வெற்றிகள் குவியும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வியாபாரிகளுக்கு திடீரென்று பண வரவு அதிகரிக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். அரசியலில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
