Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
தீபாவளி நாளில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களைத் தேடி பணம் வரப்போகுது..
Jupiter Moon Make Gajkesari Rajyoga On Diwali 2023: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றி சுப மற்றும் அசுப யோகங்களை உருவாக்கும். அப்படி உருவாகும் யோகங்கள் மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் குரு மற்றும் சந்திரனின் சேர்க்கையால் உருவாகும் யோகம் தான் கஜகேசரி ராஜயோகம். இந்த ராஜயோகம் ஒரு சுப யோகம். இப்படிப்பட்ட கஜகேசரி ராஜயோகமானது தீபாவளி நாளான நவம்பர் 12 ஆம் தேதி நிகழவுள்ளது.

இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு இந்த ராஜயோகத்தால் நல்ல பண வரவும், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமும் ஏற்பட வாய்ப்புள்ளது. இப்போது தீபாவளி நாளில் உருவாகும் கஜகேசரி ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
தனுசு
தனுசு ராசியின் 4 ஆவது வீட்டில் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் புதிய வாகனம் மற்றும் சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புக்களைப் பெறலாம். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் நல்ல வெற்றியைக் காண்பார்கள். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் தங்கள் வேலையை வெற்றிகரமாக முடித்து, உயர் அதிகாரிகளிடம் பாராட்டைப் பெறுவார்கள். ரியல் எஸ்டேட்டில் வேலை செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டிருந்தால், தீபாவளிக்கு பின் நல்ல வேலை கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் 11 ஆவது வீட்டில் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கான சில நல்ல வாய்ப்புக்களைப் பெறலாம். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல வெற்றியைப் பெறக்கூடும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் சில புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். தந்தையின் முழு ஆதரவு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து நல்ல ஆதரவு கிடைக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 12 ஆவது வீட்டில் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காலரர்களுக்கு வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படக்கூடும். குடும்ப வாழ்க்கை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். நிதி நிலையில் உயர்வு ஏற்படும். நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். ஒன்றிற்கு மேற்பட்ட ஆதாரங்களில் இருந்து பணத்தை சம்பாதிப்பீர்கள். குழந்தைகளால் சில நல்ல செய்திகளைப் பெறக்கூடும். பங்குச் சந்தை, லாட்டரி போன்றவற்றில் முதலீடு செய்தால், நல்ல லாபத்தைப் பெற வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications